சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நாட்டு மக்களிடையே 21ம் தேதி உரையாற்றுகிறார் பிரதமர் மோடி.. என்னவாக இருக்கும்?

Google Oneindia Tamil News

சென்னை: வரும் 21ஆம் தேதி நாட்டு மக்களிடையே உரையாற்றவுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

கொரோனா பாதிப்பு காரணமாக அவ்வப்போது நரேந்திரமோடி தொலைக்காட்சியில் தோன்றி உரையாற்றி வந்தார். இப்போது சீனாவுடன் எல்லைப் பிரச்சனை நிலவும் நிலையில் 19ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டத்துக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

Pm Narendra Modi to address the nation on June 21

இந்த நிலையில் 21ம் தேதி அவர் தொலைக்காட்சிகளில் தோன்றி உரையாற்ற உள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அன்றைய தினம், சர்வதேச யோகா தினமாக அனுசரிக்கப்படுகிறது.

யோகா மூலமான சிகிச்சை உள்ளிட்டவை குறித்து அவர் பேசப்போகிறாரா, அல்லது சீன விவகாரம் தொடர்பாக பேசுவாரா என்பது பற்றி பல எதிர்பார்ப்புகள் நிலவுகின்றன.

இந்தியா- சீனா எல்லை பிரச்சினை.. 19ம் தேதி அனைத்து கட்சி கூட்டம்.. பிரதமர் மோடி முக்கிய அழைப்பு இந்தியா- சீனா எல்லை பிரச்சினை.. 19ம் தேதி அனைத்து கட்சி கூட்டம்.. பிரதமர் மோடி முக்கிய அழைப்பு

பேச்சுவார்த்தை மூலமாக எல்லைப் பிரச்சினையை தீர்த்துக் கொள்ள விரும்புவதாக சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது. எனவே மோடி சீன விவகாரம் குறித்து பேசுவதற்கான வாய்ப்பு குறைவு என்கிறது வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள். யோகா குறித்து அவர் பேச உள்ளதாகவே தெரிகிறது.

English summary
PM Narendra Modi will address the nation on June 21 when the world yoga day is celebrating.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X