சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒன்று தன் வழிக்கு வரணும்.. இல்லாட்டி குறுக்கேபுகுந்து வழிமறிப்பது.. எப்படி வியூகம்.. சிக்கலில் திமுக

திமுகவுக்கு எதிராக பாஜக வியூகங்களை அமைத்து வருகிறது

Google Oneindia Tamil News

சென்னை: ஒன்று தன் வழிக்கு எப்படியாவது கொண்டு வந்துவிடுவது... அல்லது வழி விடாமல் மறித்து தடுத்து குறுக்கே நிற்பது!! தமிழகத்தில் கால் ஊன்ற இந்த 2 வழிகளைதான் பாஜக கையாண்டு வருகிறது. அந்த வகையில் திமுகவை டேமேஜ் செய்வது, ரெய்டு போன்ற விஷயங்களை கையில் எடுக்க போகிறாம் பாஜக!!

"என்ன செய்வீங்களோ தெரியாது, தமிழகத்தில் தாமரையை மலர வைத்தே தீர வேண்டும்" என்று தமிழிசையிடம் அன்று அமித்ஷா சொன்னபோது இவ்வளவு சீரியஸ்தன்மையை உணர்ந்திருக்க மாட்டார்..

திராவிட ரத்தம் பாய்ந்த இந்த பூமியில் காவியை கலப்பது இந்த நிமிடம் வரை சாத்தியமில்லை என்பதையும் பாஜக தலைமை உணர்ந்தே உள்ளது. அதனால்தான், மண்ணுக்குள் புதைந்த விஷயங்கள், பழங்கால புராணங்கள், சிலைகளை தோண்டி கொண்டு வந்து வைத்து, புதுசா எதை எதையோ கிளப்பி விட்டு கொண்டிருக்கிறது.

3 சிட்டுக்குருவியை காக்க.. ஒரு கிராமமே சேர்ந்து எடுத்த முடிவு.. சிவகங்கையில் நடந்த விசித்திர சம்பவம்3 சிட்டுக்குருவியை காக்க.. ஒரு கிராமமே சேர்ந்து எடுத்த முடிவு.. சிவகங்கையில் நடந்த விசித்திர சம்பவம்

 திராவிட கட்சி

திராவிட கட்சி

இது ஒரு பக்கம் நடந்தாலும், மற்றொரு பக்கம் திராவிட கட்சிகளை வீழ்த்த பலவித அஸ்திரங்களை கையில் எடுத்து வருகிறது.. அதிமுகவை பொறுத்தவரை பாஜகவுக்கு பிரச்சனையும், எதிர்ப்பும் இல்லை என்றாலும் திமுகவின் வீழ்ச்சியை கண்டு சற்று மிரண்டு கிடப்பதாகவே தெரிகிறது.. அதனால் திமுகவை தங்கள் பக்கம் இழுத்து கொண்டால், ஓரளவு பலத்தை பெற்றுவிடலாம் என்றுகூட சில தினங்களுக்கு முன்பு கணக்கு போட்டுள்ளது.

 பாஜக தலைமை

பாஜக தலைமை

"திமுகவுடன் மோதுவதால் நமக்கு ஒன்றும் ஆக போவதில்லை என ரிப்போர்ட் சில தினங்களக்கு முன்புகூட பாஜக தலைமைக்கு சென்றதாக சொல்லப்பட்டது. இப்போது இன்னொரு தகவல் கசிந்துள்ளது.. அது திமுகவுக்கு எதிரான காய் நகர்த்தல்தான்.. இதற்கு மூல காரணமாக இருப்பவர், திமுகவில் அதிருப்தியை அறுவடை செய்த கேபி ராமலிங்கம்தான் என்கிறார்கள் ஒரு தரப்பினர்.

 முக அழகிரி

முக அழகிரி

கட்சித் தலைவரின் நிலைப்பாட்டுக்கு நேர் எதிரான நிலைப்பாட்டை அறிக்கை வாயிலாகவே தெரிவிக்கவும், அதிர்ந்து போனார் ஸ்டாலின்.. அதன்பிறகு, இதுவரை பல இயற்கை சீற்றங்களின் போது பெரிதாக களமிறங்காத மு.க.அழகிரி, இந்ததொற்று விவகாரத்தில் முதல்வரின் நிவாரண நிதிக்கு பத்து லட்சம் ரூபாயை அளிக்கவும்தான் விஷயத்தை யூகிக்க முடிந்தது.

 கேபி ராமலிங்கம்

கேபி ராமலிங்கம்

இதையடுத்து, அழகிரி, கேபி ராமலிங்கம், வீரபாண்டி ராஜா ஆகியோரை கட்சிக்குள் கொண்டுவரும் முயற்சியும் எடுக்கப்பட்டது.. இவர்களில் நிச்சயம் அழகிரி பாஜக பக்கம் தாவ வாய்ப்பில்லை என்றாலும், திமுகவுக்கு எதிரான நடவடிக்கைகளில் பெரும் அக்கறை காட்டுவார் என்று தெரிகிறது. இப்போதைக்கு பாஜகவில் ஐக்கியமானவரிடம் ஒரு புகாரை வாங்கி உள்ளதாக தெரிகிறது.. அந்த புகாரின் அடிப்படையில் முரசொலி அறக்கட்டளை உள்ளிட்டவைகளில் ரெய்டை நடத்த வேண்டும் என்ற திட்டத்தையும் யோசித்து வருகிறதாம்.

Recommended Video

    திடீரென திருக்குறளை புகழ்ந்த பிரதமர் Modi
    தேர்தல்

    தேர்தல்

    ஏற்கனவே 2ஜி அப்பீல் வழக்கை துரிதப்படுத்தவும், சாதிக்பாட்சா தற்கொலை விவகாரத்தை மீண்டும் எடுத்து விசாரிக்கவும் மேலிடம் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் கசிந்தன.. இப்போது ரெய்டு விவகாரத்தை பாஜக பிளான் செய்து வருவதாக தெரிகிறது. அதாவது, வரப்போகிற தேர்தலுக்கு முன்பு திமுவின் இமேஜை டேமேஜ் செய்து... அதன்மூலம் திமுகவின் வாக்கு வங்கியை குறைத்து விட வேண்டும் என்பதே பாஜகவின் ஒரே எண்ணமாக தெரிகிறது.. ஆனால் இதற்கும் திமுக ஏதாவது பதிலடியை தரும், அல்லது பாஜகவின் வியூகத்தை தவிடுபொடியாக்கும் என்பதே கழக உடன்பிறப்புகளின் நம்பிக்கை!

    English summary
    pm modi: bjp plan damage dmk politics
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X