சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

12ம் வகுப்பு தேர்வு முடிவை கவனித்தீர்களா.. இந்த ஆண்டு இதெல்லாம் மிஸ்ஸிங்!

Google Oneindia Tamil News

சென்னை: வழக்கமாக பள்ளி கல்வித்துறை வெளியிடும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளில் எந்த பாடத்தில் எத்தனை பேர் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றார்கள் என்பதை குறிப்பிடும். ஆனால் இந்த முறை அப்படி கூறவில்லை.

தமிழக மாநில பாடத்திட்டத்தின் கீழ் 12ம் வகுப்பு படித்து தேர்வு எழுதியவர்களுக்கு இன்று ரிசல்ட் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ரிசல்டில் வழக்கமாக சில விஷயங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தாழ்வு மனப்பான்மையை உருவாக்கும் என்பதால் விஷயங்கள் வெளியிடப்பட வில்லை.

Plus 2 exam result: how many students 100 percentage marks in subject wise

எத்தனை அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றன. எத்தனை தனியார் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றன என்ற விவரம் வெளியிடப்படவில்லை.

அதேபோல் எந்த பாடத்தில் எத்தனை மாணவர்கள் மற்றும் எத்தனை சதவீதம் பேர் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றார்கள். முதல் மதிப்பெண் விவரத்தையும் வெளியிடவில்லை. ஏற்கனவே பாட வாரியாக முதலிடம் பெற்றவர்கள், மற்றும் மாநில வாரியாக முதலிடம் பெற்றவர்கள் விவரம் கடந்த சில ஆண்டுகளாக வெளியிடப்படுவது கிடையாது. அந்த லிஸ்டில் இப்போது பாட வாரியாக 100 சதவீதம் மார்க் எடுத்தவர்கள் விவரம் தெரிவிக்கப்படவில்லை.

12ம் வகுப்பு தேர்வில் எந்த பாடத்தில் எத்தனை சதவீதம் பேர் தேர்ச்சி... விவரம் வெளியீடு 12ம் வகுப்பு தேர்வில் எந்த பாடத்தில் எத்தனை சதவீதம் பேர் தேர்ச்சி... விவரம் வெளியீடு

இதேபோல் மாவட்ட வாரியாக தேர்ச்சி விவரம் வெளியிடப்பட்டிருக்கிறது. ஆனால் முதல் இடம் இரண்டாம் இடம் என்று வரிசைப்படுத்தி வெளியிடவில்லை. கடந்த நான்கு ஆண்டுகளை ஒப்பிடும் போது இந்த ஆண்டு தான் மிக குறைவாக (8லட்சத்துக்கும் குறைவாக) 7.79 லட்சம் மாணவர்கள் பிளஸ் 2 தேர்வை எழுதியிருக்கிறார்கள். இதில் 7.28 லட்சம் பேர் பாஸ் ஆகி உள்ளனர். இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் சுமார் 51 ஆயிரம் மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை

English summary
Plus 2 exam result: how many students 100 percentage marks in subject wise, govt not released
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X