சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இவருக்கு அவர் பட்டு சேலை வழங்க.. அவர் தட்டு கொடுக்க.. அன்பை பரிமாறி கொண்ட மோடி, ஜின்பிங்!

சீன அதிபருக்கு பட்டு சேலையை வழங்கினார் பிரதமர் மோடி

Google Oneindia Tamil News

Recommended Video

    மாறி மாறி பரிசு பொருட்கள்..அன்பை பரிமாறி கொண்ட மோடி, ஜின்பிங்!-வீடியோ

    சென்னை: அவர் இவருக்கு தட்டு வழங்க.. இவர் அவருக்கு பட்டு வழங்க.. என அதிபரும் பிரதமரும் மாறி மாறி பளபள பரிசுகளை வழங்கி அன்பினை பரிமாறி கொண்ட நிகழ்வு நடந்தேறி உள்ளது.

    சீனாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையே கலாச்சார, வர்த்தக உறவு பழங்காலத்தில் இருந்தே நீடித்து கொண்டு வருகிறது என்று பிரதமர் பெருமைபட கூற, தமிழகத்தின் விருந்தோம்பல் எனக்கும், உடன் வந்துள்ள அதிகாரிகளுக்கும் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும் என்று அதிபர் சிலாகித்து சொல்ல.. உணர்வுபூர்வமான சந்திப்பாக நமக்கு இன்று வெளிப்பட்டது.

    PM Modi, Xi Jinping on kovalam artefacts and handloom

    இதையடுத்து, கோவளத்தில் பிரதமர் மோடியும், சீன அதிபரும் தங்கி இருந்த நிலையில், அந்த ஓட்டலில் கைவினை பொருட்களை பார்வையிட்டனர். இதில் ஐம்பொன்னால் ஆன நடராஜர் சிலைகள், அம்மன் சிலைகள் வரிசையாக வைக்கப்பட்டிருந்தன.

    PM Modi, Xi Jinping on kovalam artefacts and handloom

    பின்னர் ஒரு வரிசையில் தஞ்சாவூர் தட்டுகள் இடம் பெற்றிருந்தன. இப்படி ஒரு தட்டுக்களை சீன அதிபர் நேரில் பார்த்திருக்க வாய்ப்பே இருக்காது.. அதனால் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தார்.

    சென்னைதான் காரணம்.. இந்தியாவும் சீனாவும் ஒன்றாக இணைந்துவிட்டது.. பிரதமர் மோடி பெருமிதம்!சென்னைதான் காரணம்.. இந்தியாவும் சீனாவும் ஒன்றாக இணைந்துவிட்டது.. பிரதமர் மோடி பெருமிதம்!

    பிரதமர் மோடியின் உருவப்படம் கொண்ட தட்டு ஒன்றினை அதிபர் வழங்கியதும், அதனை ஆசையுடன் பெற்றுக் கொண்டார் மோடி. அதேபோல, ஜின்பிங் படம் பொறிக்கப்பட்டு ஒரு பட்டு சால்வை தயாராக இருந்தது.

    கூட்டுறவு சங்கத்தினரே கையாலேயே நெய்திருந்த பட்டு சால்வை அது. அதை விரித்து அதிபருக்கு காண்பிக்கப்பட்டது. சிவப்பு, பொன்னிறங்களில் அந்த சால்வை தகதகவென மின்னியது. அதனை 2 நபர்கள் ஆளுக்கு ஒரு பக்கம் விரித்து கொண்டு நிற்க, அதன்முன்பு அதிபரும், பிரதமரும் போட்டோ எடுத்து கொண்டனர். இதை தவிர காஞ்சி பட்டுப்புடவை ஒன்றினையும் பிரதமர் மோடி ஜின்பிங்குக்கு பரிசாக தந்தார்.

    ஆக மொத்தம்.. பட்டும், தட்டும் ஒரு பக்கம் பளபளத்து காணப்பட்டாலும், அதிபர், பிரதமரின் நெகிழ்ச்சி தருணங்கள் சில நிமிடங்கள் அங்கு அரங்கேறியதை காண முடிந்தது.

    English summary
    PM Modi and President Xi Jinping at an exhibition on artefacts and handloom at Taj Fisherman's Cove hotel in Kovalam
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X