சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அமெரிக்காவில் நான் தமிழில் பேசியதால் ஊடகங்களில் தமிழ் குறித்த செய்திகள் அதிகம்.. பிரதமர் மோடி

Google Oneindia Tamil News

Recommended Video

    Modi arriving Chennai | சென்னையில் மோடி..முதல்வர், ஓபிஎஸ் வரவேற்பு-வீடியோ

    சென்னை: அமெரிக்காவில் நான் தமிழில் பேசியதால் ஊடகங்களில் தமிழ் குறித்த செய்திகள் அதிகமாக வருகின்றன என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

    சென்னை கிண்டியில் ஐஐடியின் 56-ஆவது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொள்வதற்காக இன்று காலை சென்னை வந்தார். அப்போது அவருக்கு தமிழக அரசு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    PM Narendra Modi says about his speech about Tamil in UNGA

    அப்போது பாஜக சார்பிலும் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. மீனம்பாக்கம் விமான நிலையத்தில் கூடியிருந்த பாஜக மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அவர் பேசுகையில் சென்னைக்கு வருவதில் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.

    ஐஐடி நிகழ்ச்சியில் பங்கேற்க வந்துள்ள என்னை வரவேற்க இவ்வளவு பேர் வந்துள்ளீர்கள். அமெரிக்காவில் தமிழர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். தமிழ் மொழி பழமையான மொழி என அமெரிக்காவில் கூறினேன்.

    சென்னையில் மோடி.. முதல்வர், ஓபிஎஸ் வரவேற்பு.. தம்பித்துரையை தட்டிக் கொடுத்து பேசினார் பிரதமர்!சென்னையில் மோடி.. முதல்வர், ஓபிஎஸ் வரவேற்பு.. தம்பித்துரையை தட்டிக் கொடுத்து பேசினார் பிரதமர்!

    அமெரிக்க ஊடகங்களில் தமிழ் குறித்து அதிக செய்திகள் வருகின்றன. பிளாஸ்டிக் பயன்பாட்டையே நிறுத்துங்கள் என கூறவில்லை. ஒரு முறை பயன்படுத்தும் நெகிழியை பயன்படுத்துவதை நிறுத்துங்கள். இந்தியா பற்றி அமெரிக்காவில் எதிர்பார்ப்புள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றார் மோடி.

    English summary
    PM Narendra Modi says that after i spoke about Tamil in UNGA, tamil related news are published in American journals.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X