சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இதுதான் அர்ஜுனன் தபசு.. இது வெண்ணை உருண்டை பாறை.. ஜின்பிங்கிடம் புட்டு புட்டு விளக்கிய மோடி!

மகாபலிபுரம் சிற்பங்கள் குறித்து பிரதமர் மோடி சீன அதிபர் ஜி ஜின்பிங்கிடம் விளக்கினார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    மகாபலிபுரம் சிற்பங்கள் குறித்து பிரதமர் மோடி சீன அதிபர் ஜி ஜின்பிங்கிடம் விளக்கினார்-வீடியோ

    சென்னை: மகாபலிபுரம் சிற்பங்கள் குறித்து பிரதமர் மோடி சீன அதிபர் ஜி ஜின்பிங்கிடம் விளக்கினார்.

    பெரும் பாதுகாப்பிற்கும் இடையில் சீன அதிபர் ஜி ஜின்பிங் தமிழகம் வந்துள்ளார். இன்றில் இருந்து நாளை மறுநாள் வரை மகாபலிபுரத்தில் நடக்கும் மாநாட்டில் இவர் கலந்து கொள்ள இருக்கிறார்.

    பிரதமர் மோடியுடன் மகாபலிபுரத்தில் அவர் தற்போது ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னையில் இருந்து கார் மூலம் அவர் மகாபலிபுரம் சென்றார்.

    என்ன உடை

    என்ன உடை

    இந்த நிலையில் இந்த சந்திப்பின் போது தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையை பிரதமர் மோடி அணிந்து இருந்தார். வெயிலில் கோட் போடுவதை தவிர்த்த ஜின்பிங் வெறும் சட்டை மட்டும் அணிந்து இருந்தார். இவர்கள் இருவரும் மகாபலிபுரம் சாலையில் நடந்து சென்றனர்.

    என்ன சிறப்பும்

    என்ன சிறப்பும்

    அங்கு இருக்கும் சிற்பங்களை வரிசையாக கண்டுகளித்தனர். இவர்களின் வருகைக்காக மகாபலிபுரம் சிற்பங்கள் இருக்கும் பகுதிகள் ஏற்கனவே சுத்தம் செய்யப்பட்டு இருந்தது. அங்கிருக்கும் சிலைகள் குறித்து மோடி ஜின்பிங்கிடம் விவரித்தார்.

    அர்ஜுனன் தபசு

    அர்ஜுனன் தபசு

    அதன்பின் அர்ஜுனன் தபசு பகுதியை இருவரும் சுற்றிப்பார்த்தனர். அந்த பகுதியின் வரலாற்றை பிரதமர் மோடி ஜின்பிங்கிடம் விவரித்தார். இவர்கள் இருவருடன் சீன அதிகாரி ஒருவர் மற்றும் இந்திய அதிகாரி ஒருவர் உடன் இருந்தனர். எல்லா பகுதி குறித்தும் ஆங்கிலத்தில் மோடி அவரிடம் விவரித்தார்.

    சீனா எப்படி

    சீனா எப்படி

    அதேபோல் வெண்ணை உருண்டை பாறை குறித்தும் மோடி விளக்கினார். அதற்கு முன் இரண்டு நாட்டு தலைவர்களும் போட்டோ எடுத்தனர். இந்தியா சீனா இடையே நிறைய பிரச்சனைகள் இருக்கிறது. ஆனால் அதை எல்லாம் மீறி தற்போது இரண்டு நாட்டு அதிபர்களும் அமைதியாக சென்னையில் நடந்து சென்று ஆலோசனை நடந்தது பெரிய வைரலாகி உள்ளது.

    English summary
    PM Modi explains about Mamallapuram monuments to Chinese president Xi Jinping in Chennai.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X