சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மயில் ஆட்டம்.. ஒயில் ஆட்டம் ஓகே.. அங்கவஸ்திரத்திற்கு மட்டும் நோ.. சீன அதிபருக்கு கண்கவர் வரவேற்பு!

சென்னைக்கு வருகை புரிந்திருக்கும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு மகப்பேறிய அளவில் விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

Google Oneindia Tamil News

Recommended Video

    மயில் ஆட்டம்.. ஒயில் ஆட்டம் ஓகே.. அங்கவஸ்திரத்திற்கு மட்டும் நோ.. சீன அதிபருக்கு கண்கவர் வரவேற்பு!-வீடியோ

    சென்னை: சென்னைக்கு வருகை புரிந்திருக்கும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு மகப்பேறிய அளவில் விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    பெரும் பாதுகாப்பிற்கும் திட்டமிடலுக்கும் இடையில் சீன அதிபர் ஜி ஜின்பிங் தமிழகம் வந்துள்ளார். இன்றில் இருந்து நாளை மறுநாள் வரை மகாபலிபுரத்தில் நடக்கும் மாநாட்டில் இவர் கலந்து கொள்ள இருக்கிறார்.

    பிரதமர் மோடியுடன் மகாபலிபுரத்தில் இவர் ஆலோசனை நடத்துவார். இந்த ஆலோசனையில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி இன்று காலை சென்னை வந்தார்.

    சிவப்பு கம்பளம்

    சிவப்பு கம்பளம்

    இந்த நிலையில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை வரவேற்பதற்காக சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டு இருந்தது . அதேபோல் சீனாவை சேர்ந்த மக்கள் சிலரும் விமான நிலையத்திற்குள் அனுமதிக்கப்பட்டு இருந்தனர். இவர்கள் சீன பாரம்பரியம்படி இசை வாத்தியங்களை வாசித்து சீன அதிபரை வரவேற்றனர்.

    சீன அதிபர்

    சீன அதிபர்

    சீன அதிபரை தமிழக அரசு சார்பாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வரவேற்றார். அதேபோல் முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் உடன் இருந்தனர். தமிழக அமைச்சர்கள் உடன் இருந்தனர். இங்கிருந்து அவர் கிண்டி ஐடிசி கிராண்ட் சோழாவில் தங்க வைக்கப்படுவார்.

     ஆட்டம்

    ஆட்டம்

    தமிழக கலாச்சாரத்தை வெளிக்காட்டும் விதமாக விமான நிலையத்தில் மயில் ஆட்டம், ஒயில் ஆட்டம்,பொய் கால் குதிரை ஆகிய ஆட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. வரிசையாக வழி நெடுக கலை நிகழ்ச்சிகள் இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது . விமான நிலையத்திற்கு வெளியே செண்டை மேள வரவேற்பும் அளிக்கப்பட்டது.

     என்ன ஆட்டம்

    என்ன ஆட்டம்

    ஜி ஜின்பிங் முக்கியமாக தப்பாட்டத்தை நீண்ட நேரம் நின்று பார்த்தார். அந்த சத்தத்தை வியந்து அவர் நீண்ட நேரம் பார்த்துக் கொண்டு இருந்தார். அதேபோல் ஒயிலாட்டத்தை நீண்ட நேரம் பார்த்துக் கொண்டு இருந்தார்.

    இல்லை

    இல்லை

    கடைசியில் சென்னையை சேர்ந்த பிரபல கோவில் புரோகிதர்கள் சீன அதிபரை வரவேற்றனர். அவர்கள் சீன அதிபருக்கு மாலை அணிவித்து, விபூதி, குங்குமம் வைத்து, அங்க வஸ்திரம் வைக்க முயன்றனர். . ஆனால் பாதுகாப்பு கருதி அவர்கள் சீன அதிபரை நெருங்க அனுமதிக்கப்படவில்லை.

    English summary
    PM Modi - Xi Jinping Meet: Chinese president gets a cultural welcome in Chenna Airport Tamilnadu.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X