சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சைலன்டா மாணவிகளை முந்தும் மாணவர்கள்... பிளஸ் 2 தேர்வு முடிவுகள் சொல்வதென்ன..?

Google Oneindia Tamil News

Recommended Video

    TN 12th Result 2019: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் சொல்வதென்ன..?- வீடியோ

    சென்னை: தமிழகத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ள பிளஸ் 2 பொதுத்தேர்வில் 91.3 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்தாண்டு தேர்ச்சி சதவீதத்தை விட 0.2 சதவீதமே கூடுதல் ஆகும்.

    கடந்த மார்ச் மாதம் தமிழகம் மற்றும் புதுவையில் 8.87 லட்சம் மாணவர்கள் பிளஸ் 2 தேர்வை எழுதினர். இவர்களது விடைத்தாள் திருத்தும் பணி கடந்த வாரம் முடிந்தது. இதையடுத்து, இன்று காலை 9.30 மணிக்கு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.

    Plus 2 students who have passed more than 0.2 percent last year

    பிளஸ் டூ பொதுத் தேர்வில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 91.3 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் வழக்கம் போல மாணவர்களை முந்திய மாணவிகள் 93.64 சதவீதமும், மாணவர்கள் 88.57 சதவீதமும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

    குறைந்த மாணவிகளின் தேர்ச்சி விகிதம்

    என்ன தான் வழக்கம் போல மாணவர்களை விட மாணவிகள் தேர்ச்சி சதவீதத்தில் முந்தியிருந்தாலும், கடந்த ஆண்டை ஒப்பிட்டு பார்த்தால் மாணவிகளின் தேர்ச்சி விகிதம் சற்று குறைந்துள்ளது. சென்ற ஆண்டு 94.1 சதவீத மாணவிகள் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், இந்த ஆண்டு 0.46 சதவீதம் குறைந்து 93.64 சதவீத மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    சபாஷ்.. 2404 பேர் பாஸ்.. பிளஸ் 2 தேர்வில் அசத்திய ''மாற்று'' திறனாளிகள் சபாஷ்.. 2404 பேர் பாஸ்.. பிளஸ் 2 தேர்வில் அசத்திய ''மாற்று'' திறனாளிகள்

    மாணவர்கள் தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு

    வழக்கம் போல மாணவிகளிடம் கோட்டை விட்டாலும் மாணவர்களின் தேர்ச்சி விகிதம், கடந்த ஆண்டை காட்டிலும் சற்று அதிகரித்துள்ளது ஆறுதலாக உள்ளது. சென்ற ஆண்டில் 87.7 சதவீதம் தேர்ச்சி பெற்றிருந்த மாணவர்கள், நடப்பாண்டில் 0.87 சதவீதம் அதிகரித்து 88.57 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    plus 2 exam passed ratio an increase of 0.2% over the last year's pass percentage
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X