சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கையில் கிளவுஸ் இல்லை.. குப்பை நிறைந்த கோவளம்.. டிராக் சூட்டில் களத்தில் குதித்த மோடி!

Google Oneindia Tamil News

Recommended Video

    Plastic Modi The Best Man To Make Bharat Swatch | வெறும் கையில் பிளாஸ்டிக் குப்பைகளை அள்ளிய மோடி

    சென்னை: பிளாக் & பிளாக் டிரஸ்ஸில் கோவளம் பீச்சில் காலங்காத்தாலேயே குப்பைகளை அள்ள ஆரம்பித்துவிட்டார் பிரதமர் மோடி!

    தூய்மை இந்தியா திட்டம் அன்று ஆரம்பித்த புதிதில், எல்லா தலைவர்களின் கையிலும் துடைப்பக்கட்டை இருந்தது. ஒவ்வொரு மாநிலங்களிலும், ஒவ்வொரு இடங்களிலும் தெருத்தெருவாக இறங்கி சுத்தப்படுத்தும் பணியில் இறங்கினர்.

    அதற்கு பிறகு தூய்மை இந்தியா திட்டத்தை மக்களில் எத்தனை பேர் பின்பற்றி வருகிறார்களோ தெரியவில்லை. தூய்மை இந்தியா பெயர் போய் டிஜிட்டல் இந்தியா பெயர் முன்னிறுத்தப்பட்டுவிட்டது.

    வேட்டி சட்டை.. தமிழ்ப்பற்று.. உலக அளவில் புகழ்பெறும் தமிழ் கலாச்சாரம்.. மோடியின் திட்டம்தான் என்ன?வேட்டி சட்டை.. தமிழ்ப்பற்று.. உலக அளவில் புகழ்பெறும் தமிழ் கலாச்சாரம்.. மோடியின் திட்டம்தான் என்ன?

    கோவளம்

    கோவளம்

    இந்நிலையில், இப்போது திரும்பவும் பிரதமர் மோடி குப்பைகளை அள்ளி விழிப்புணர்வினை மீண்டும் துவக்கி வைத்துள்ளதாகவே தெரிகிறது. நேற்று மாமல்லபுரமே ஜிகுஜிகுவென மின்னியதால், பளிச்சென, சுத்தமாக காணப்பட்டது. ஆனால் கோவளம் பீச் வந்ததுமே குப்பைகள் கண்ணுக்கு தெரிந்துவிட்டது போலும்.

    வாக்கிங்

    வாக்கிங்

    வழக்கமாக மோடி காலையில் எழுந்ததும் உடற்பயிற்சி, யோகா செய்வார் என்பது தெரிந்த விஷயம்தான். இப்போது, கோவளம் பிஷர்மன்ஸ் கேவ் ஹோட்டலில் தங்கியிருப்பதால், காலையில் கோவளம் பீச்சுக்கு வாக்கிங் வந்தவர், அங்கு கிடந்த குப்பைகளை கண்டதும் சுத்தப்படுத்தும் வேலையில் இறங்கிவிட்டார்.

    பாட்டில்கள்

    கையில் எந்த கிளவுசும் இல்லை.. காலில் செருப்பும் இல்லை.. வெறும் கைகளாலேயே கையில் ஒரு பிளாஸ்டிக் கவரை வைத்து கொண்டு, கண்ணில் பட்ட குப்பைகளை அள்ளி அள்ளி போட்டார். சில பாட்டில்கள் பீச் மண்ணில் விழுந்து கிடந்தன. இதையெல்லாம் பார்த்து நம்மை பற்றி என்ன நினைத்திருப்பாரோ தெரியவில்லை. அந்த பாட்டில்கள், பேப்பர், கவர்களை சேகரித்தார். கிட்டத்தட்ட 30 நிமிடம் இந்த குப்பைகளை அள்ளினார் மோடி.

    வேண்டுகோள்

    வேண்டுகோள்

    கை நிறைய சேகரித்த குப்பைகளை ஹோட்டல் ஊழியர் ஜெயராஜிடம் கொடுத்து, இதுதான் என் கலெக்ஷன் என்று கூறி ஒப்படைத்தார். ஜெயராஜும் சிரித்தபடி வாங்கிக் கொண்டார். அது மட்டுமல்ல, நாம் எல்லோருமே பொதுஇடங்களை சுத்தமாகவும், நேர்த்தியாகவும் வைத்திருக்க வேண்டும் என்று வேண்டுகோளையும் ட்விட்டரில் விடுத்துள்ளார்.

    மீண்டும் ஒரு தூய்மை இந்தியா பணியை சொல்லாமல் சொல்லி செயலாலேயே அசத்திவிட்டார் நம் பிரதமர்!

    English summary
    PM Modi removes debris from Kovalam beach today morning and tweet about it
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X