சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வேண்டாம் ஹைட்ரோ கார்பன்.. காவிரி டெல்டா பாலைவனம் ஆவதை தடுத்து நிறுத்துங்க.. ஸ்டாலின்

Google Oneindia Tamil News

சென்னை: காவிரி டெல்டா மண்டலம் பாலைவனம் ஆவதை தடுக்க, ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்துக்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும் என திமுக தலைவர் முக ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக ஸ்டாலின் இன்று வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "விழுப்புரம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு வேதாந்தா நிறுவனம், அமெரிக்க நிறுவனம், ஓ.என்.ஜி.சி நிறுவனம் ஆகிய நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி இருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது.

காவிரி டெல்டா பகுதியில் 6 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் ஹைட்ரோ கார்பன் ஆய்வுகளை மேற்கொள்ள மத்திய அரசு இந்த நிறுவனங்களுடன் கடந்தாண்டு அக்டோபர் மாதம் ஒப்பந்தம் செய்துள்ளது.

மே 23-ந்தேதிக்கு பிறகு மக்கள் போற்றும் மகத்தான நல்லரசு அமைப்போம்... மு.க.ஸ்டாலின் அறிக்கை மே 23-ந்தேதிக்கு பிறகு மக்கள் போற்றும் மகத்தான நல்லரசு அமைப்போம்... மு.க.ஸ்டாலின் அறிக்கை

ஓ.என்.ஜி.சி.

ஓ.என்.ஜி.சி.

வேதாந்தா நிறுவனத்திற்கு 274 கிணறுகளும், ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கு 67 கிணறுகளும் ஒதுக்கப்பட்டுள்ளது.தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கின்ற நேரத்தில் இதுபோன்ற திட்டங்களுக்கு அனுமதி கொடுப்பது தேர்தல் விதிமுறை மீறல்.

கிணறுகள் தோண்ட

கிணறுகள் தோண்ட

ஹைட்ரோ கார்பன் கிணறுகளைத் தோண்ட அனுமதி கொடுத்து விட்டு, மக்களிடம் கருத்து கேளுங்கள் என்று ஒப்புக்காக ஒரு வெற்று நிபந்தனையை, மத்திய அரசு விதித்துள்ளது.

தேர்தல் ஆணையம்

தேர்தல் ஆணையம்

மத்தியில் புதிய அரசு அமையும் வரை, ஹைட்ரோ கார்பன் கிணறுகளுக்கு வழங்கப்பட்ட அனுமதியை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும்.மத்திய அரசு நிறுத்தி வைக்காவிட்டால், இந்திய தலைமைத் தேர்தல் ஆணையமே நேரடியாகத் தலையிட்டு, அனுமதியை நிறுத்தி வைக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

டெல்டா பாலைவனம்

டெல்டா பாலைவனம்

காவிலி டெல்டா மண்டலம் பாலைவனம் ஆவதைத் தடுக்க, இது தொடர்பாக, தமிழ்நாடு அரசே, தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு உடனடியாக கடிதம் எழுதி, நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு ஸ்டாலின் தனது அறிக்கையில் வலியுறுத்தி உள்ளார்.

English summary
MK Stalin demand to tn govt, please should stop Exploration of hydrocarbons project in cauvery delta area
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X