பிளஸ் 2 ரிசல்ட்..பெயிலானாலும் கவலை வேண்டாம் ஜூன் 19ல் துணை தேர்வு எழுதலாம்
சென்னை: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. தேர்வு எழுதிய 8.03 லட்சம் பேரில் 7.55 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். பிளஸ் 2 தேர்வில் 94.03% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தோல்வியடைந்த மாணவர்களுக்கு வரும் ஜூன் 19ஆம் தேதி துணை தேர்வு நடைபெறும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
தேர்வு முடிவுகளை வெளியிட்டு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பிளஸ் 2 பொதுத்தேர்வில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு 93.76% பேர் தேர்ச்சி பெற்ற நிலையில் இந்த ஆண்டு 94.03% பேர் தேர்ச்சி பெற்றிருப்பதாக அமைச்சர் கூறினார்.

இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகள் 4.93% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். பிளஸ் 2 பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் 97 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். திருப்பூர் மாவட்டம் 2ஆம் இடம், பெரம்பலூர் மாவட்டம் 3ஆம் இடம் பிடித்தது.
பிளஸ் 2 பொதுத்தேர்வில் அரசுப் பள்ளிகளில் 89.80% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு உதவி பெறும் பள்ளிகளில் 95.99% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தனியார் சுயநிதி பள்ளிகளில் 99.08% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இரு பாலர் பள்ளிகளில் 94.39% மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்த தேர்வு முடிவுகளும் மதிப்பெண்களும் மட்டுமே உங்களுக்கு கடைசியில்லை. பெற்றோர்களும் மாணவர்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம். தோல்வியடைந்த மாணவர்களுக்கு வரும் ஜூன் 19ஆம் தேதி துணை தேர்வு நடைபெறும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். இந்த தேர்வுகளை எழுதி உடனடியாக தேர்ச்சி பெற்று நடப்பாண்டே உயர் கல்விகளில் மாணவர்கள் சேரலாம் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications