சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நாட்டை தவறாக வழி நடத்துகிறார் பிரதமர் மோடி.! மத்திய பட்ஜெட் குறித்து சிதம்பரம் விமர்சனம்

Google Oneindia Tamil News

சென்னை: நாட்டின் பொருளாதாரத்தை 5 லட்சம் டாலராக உயர்த்த எந்த திட்டமும் பட்ஜடெ்டில் அறிவிக்கப்படவில்லை என, காங்கிரஸ் விமர்சித்துள்ளது. இன்று நாடாளுமன்றத்தில் பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கிடையே நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

இந்த பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் நிதியமைச்சரான ப.சிதம்பரம் பட்ஜெட் தயாரிப்பில், ஏழை மக்கள் மற்றும் பொருளாதார நிபுணர்கள் கருத்தும் கேட்கப்படவில்லை. கல்வி, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மாநில அரசுகளாலேயே நிறைவேற்ற முடியும். எனவே குடிநீர் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த வேண்டியதில்லை என கூறியுள்ளார்.

PM Modi is misleading the country. P Chidambaram Review on Budget

கடந்த நிதியாண்டில் மத்திய அரசின் வருவாயில் ரூ.1,60,000 கோடி இழப்பு ஏற்பட்டது பற்றி தகவல் ஏன் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை என வினவியுள்ளார். மேலும் கூடுதல் வரிவிதிப்பால் அரசுக்கு எவ்வளவு கோடி கூடுதல் வருவாய் கிடைக்க போகிறது என்பதை கூட அமைச்சர் தெரிவிக்கவில்லை. புள்ளி விவரங்களில் எந்த வெளிப்படைத் தன்மையையும் கடைபிடிக்கவில்லை

மத்திய அரசின் வருமானம் மற்றும் செலவு எவ்வளவு என நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் சொல்லாமல் விட்டது முறையல்ல என சாடியுள்ளார். வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய பான் கார்டு இருக்கும் போது, ஆதார் எண் எதற்கு என கேள்வி எழுப்பியுள்ளார்.

பட்ஜெட்டில் முக்கிய விவரங்களை மக்களிடம் சொல்லாமல் ஏன் மறைக்கிறீர்கள் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார் சிதம்பரம். மேலும் மின்னணு பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்க வேண்டுமே தவிர கட்டாயப்படுத்தி மக்கள் மீது திணிக்க கூடாது என வலியுறுத்தியுள்ளார். பாஜக அரசின் பட்ஜெட் தெளிவற்ற பட்ஜெட்டாக உள்ளது.

வழிநடத்துவதற்கு பதிலாக நாட்டிற்கு தவறான வழியை காட்டுகிறார் பிரதமர் மோடி என ப.சிதம்பரம் கடுமையாக விமர்சித்துள்ளார்.

English summary
The Congress has criticized the budget for not announcing any plans to boost the country's economy by 5 lakh dollors.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X