என்ன கருவி அது?.. கோவளம் பீச்சை மோடி சுத்தம் செய்த போது இதை கவனித்தீர்களா? அவரே கொடுத்த விளக்கம்!
சென்னை: நேற்று கோவளம் கடற்கரையில் சுற்றும் போது தான் கையில் வைத்திருத்த கருவி என்ன என்று பிரதமர் மோடி விளக்கி உள்ளார்.
சீன அதிபர் ஜி ஜின்பிங் நேற்று முதல்நாள் தமிழகம் வந்தார். அவர் பிரதமர் மோடியை காஞ்சிபுரத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். கோவளம் தனியார் விடுதியில் இரண்டு நாட்டு தலைவர்கள் முன்னிலையில் இந்திய - சீன உயர்மட்ட பிரதிநிதிகள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
தாஜ் பிஷர்மேன் கேவ் ரெசார்ட்டில் இருவரும் ஆலோசனை நடத்தினார்கள். இரண்டு நாட்டு உறவுகள் குறித்து பல்வேறு விஷயங்கள் இந்த சந்திப்பில் பேசப்பட்டது.
இது தான் மோடி- ஜின்பிங் நின்ற இடம்.. நம்ம புள்ளிங்கோ செல்பி.. மீண்டும் களைக்கட்டிய மாமல்லபுரம்

சுத்தம் செய்தார்
இந்த நிலையில் பிரதமர் மோடி நேற்று கோவளம் கடற்கரையில் காலையில் வாக்கிங் சென்றார். அதே நேரம் அங்கு சில நிமிடம் தியானம் செய்தார். பின் அங்கிருக்கும் குப்பைகளை அகற்றினார். அவர் இப்படி குப்பைகளை சுத்தம் செய்தது நாடு முழுக்க பெரிய வரவேற்பை பெற்றது.

என்ன அது
இந்த நிலையில் நேற்று கோவளம் கடற்கரையில் சுற்றும் போது தான் கையில் வைத்திருத்த கருவி என்ன என்று பிரதமர் மோடி விளக்கி உள்ளார். அதில், நான் கடலை சுத்தம் செய்து கொண்டு இருந்த போதும், நடந்து சென்ற போதும், பாறை மீது அமர்ந்திருந்த போதும் கையில் ஒரு கருவியை வைத்து இருந்தேன். நான் கையில் வைத்திருந்த கருவி என்ன என்று பலரும் என்னிடம் கேட்டார்கள்.

கருவி பெயர்
நான் கையில் வைத்திருந்தது அக்குபிரஷர் ரோலர் கருவியாகும். நான் அதை அடிக்கடி பயன்படுத்துவேன். அதை பயன்படுத்துவது எனக்கு மிகவும் பிடித்தமானது. அக்குபிரஷர் ரோலர் கருவி மூலம் மனம் அமைதியாகும். எனக்கு அந்த கருவி மன ரீதியாக மிகவும் உதவியாக இருக்கிறது, என்று பிரதமர் மோடி குறிப்பிட்டு இருந்தார்.

என்ன வைரல்
பிரதமர் மோடி சுத்தம் செய்த பீச் அருகே உள்ள பகுதிகள் மிகவும் வைரலாகி உள்ளது. ஆனால் அந்த குறிப்பிட்ட பீச் தாஜ் நிறுவனத்திற்கு சொந்தமான தனியார் பீச் ஆகும். இதனால் மாமல்லபுரம் பகுதிக்கு சென்று சுற்றுலா பயணிகள், மோடி, ஜி ஜின்பிங் பார்வையிட்டு இடங்களை சுற்றிப்பார்த்து வருகிறார்கள்.