சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

குவார்ட்டர் பாட்டிலை கையில் எடுத்த பிரதமர்.. அதிர்ந்த அதிகாரிகள்.. கோவளம் பீச்சா இது.. ரொம்ப கேவலம்!

கோவளம் பீச்சில் தூய்மை பணியினை பிரதமர் மோடி மேற்கொண்டார்

Google Oneindia Tamil News

Recommended Video

    குவார்ட்டர் பாட்டிலை கையில் எடுத்த பிரதமர்.. அதிர்ந்த அதிகாரிகள்.. !-வீடியோ

    சென்னை: கையில் குவார்ட்டர் பாட்டிலை, மோடி கையில் எடுத்ததுமே கோவளம் பீச்சில் இருந்த அதிகாரிகளுக்கு அள்ளு கிளம்பிவிட்டது!

    நம்ம இடத்தை நாம தான் சுத்தமா வெச்சிக்கணும் என்பது இயல்பான, அவசியமான விஷயம். ஆனால் இதற்குகூட மத்திய அரசு தூய்மை இந்தியா என்ற திட்டத்தை கொண்டு வந்ததே மக்களுக்கு ஒருவகையில் அசிங்கம்தான். ஆனால், அதையும் கடைப்பிடிக்காதது அதைவிட அசிங்கமாக உள்ளது.

    அப்படித்தான் இன்றைக்கு கோவளம் பீச்சில் அசிங்கப்பட்டு நிற்கிறோம். கோவளத்தில் பிரதமர் மோடி தங்கியுள்ளதால், இங்குள்ள பீச்சில் இன்று காலை வாக்கிங் சென்றார்.

    கையில் கிளவுஸ் இல்லை.. குப்பை நிறைந்த கோவளம்.. டிராக் சூட்டில் களத்தில் குதித்த மோடி!கையில் கிளவுஸ் இல்லை.. குப்பை நிறைந்த கோவளம்.. டிராக் சூட்டில் களத்தில் குதித்த மோடி!

    லட்சணம்

    லட்சணம்

    பீச் தானே.. எப்படியும் சுத்தமான மணலில் காலாற நடக்கலாம் என்று நினைத்திருப்பார் போலும். அதனால்தான் கையில் கிளவுஸ், காலில் செருப்புகூட இல்லாமல் நம்பி காலை வைத்திருக்கிறார். ஆனால், சுற்றிலும் ஒரு பார்வை பார்த்தபோதுதான், நம்ம ஆட்கள் செய்து வைத்த லட்சணம் அங்கே தெரிந்தது. மணல் முழுக்க பரவி கிடந்த குப்பைகளை அள்ள ஆரம்பித்தார். முக்கால்பாகம் பிளாஸ்டிக் குப்பைகள்தான்.. அங்கங்கே மது பாட்டில்களும் விழுந்து கிடந்தன.

     குவார்ட்டர் பாட்டில்

    குவார்ட்டர் பாட்டில்

    நம் ஆட்கள் பீச்சில் கும்மாளமிடுவது, அங்கேயே உட்கார்ந்து குடித்துவிட்டு, குப்பைகளையும் போட்டுவிட்டு, வெட்கமே இல்லாமல் சென்றிருப்பதுதான், காலை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அந்த பாட்டிலையும் பிரதமர் கையிலேயே எடுத்து கவருக்குள் போடுகிறார். கையில் குவார்ட்டர் பாட்டிலை கூச்சமே இல்லாமல் ஒரு பிரதமர் எடுப்பதை பார்த்துமே அங்கிருந்த அதிகாரிகளுக்கு தூக்கி வாரிப்போட்டது. இதற்கு என்ன பதிலும் சொல்ல முடியாமல் விழித்து கொண்டு அதிர்ந்து நின்றனர்.

     ஐநாவில் முழக்கம்

    ஐநாவில் முழக்கம்

    ஆனால், பிரதமர் எதையுமே முகத்தில் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. இத்தனைக்கும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை நிறுத்த வேண்டும் என்பது மோடியின் முக்கிய பிரச்சாரங்களில் ஒன்று. அது மட்டுமில்லை.. இந்த பிரச்சாரத்தை ஐநா பொதுக்குழு கூட்டத்திலும் மோடி முன் வைத்திருந்தார்.

    மதிப்பீடுகள்

    ஆனால் காலையில் 30 நிமிடத்துக்கு இந்த பிளாஸ்டிக்கை அள்ளியபோது நம்மை பற்றி என்ன நினைத்திருப்பாரோ தெரியவில்லை. குவார்ட்டர் பாட்டிலை கையில் எடுக்கும்போதும் நம் மீதான மதிப்பீடுகள் எப்படி இருந்திருக்கும் என்பதை நினைத்தாலே மகா வெட்கமாகவும், கேவலமாகவும் இருக்கிறது.

     முன்வருவார்களா?

    முன்வருவார்களா?

    இனியாவது கடற்கரையை நம் குடிமகன்கள் திறந்த வெளி பாராக பயன்படுத்தாமல் தடுப்பார்களா? கொஞ்சமாவது தூய்மையை கடைப்பிடிக்க முன்வருவார்களா? பிளாஸ்டிக் உபயோகிப்பதை தவிர்க்க மக்கள் மனசார நினைப்பார்களா?

    English summary
    PM Modi removes debris from Kovalam beach today morning and tweet about it
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X