சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நம்ம தல மோடிக்கு பெரிய விசில் அடிங்க... தழைய தழைய வேட்டி.. தோளில் துண்டு.. செம செம!!

மாமல்லபுரத்தில் வேட்டி சட்டையுடன் பிரதமர் மோடி வருகை தந்துள்ளார்

Google Oneindia Tamil News

Recommended Video

    China president india visit | வேஷ்டி கட்டி சீன அதிபரை வரவேற்க வந்த பிரதமர் மோடி | Modi in vesti

    மாமல்லபுரம்: பல்லவ நகரில் பட்டு வேட்டி - சட்டை, துண்டுடன் நடமாடி வரும் நம் பிரதமருக்கு ஏகப்பட்ட வாழ்த்துக்களும், பாராட்டுகளும் குவிந்து வருகின்றன!

    யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற வாசகத்தை ஐநாவில் உரத்து பேசினார் பிரதமர். பிறகு, நம்ம ஊரு இட்லி, தோசை, சாம்பாரை ரொம்பவே பிடிக்கும் என்று ரசனையுடன் ருசிபட சொன்னார். இப்போது ஒரு படி மேலபோய், அக்மார்க் தமிழனாகவே மாறிட்டார் நம்ம மோடி.

    தமிழரின் பாரம்பரிய உடையான வெள்ளை வேட்டி சட்டையில் மாமல்லபுரத்தில் வந்து அவர் இறங்கியபோது.. செம செம என்று சொல்லாத வாயே இல்லை.. அப்படி ஒரு பக்கா தமிழனாக மாறிக் காட்சி தந்தார் மோடி. வாவ்.. நம்ம மோடியா இது.. என்று தான் அத்தனை பேரும் ஆச்சரியப்பட்டனர்.

    பட்டு வேட்டி

    பட்டு வேட்டி

    சந்தன கலர் பட்டு ஜரிகை அங்கவஸ்த்திரம் தோளில் போட்டுள்ளார். அடிக்கடி அதை இழுத்து இழுத்து சரி செய்து கொண்டே சீன அதிபரிடம் பேசுகிறார். வழக்கமாக, அணியும் கோட்-சூட்டும் இல்லை.. கலர் கலர் குர்தாவும் இல்லை.. இப்படியே பார்த்து பழக்கப்பட்ட நமக்கு, அப்படியே ஆண்டிப்பட்டி உசிலம்பட்டி காரர் போலவே டிப்பிக்கல் தமிழனாக மாறி விட்டார் பிரதமர்.

    கட் ஷூ

    கட் ஷூ

    வேட்டிக்கு ஏற்றபடி செருப்பு போட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். மாறாக கட்ஷூ போட்டிருந்தார். அது மட்டும்தான் இடித்தது. சீன அதிபரிடம் மாமல்லபுரம் சிற்பங்களை பற்றி மோடியே விவரித்து சொல்கிறார். இந்த பல்லவ நாட்டு சிற்பங்களின் சரித்திரங்கள் மோடி இதற்கு முன்பே தெரிந்து வைத்திருக்கக்கூடும் என்றே தெரிகிறது. பிரதமருக்கு இவ்வளவு விஷயம் எப்படி தெரியும் என்பது நமக்கு மிகப்பெரிய வியப்பை தருகிறது.

    அர்ஜுனன் தபசு

    அர்ஜுனன் தபசு

    குறிப்பாக ஒரேகல்லால் ஆன சிற்பங்களை பற்றி நிறைய நேரம் மோடி, அதிபரிடம் விளக்கி கொண்டிருந்தார். அதேபோல, அர்ஜுனன் தபசு சிற்பங்களை பற்றியும் பிரதமர் விலாவரியாக எடுத்து சொன்னார். மாமல்லபுரத்தில் சீன அதிபர் கோட்-சூட்டையெல்லாம் கழற்றி எறிந்துவிட்டு, கேஷூவலான பேன்ட்-சட்டையில் உள்ளார். அவருடன் வந்தவர்கள், மோடியுடன் வந்தவர்கள் எல்லாருமே கோட்-சூட்டில் இருக்கிறார்கள்.

    நம்ம தல மோடி

    நம்ம தல மோடி

    அந்த இடத்திலேயே வித்தியாசமாக காணப்பட்டது நம்ம தலைதான்.. அதுவும் பல்லவ நகரில் இரு நாட்டு தலைவர்களை இப்படி எளிமையாக பார்ப்பதே நமக்கு வித்தியாசமாகவும், சந்தோஷமாகவும் நிறைந்து இருக்கிறது. முன்னதாக மாமல்லபுரத்துக்கு காரில் அதிபர் வந்தவுடன், பிரதமர் வரவேற்ற தோரணையை பார்த்தால், ஏதோ உள்ளூர்வாசி வெளியூர்காரரை வரவேற்பது போல அவ்வளவு எளிமையாகவும், யதார்த்தமாகவும் இருந்தது.

    இன்று ஒரே நாளில்.. எங்கோ போய் உச்சத்துக்கு உயர்ந்து நின்றுவிட்டார் மோடி!

    English summary
    pm modi reaches mamallapuram traditional dress dhoti shirt and this costumes are viral on socials now
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X