சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

40 லட்சத்தை கடந்த கொரோனா... 21 நாட்களில் ஒழிப்பேன் என சொன்ன மோடி விளக்கம் தர வேண்டும்: ப. சிதம்பரம்

Google Oneindia Tamil News

சென்னை: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 40 லட்சத்தை கடந்துவிட்டது; 21 நாட்களில் கொரோனாவை ஒழிப்பேன் என சொன்ன பிரதமர் மோடி இதற்கு விளக்கம் தர வேண்டும் என்று மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.

உலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பில் இந்தியா தற்போது 3-வது இடத்தில் இருக்கிறது. இந்தியாவின் தற்போதைய கொரோனா பாதிப்பு வேகத்தில் 2-வது இடத்தில் உள்ள பிரேசிலை கீழே தள்ளிவிடும் நிலைதான் உள்ளது.

PM Modi must explain on Coronavirus tally crosses 40 lakh, says Chidambaram

இந்தியாவில் நாள்தோறும் கொரோனா பாதிப்பு 80 ஆயிரத்தை தாண்டியதாக உள்ளது. இந்தியாவின் மொத்த கொரோனா பாதிப்பு 40 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இது தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தமது ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது:

நாட்டில் கொரோனா பாதிப்பு செப்டம்பர் 30-ந் தேதியன்று 55 லட்சத்தைத் தாண்டும் என கணித்திருந்தேன். அது தவறு. செப்டம்பர் 20-ந் தேதியே இந்த எண்ணிக்கையை இந்தியா தொட்டுவிடும். செப்டம்பர் மாத இறுதியில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 65 லட்சமாக உயரும்.

கொரோனா.. இணை நோயாளிகளுக்கு.. பிளாஸ்மா சிகிச்சையால் பலன் இல்லை.. டாக்டர்கள் கருத்து

உலக நாடுகளில் லாக்டவுனை அமல்படுத்தியும் அதனால் எந்த பலனையும் பெறாத நாடு இந்தியாதான். கொரோனாவை 21 நாட்களில் ஒழித்துவிடுவேன் என்று சொன்னார் பிரதமர் மோடி. உலகின் பிற நாடுகள் எல்லாம் கொரோனாவை கட்டுப்படுத்திவிட்ட நிலையில் இந்தியாவின் நிலை தொடர்பாக பிரதமர் மோடி கண்டிப்பாக விளக்கம் தர வேண்டும்.

இவ்வாறு ப,சிதம்பரம் கூறினார்.

English summary
Former Union Minister P Chidambaram has urged that PM Modi should explain on the Coronavirus tally crosses 40 lakh.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X