சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இனி இப்படித்தான்.. வாஜ்பாய் - அத்வானியாக உருமாறும் மோடி - அமித் ஷா

அத்வானி தொகுதியில் பாஜக தலைவர் அமித்ஷா போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: வாஜ்பாய் - அத்வானி.. இந்த ஜோடிக்கு அடுத்து அந்த இடத்தில் உட்காரப் போகும் ஜோடிகளாக காட்சி தருகின்றனர் நரேந்திர மோடியும்- அமித் ஷாவும்.

யாருக்குப் பிடிக்கிறதோ இல்லையோ, பிரதமர் மோடி - அமித்ஷா என்ற இரு பெயருமே இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத சக்திகளாக மாறி நிற்கின்றனர்.

யாருக்குமே தெரியாத, பரவலாக அறியப்படாத கட்சிதான் ஆரம்ப கால பாஜக!. ஆனால் அதை பாமரர்கள் வரை கொண்டு சென்றதில் முக்கியப் பங்கு வாஜ்பாய்க்கு உண்டு.

டிடிவி தினகரன் பக்கா பிளான்.. தேனியில் களமிறங்குகிறார் தங்க தமிழ்ச்செல்வன்.. ஓ.பி.எஸ் மகனுக்கு செக் டிடிவி தினகரன் பக்கா பிளான்.. தேனியில் களமிறங்குகிறார் தங்க தமிழ்ச்செல்வன்.. ஓ.பி.எஸ் மகனுக்கு செக்

வாஜ்பாய் பங்கு

வாஜ்பாய் பங்கு

கிட்டத்தட்ட நூற்றாண்டு காலமாக வேரூன்றி காங்கிரஸ் கட்சி ஆல தழைத்து வளர்ந்திருந்தாலும் பாஜக என்ற கட்சியை மக்கள் முன்னிலையில் அறிமுகப்படுத்தவும், அதை முன்னிலைப்படுத்தவும் மறைந்த வாஜ்பாய் எடுத்து கொண்ட முயற்சிகள் அளப்பரியது.

நம்பிக்கை நட்சத்திரம்

நம்பிக்கை நட்சத்திரம்

அறிமுகமில்லாத ஒரு கட்சியை மக்களிடத்தில் பிரபலமானது என்றால், அதற்கு காரணம் கட்சி மட்டுமல்ல, வாஜ்பாயின் நல்ல இமேஜும்தான். அனைத்து தரப்பு கட்சியினராலும் விரும்பப்பட்ட ஒருவராக வாஜ்பாய் இருந்தாலும், அவருக்கு சிஷ்யன்போல, நம்பிக்கை தரும் நட்சத்திரம்போல, வலது கை போல செயல்பட்டவர் அத்வானி ஆவார்.

இரட்டையர்கள்

இரட்டையர்கள்

நல்ல தலைவனுக்கு நல்ல தோழன், ஆலோசகன் அவசியம். அண்ணாவுக்கு கருணாநிதி போல, வாஜ்பாய்க்கு வாய்த்தவர்தான் அத்வானி. முரளி மனோகர்ஜோஷி போன்றவர்கள் அன்றைய பாஜகவுக்கு வலிமை சேர்த்தாலும், வாஜ்பாய்-அத்வானி என்ற இரட்டையர்கள் பாஜகவை திறம்பட நடத்தி செல்ல ஆரம்பித்தனர். கட்சியை மட்டுமல்லாது, தங்களது அடுத்த தலைமுறை தலைவர்களாக பலரையும் உருவாக்கி விட்டனர். அதில் இருவர்தான் பிரதமர் மோடியும், பாஜக தலைவர் அமித்ஷாவும்.

முழுமையான ஆட்டம்

முழுமையான ஆட்டம்

இன்று வாஜ்பாய் - அத்வானி இடத்தை இவர்கள்தான் நிரப்பப் போகிறார்கள். கிட்டத்தட்ட அந்த மேடையை தற்போதைய லோக்சபா தேர்தல் உருவாக்கி விட்டது. அத்வானி தொகுதியில் அமித் ஷா போட்டியிடுவதன் மூலம் நரேந்திர மோடி - அமித் ஷாவின் முழுமையான ஆட்டம் ஆரம்பிக்கப் போவதை பாஜக கட்டியம் கூறி விட்டது.

கவர்ச்சி திட்டங்கள்

கவர்ச்சி திட்டங்கள்

பிரதமர் நேரு, இந்திரா, ராஜீவ் காந்திக்குப் பிறகு வேறு எந்த பிரதமரும் மோடி அளவுக்கு பிரபலமாகவில்லை. கவர்ச்சி திட்டங்கள், வெளிநாட்டு திட்டங்கள், வாயை பிளக்க வைக்கும் விளம்பரங்கள் முதல், நடை, உடை வரை அனைவரையுமே ஈர்த்தார் மோடி. சில நேரங்களில் வாஜ்பாயை போலவே, மோடியின் எண்ணங்கள் தொலைநோக்குப் பார்வையுடனும், மக்களின் திட்டங்களை அறிந்து செயல்பட கூடியதாகவும் இருக்கிறது. இதேபோலத்தான் அமித்ஷா. அன்று அத்வானிக்கு இருந்தே அதே நிர்வாக திறமைதான் அமித்ஷாவுக்கும் உள்ளது.

அத்வானி தொகுதி

அத்வானி தொகுதி

அதே வாரணாசியில் மோடி போட்டியிடுவது பெரிய விஷயமாக இல்லைதான். ஆனால் அத்வானி தொகுதியில் அமித்ஷா போட்டி என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. காங்கிரஸ் கட்சி வளர்ந்து வரும் நேரத்தில் மோடி திரும்பவும் போட்டியிட்டு வெல்வாரா, உண்மையிலேயே அத்வானி இடத்தில் அமருவாரா என்பது எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. மீண்டும் பாஜக வென்றால் அமித் ஷா துணைப் பிரதமராகக் கூடும் என்ற பேச்சும் அடிபடுகிறது.

வரலாறு படைக்குமா?

வரலாறு படைக்குமா?

ராகுல் காந்தியால் மோடி-அமித்ஷா அமைத்துள்ள வலுவான கூட்டணியை உடைத்து வெற்றி பெற முடியுமா என்ற சந்தேகமும் சாமான்யர்களிடம் எழுகிறது. ஏனென்றால் இன்னும் 20 வருட காலத்திற்கு இந்த மோடி-அமித்ஷா ஜோடி பாஜகவை வலுப்படுத்துவார்கள் என்றும், இந்த ஜோடியை யாராலும் அசைக்கவே முடியாது என்ற ஒரு நம்பிக்கையான பேச்சு பாஜகவினர் மத்தியில் உருவெடுத்துள்ளது. பார்ப்போம்... வாஜ்பாய் - அத்வானி போல மோடி - ஷா ஜோடி வரலாறு படைக்குமா என்பதை.

English summary
PM Modi is going to contest in Varanasi and Amit Shah in Advani's Constitution.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X