சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கடல்.. இது என்னுடைய ஆத்ம உலகம்.. மாமல்லபுரம் குறித்து கவிதை எழுதிய பிரதமர் மோடி.. உருக்கம்!

மாமல்லபுரத்திலும், கோவளம் கடற்கரையிலும் அமர்ந்து, கடலோடு உரையாடியது குறித்து பிரதமர் மோடி கவிதை எழுதி உள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    கோவளம் பீச்சை மோடி சுத்தம் செய்த போது இதை கவனித்தீர்களா?

    சென்னை: மாமல்லபுரத்திலும், கோவளம் கடற்கரையிலும் அமர்ந்து, கடலோடு உரையாடியது குறித்து பிரதமர் மோடி கவிதை எழுதி உள்ளார்.

    சீன அதிபர் ஜி ஜின்பிங் இரண்டு நாட்கள் முன் தமிழகம் வந்தார். அவர் பிரதமர் மோடியை காஞ்சிபுரத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். கோவளம் தனியார் விடுதியில் இரண்டு நாட்டு தலைவர்கள் முன்னிலையில் இந்திய - சீன உயர்மட்ட பிரதிநிதிகள் நிலையில் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

    இந்த சந்திப்பு உலகம் முழுக்க புகழ்பெற்றது. அதேபோல் கோவளம் கடற்கறையை பிரதமர் மோடி சுத்தம் செய்ததும் இணையம் முழுக்க வைரலாகி உள்ளது.

    இறுதிக்கட்டத்தை நெருங்கும் அயோத்தி வழக்கு.. உச்ச நீதிமன்றத்தில் இன்று காலை விசாரணை!இறுதிக்கட்டத்தை நெருங்கும் அயோத்தி வழக்கு.. உச்ச நீதிமன்றத்தில் இன்று காலை விசாரணை!

    கவிதை எழுதினார்

    இந்த நிலையில் மாமல்லபுரத்திலும், கோவளம் கடற்கரையிலும் அமர்ந்து, கடலோடு உரையாடியது குறித்து பிரதமர் மோடி கவிதை எழுதி உள்ளார். இந்தியில் அவர் இது தொடர்பாக நீண்ட கவிதை எழுதி உள்ளார். அன்று கடலுக்கு அருகே அமர்ந்து தியானம் செய்தது குறித்து அவர் விவரித்துள்ளார்.

    8 பத்திகள்

    8 பத்திகள்

    8 பத்திகளில் எழுதி, அவரால் கையெழுத்திடப்பட்ட இந்த கவிதையை அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. சூரியன் உதிக்கும் வேளையில், இதமான காற்றில், அலைகளுடன் பேசியதும். அதன் வலிமையை உணர்ந்து கொண்டது, உணர்வுபூர்வமாக இருந்தது என்று மோடி தனது கவிதையில் குறிப்பிட்டுள்ளார்.

    கடல் அலைகள்

    கடல் அலைகள்

    கடல் அலைகள் எப்படிப்பட்ட உணர்வு கொடுத்தது. அந்த நாள் எப்படி இருந்ததது. மண்ணும், கடல் காற்று வாசமும் எப்படி இருந்தது என்று பிரதமர் மோடி தனது கவிதையில் குறிப்பிட்டுள்ளார். இது என்னுடைய ஆத்ம உலகம் குறித்த உரையாடல்.

    பகிர்ந்தார்

    பகிர்ந்தார்

    இதை உங்களுடன் பகிர்வதில் எனக்கு சந்தோசம் என்று அவர் இந்த கவிதை குறித்து குறிப்பிட்டுள்ளார். இணையம் முழுக்க இந்த கவிதை தற்போது வைரலாக பரவி வருகிறது. பலர் இதை ஷேர் செய்து பாராட்டி வருகிறார்கள்.

    English summary
    PM Modi writes a poem on Mamallapuram and the sea in twitter, which goes viral in social media.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X