சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எஸ்.பி.பி. இழப்பால் இசையுலகம் ஏழையாகிவிட்டது... சோகத்தை பகிர்ந்த பிரதமர் மோடி..!

Google Oneindia Tamil News

சென்னை: பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவால் இசை உலகமும், கலாச்சார உலகமும் ஏழையாகிவிட்டதாக பிரதமர் மோடி உருக்கமுடன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

நீண்ட வருடமாக அனைவரது இல்லங்களிலும் ஒலித்து வந்த குரல் இன்று அடங்கிவிட்டதாக தனது சோகத்தை வெளிப்படுத்தியுள்ளார். மேலும், எஸ்.பி.பி.யை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் ஆழந்த இரங்கலை தெரிவித்திருக்கிறார்.

Pm Modi and President Ramnath govind Condolence to Spb Family

குடியரசுத் தலைவர் ராம்நாத் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், இந்திய இசை உலகம் ஒரு மெல்லிய குரலை இழந்து நிற்கிறது என்றும் ரசிகர்களால் ''பாடும் நிலா'' என வர்ணிக்கப்பட்டவர் எஸ்.பி.பி. எனவும் புகழாரம் சூட்டியிருக்கிறார். பத்ம பூஷண் உள்ளிட்ட பல தேசிய விருதுகள் பெற்று சாதனை படைத்தவரை எஸ்.பி.பி. என தனது இரங்கல் குறிப்பில் பதிவு செய்திருக்கிறார்.

ஆயிரம் நிலவே வா பாடுவதற்கு... எம்ஜிஆர் காத்திருந்த அந்த 2 மாதங்கள்... நெகிழ்ந்த எஸ்பிபி!! ஆயிரம் நிலவே வா பாடுவதற்கு... எம்ஜிஆர் காத்திருந்த அந்த 2 மாதங்கள்... நெகிழ்ந்த எஸ்பிபி!!

இதே பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பாடகர் எஸ்.பி.பி. மறைந்தார் என்ற செய்தி தமக்கு மிகுந்த வலியை தருவதாகவும் அவரை இழந்து துயர் சூழ்ந்து நிற்கும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும், ரசிகர் பெருமக்களுக்கும் தனது ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்வதாக கூறியுள்ளார். அவரது குரல் காலத்தால் அழியாத வண்ணம் நம் எல்லோர் இதயங்களிலும் ரீங்காரமிடும் என புகழாரம் சூட்டியிருக்கிறார்.

English summary
Pm Modi and President Ramnath govind Condolence to Spb Family
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X