சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வணக்கம், வணக்கம் சென்னை, வணக்கம் தமிழ்நாடு.. தமிழில் பேசி உரையை தொடங்கிய மோடி

Google Oneindia Tamil News

சென்னை: வணக்கம், வணக்கம் சென்னை, வணக்கம் தமிழ்நாடு என தமிழில் பேசி தனது உரையை தொடங்கினார் பிரதமர் நரேந்திர மோடி.

Recommended Video

    வணக்கம் சென்னை... பிரதமர் மோடி உற்சாக பேச்சு!

    சென்னையில் ரூ 3,640 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்துள்ளார். நேரு விளையாட்டரங்கத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடி எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுக்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.

    PM Narendra Modi starts his speech in Tamil

    மெட்ரோ ரயில் விரிவாக்கம், ரூ1,000 கோடியில் சென்னை ஐஐடியின் தையூர் டிஸ்கவரி வளாகத்துக்கு அடிக்கல் நாட்டல், கல்லணை கால்வாய் சீரமைப்பு-புதுப்பித்தல் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டல் உள்ளிட்ட திட்டங்களை தொடங்கி வைத்தார்.

    இதையடுத்து வணக்கம், வணக்கம் சென்னை, வணக்கம் தமிழ்நாடு என தமிழில் பேசி தனது உரையை தொடங்கினார் பிரதமர் நரேந்திர மோடி. அவர் பேசுகையில் சென்னைக்கு வருகை தந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். சென்னையில் உற்சாக வரவேற்பு கொடுத்ததற்கு நன்றி.

    சென்னை மாநகரம் அறிவு, ஆற்றல் நிரம்பிய நகரம். பல முக்கியமான உள் கட்டமைப்பு திட்டங்கள் இன்று தொடங்கப்பட்டுள்ளன. புதுமை, உள்நாட்டு உற்பத்திக்கு சாட்சியாக இந்த திட்டங்கள் உள்ளன என்றார் பிரதமர் மோடி.

    நாடாளுமன்றத்தில் கண்ணீர் மல்க உரை.. பிரதமர் மோடி போன்ற ஒப்பற்ற தலைவர்களை காண்பது அரிது.. ஓபிஎஸ் நாடாளுமன்றத்தில் கண்ணீர் மல்க உரை.. பிரதமர் மோடி போன்ற ஒப்பற்ற தலைவர்களை காண்பது அரிது.. ஓபிஎஸ்

    சென்னை வருவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டரில் தமிழில் பதிவு செய்திருந்தார். அந்த ட்வீட்டில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைக்கும் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக நாளை நான் சென்னையில் இருப்பேன். நீர்ப்பாசனத்தை மேம்படுத்துவது, நகர்ப்புற இணைப்பு, பாதுகாப்புத் துறையில் ஆத்மநிர்பார் ஆகியவை இந்தத் திட்டங்களின் மையமாக உள்ளது என தெரிவித்திருந்தார்.

    English summary
    PM Narendra Modi starts his speech in Tamil by saying Vanakkam, Vanakkam Chennai.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X