சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அதுக்கு மட்டும் மோடி.. இதுக்கு மட்டும் இல்லையா.. தமிழிசை ஆதங்கம்

பெட்ரோல் டீசல் விலை குறைப்புக்கு காரணம் மோடி என தமிழிசை கூறியுள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    பெட்ரோல் விலையேற்றம்: மோடி விமர்சனம் குறித்து தமிழிசை ஆதங்கம்- வீடியோ

    சென்னை: பெட்ரோல் விலை ஏறியதற்கு காரணம் மோடி என்று விமர்சனம் செய்தவர்கள் விலை குறைந்ததற்கு அவர் காரணம் இல்லை என்று சொல்கிறார்களே என தமிழிசை ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

    ஆனால் சமீப காலமாகவே பெட்ரோல் விலை குறைந்து வருகிறது. வர்த்தகப் போர் மற்றும் இன்னும் பிறக் காரணங்களால் கச்சா எண்ணெய் விலைக் குறைய ஆரம்பித்துள்ளது.

    இந்த விலைக்குறைவால் உள் நாட்டு எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்து வந்தன. தற்போது எட்டு மாதங்களுக்கு முன்பிருந்த விலையில் பெட்ரோல், டீசல் விற்பனை ஆகி வருகின்றன.

    விளக்கம் அளித்தன

    விளக்கம் அளித்தன

    ஆனால் சில நாட்களுக்கு முன்பு பெட்ரோல் விலை உயர்ந்துகொண்டே போனது. இந்த விலை ஏற்றத்துக்கு மத்திய அரசை கண்டித்து போராட்டங்களும், நாடு தழுவிய வேலைநிறுத்தமும் நடைபெற்றது. அதற்கு மத்திய அரசு, "விலை ஏற்றத்துக்கு நாங்களா காரணம்? எண்ணெய் நிறுவனங்கள்தான் விலையை ஏற்றுகின்றன" என்று விளக்கம் அளித்திருந்தது.

    தமிழிசை ட்வீட்

    தற்போது பாஜக மாநில தலைவர் தமிழிசையோ, மோடியின் முயற்சியால்தான் பெட்ரோல் விலை குறைவது போன்று கூறி வருகிறார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு ட்வீட் போட்டுள்ளார்.

    பீப்பாய் காரணமா?

    பீப்பாய் காரணமா?

    அதில், "விலை ஏறிய போதெல்லாம் ஒலித்த குரல்கள் ஒடுங்கியது? விலை இறங்குமுகம் ஆனதால்?ஏறியதற்கு மோடி தானே காரணம் என்று விமர்சனம் செய்தவர்களே விலை குறைந்தது பீப்பாய் விலை குறைந்தால்தான் என்கிறார்கள். ஏற்றியது மோடி என்பார் இறக்கியது பீப்பாய் என்பார்? ???" என்று பதிவிட்டுள்ளார்.

    மோடி காரணமா?

    மோடி காரணமா?

    விலை ஏற்றத்துக்கு நாங்கள் காரணம் இல்லை என்று பாஜக தலைமையே ஏற்கனவே காரணம் சொல்லி விட்டநிலையில், தற்போது விலை குறைவுக்கு மட்டும் பிரதமர் மோடி மட்டும் எப்படி காரணமாக இருக்க முடியும் என்ற கேள்வி பொதுமக்களிடையே எழுந்துள்ளது.

    நெட்டிசன்கள் கேள்வி

    நெட்டிசன்கள் கேள்வி

    கர்நாடகம் என்ற ஒரு மாநில தேர்தலுக்காகவே பெட்ரோல் விலை குறைக்கப்பட்டபோது, தற்போது 5 மாநில தேர்தல்கள் என்றால் பெட்ரோல் விலை என்ன குறையாமலா இருக்கும் என்றும் நெட்டிசன்கள் தமிழிசையின் ட்வீட்டுக்கு கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    English summary
    Tamizhisai Soundarajan says PM Modi is the reason for the reduction of Petrol Prices
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X