சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பிளஸ் 2 வேதியியல் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு போனஸ் மதிப்பெண்.. தேர்வு துறை

Google Oneindia Tamil News

சென்னை: பிளஸ் 2 தேர்வில் வேதியியல் பாடத்தை தமிழ் வழியில் எழுதிய மாணவர்களுக்கு கூடுதலாக 3 மதிப்பெண் வழங்க வேண்டும் என்று தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு கடந்த மார்ச் மாதம் 2-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை நடந்து முடிந்தது. லாக்டவுன் காரணமாக விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடர்ந்து தள்ளி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சென்னை தவிர தமிழகத்தின் மற்ற அனைத்து மாவட்டங்களிலும் விடைத்தாள் திருத்தும் பணி நேற்று முதல் தொடங்கி உள்ளது. சென்னையில் திருத்தும் மையங்கள் இல்லாத நிலை மற்றும் லாக்டவுன் காரணமாக பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி; மையங்களின் எண்ணிக்கை 67-ல் இருந்து 202-ஆக அதிகரிக்கப்பட்டது.

Plus 2 exam: Bonus mark for Students who have wrote Chemistry exam in tamil nadu

மொத்தம், 44 ஆயிரம் ஆசிரியர்கள், விடைத்தாள் திருத்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அனைத்து ஆசிரியர்களுக்கும், திருத்தும் மையங்களில், முகக் கவசம் இலவசமாக வழங்கப்படுகிறது.. மையங்களில் சானிடைசர் வைக்கப்பட்டுள்ளது.. அடிக்கடி கைகளை சுத்தம் செய்ய வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இந்நிலையில் பிளஸ்-2 வேதியியல் தேர்வில் தமிழ் வழி மாணவர்களுக்கு 3 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்க விடைத்தாள் திருத்தும் ஆசிரியரகளுக்கு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும்? அரசு வைத்துள்ள திட்டம் பற்றி வெளியான தகவல் தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும்? அரசு வைத்துள்ள திட்டம் பற்றி வெளியான தகவல்

தமிழ் வினாத்தாள் கேள்வி ஒன்றில் புரதம் என்ற தமிழ் சொல்லுக்கு பதிலாக புரோட்டின் என ஆங்கிலத்தில் தவறாக மொழிபெயர்த்து வழங்கியதால் மாணவர்களுக்கு 3 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. மாணவர்கள் குறிப்பிட்ட அந்த கேள்விக்கு பதில் அளித்திருந்தாலே 3 மதிப்பெண்கள் வழங்கப்படும் என தேர்வு துறை அறிவித்துள்ளது.

English summary
Plus 2 exam: Bonus mark for Students who have wrote Chemistry exam: says school exam control Department
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X