சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சென்னையில் சாலையில் செல்ல வேண்டும்.. ஆசைப்பட்ட ஜி ஜின்பிங்.. ஓ இதுதான் ரியல் பின்னணியா!

சென்னையில் சாலையில் பயணிக்க வேண்டும் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் விருப்பப்பட்டு இருக்கிறார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    China president india visit | சென்னையில் சாலையில் செல்ல வேண்டும்.. ஆசைப்பட்ட ஜி ஜின்பிங்..!-வீடியோ

    சென்னை: சென்னையில் சாலையில் பயணிக்க வேண்டும் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் விருப்பப்பட்டு இருக்கிறார்.

    பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் இன்று சென்னைக்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகை தருகிறார். பிரதமர் மோடி உடன் அவர் இன்று மாலை சந்திப்பு நடத்துகிறார். இந்த மூன்று நாள் சந்திப்பில் பல்வேறு முக்கிய ஆலோசனைகள் செய்யப்பட உள்ளது.

    சென்னை மாமல்லபுரத்தில் இந்த சந்திப்பு நடக்க உள்ளது. இதனால் சென்னையில் பெரிய அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    ஆங்கிலம் மட்டுமல்ல.. சீனத்திலும் டிரெண்ட் செய்யும் தமிழர்கள்.. மோடிக்கு எதிராக வைரலாகும் 3 ஹேஷ்டேக்ஆங்கிலம் மட்டுமல்ல.. சீனத்திலும் டிரெண்ட் செய்யும் தமிழர்கள்.. மோடிக்கு எதிராக வைரலாகும் 3 ஹேஷ்டேக்

    அதிகாரிகள்

    அதிகாரிகள்

    இந்த சந்திப்பு தொடர்பாக இரண்டு நாட்டு அதிகாரிகள் கூடி கடந்த இரண்டு மாதம் முன் ஆலோசனை நடத்தி இருக்கிறார்கள். டெல்லியில் இந்த ஆலோசனை நடந்துள்ளது. அப்போது மத்திய அரசு இரண்டு நாட்டு தலைவர்களின் கூட்டம் நடப்பதற்கான இடங்களை பரிந்துரை செய்துள்ளது.

    எப்படி

    எப்படி

    ஆனால் அதில் தமிழ்நாடு பரிந்துரை செய்யப்படவில்லை. அப்போது இந்தியாவிற்கான சீன தூதராக இருந்த லியோ சான்ஹாய்தான் தமிழகத்தில் இந்த சந்திப்பு நடக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார். சீனா மற்றும் மாமல்லபுரம் இடையே இருக்கும் தொடர்பு குறித்து பேசி அவர் இந்திய அதிகாரிகளை சம்மதிக்க வைத்துள்ளார்.

    ஹெலிகாப்டர் பயணம்

    ஹெலிகாப்டர் பயணம்

    அதேபோல் முதலில் ஜி ஜின்பிங் கிண்டியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மாமல்லபுரம் செல்வதாக இருந்தது. மூன்று நாட்களும் அவர் ஹெலிகாப்டர் பயன்படுத்துவதாக இருந்தது. பாதுகாப்பு கருதி இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

     ஜி ஜின்பிங் சென்னை

    ஜி ஜின்பிங் சென்னை

    ஆனால் ஜி ஜின்பிங் சென்னையில் சாலையில்தான் செல்ல வேண்டும். அதுதான் என்னுடைய விருப்பம் என்று கூறி உள்ளார். முதலில் இதை மத்திய அரசு ஏற்கவில்லை என்று கூறுகிறார்கள். ஆனால் கடைசி கட்டத்தில் இந்த முடிவை ஏற்றுக்கொண்டு, மாமல்லபுரம் விழா நடக்கும் பகுதிக்கு காரில் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    இதுதான் காரணம்

    இதுதான் காரணம்

    இதனால்தான் சென்னையில் சாலைகள் சரி செய்யப்பட்டு. ஸ்பீட் பிரேக்கர்கள் நீக்கப்பட்டு. சாலை போக்குவரத்து மாற்றப்பட்டது. இதனால்தான் சென்னையில் பல்வேறு இடங்களில் புதிதாக அலங்காரம் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

    சாலை வழி போக்குவரத்து

    சாலை வழி போக்குவரத்து

    இந்தியாவை முழுவதுமாக தெரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவின் கட்டமைப்பு வசதிகளை அதிபர் ஜி ஜின்பிங் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறார். அதனால்தான் அவர் சாலை வழியாக செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார் என்று குறிப்பிடுகிறார்கள்.

    English summary
    PM Modi - Xi Jinping Meet: Chinese President asked for the road trip over the helicopter trip in Chennai.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X