சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தொண்டர்களை மோடி பார்க்க, மோடியை தொண்டர்கள் பார்க்க.. அடடா.. அமர்க்களப்பட போகிறது சென்னை!

நாளை பிரதமர் மோடி வர உள்ளதால் கூட்டணி கட்சி தொண்டர்கள் திரண்டு வர வாய்ப்புள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: தொண்டர்களை மோடி பார்க்க, மோடியை தொண்டர்கள் பார்க்க.. என நாளை சென்னையே அமர்க்களப்பட போகிறது.

இந்த வருட ஆட்சியில் பாஜகவை திட்டி தீர்க்காத கட்சிகளும் கட்சி தலைவர்களும் இல்லை. தமிழக நலன் மற்றும் வளங்கள் கொள்ளையை சொல்லி, தினம் ஒரு அறிக்கை, தினம் ஒரு பேச்சு, பேட்டி என்றே நீடித்து வந்தது.

இப்போது, அதிமுக தலைமையில் பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகிக்கும் கூட்டணி உருவாகி உள்ளது. அதன் ஒரு கட்டமாக, தேர்தல் பிரச்சாரமும் நாளை சென்னை அருகே நடக்க உள்ளது. இந்த கூட்டத்தில் கட்சி தலைவர்கள் ஒரே மேடையில் நின்று தங்கள் கூட்டணி பலத்தை காட்ட உள்ளனர்.

இறுதி வடிவம் பெற்றது திமுக மெகா கூட்டணி.. மொத்தம் 9 கட்சிகள்.. எந்த கட்சிக்கு எத்தனை சீட்?இறுதி வடிவம் பெற்றது திமுக மெகா கூட்டணி.. மொத்தம் 9 கட்சிகள்.. எந்த கட்சிக்கு எத்தனை சீட்?

குவிய போகிறார்கள்

குவிய போகிறார்கள்

அதேபோல தங்களது தொண்டர்களின் பலத்தை காட்டவும் அந்தந்த கட்சி தலைமை முடிவெடுத்துள்ளது. அதன்படி முக்கிய மற்றும் பிரதான கட்சியான அதிமுக முழு வீச்சில் இறங்கி விட்டது. எங்கிருந்தெல்லாம் ஆட்கள் குவிய போகிறார்களோ தெரியாது, ஆனால் தொண்டர்களின் கூட்டத்தை பார்த்ததும் மோடி அப்படியே உறைந்து நின்றுவிட வேண்டும் என்று அதிமுக நடவடிக்கை எடுத்து வருகிறது.

விமர்சித்த பாமக

விமர்சித்த பாமக

ஆனால் இதைவிட ஒரு படி மேலேபோய்விட்டது பாமக. இந்த வருடம் அதிகமாக மோடியை திட்டியது பாமகதான். நாளைக்கு மோடியை வரவேற்க தன் கட்சி சார்பில் ஒரு அறிக்கையே வெளியிட்டு உள்ளது. பாமக தலைவர் ஜிகே மணி வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் உள்ளதாவது:

ஜிகே மணி அறிக்கை

ஜிகே மணி அறிக்கை

"பாமக வலிமையையும் பறை சாற்றும் வகையில் இந்தப் பொதுக்கூட்டத்தில் பாமகவை சேர்ந்த நிர்வாகிகளும், தொண்டர்களும் பெருமளவில் திரண்டு வந்து பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

கடுகடு மோடி

கடுகடு மோடி

தமிழகத்தில் மோடி கூட்டங்களுக்கு பெரிய அளவில் கூட்டம் கூடுவதில்லை என்று எதிர்க்கட்சிகள் கிண்டலடித்து வருகிறார்கள். ஆனால் நாளைய கூட்டம் படு வித்தியாசமாக இருக்கும். நாளை கூட்டத்தில் பாஜகவினரை விட பல மடங்கு அதிமுக, பாமக கட்சியினர் திரளுவார்கள் என்பதால் பாஜக இதையே தனது பலமாகவும் கருதி மகிழும் வாய்ப்பு கூடி வந்துள்ளது. அத்தோடு, சென்ற முறை கன்னியாகுமரிக்கு மோடி வந்தபோது, கடுகடுவென இருந்ததாக சொல்லப்பட்டது. ஆனால் நாளை தொண்டர்கள் வெள்ளத்தை பார்த்ததும் இதெல்லாம் காணாமல் போகும் என்றே தெரிகிறது.

எப்படியோ மலர்ந்தா சரி.. மோடி முகத்தை சொன்னோமுங்க!

English summary
PM Modi's first meeting in Chennai with Alliance Party volunteers
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X