சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மக்களை தேடி மருத்துவம் மாடலில்.. தேசிய அளவில் வருகிறது பிஎம் ஸ்பெஷல் திட்டம்! 1 லட்சம் பேருக்கு வேலை

Google Oneindia Tamil News

சென்னை: மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை போலவே தேசிய அளவில் வீடு தேடி மருத்துவம் மற்றும் சேவை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த திட்டத்திற்கு பிஎம் ஸ்பெஷல் என்று பெயர் வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்நாட்டில் மக்களை தேடி மருத்துவம் என்று திட்டம் தற்போது செயல்பாட்டில் உள்ளது. தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி இந்த திட்டம் அமலுக்கு வந்தது.

பயனாளிகள் இல்லங்களுக்கு சென்று மருந்து சேவைகள் வழங்கும் இந்த திட்டம் மக்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. பல்வேறு பொதுவான நோய்கள் கொண்ட 45 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு இந்த மருத்துவ சேவை வழங்கப்பட்டு வருகின்றது.

யாரு பாஸ்? ஷாயாஜி ஷிண்டேவா.. அண்ணாமலை பேச்சுக்கு திமுக எம்பி அப்துல்லா பரபரப்பு பதிலடி! யாரு பாஸ்? ஷாயாஜி ஷிண்டேவா.. அண்ணாமலை பேச்சுக்கு திமுக எம்பி அப்துல்லா பரபரப்பு பதிலடி!

 மருத்துவம்

மருத்துவம்

சிறுநீரக பாதிப்பு, உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய்க்கு மருந்து வழங்குதல் போன்ற பல்வேறு மருத்துவ சேவைகள் இந்த திட்டம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. நேரடியாக வீட்டிற்கே சென்று நோயாளிகளை கண்காணிப்பது, அவர்களுக்கு தவறாமல் இலவச மருந்து வழங்குவது உள்ளிட்ட பல்வேறு சேவைகள் இந்த திட்டம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை தமிழ்நாட்டில் 60 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த திட்டம் மூலம் பயன் அடைந்துள்ளனர்.

பிஎம் ஸ்பெஷல்

பிஎம் ஸ்பெஷல்

இந்த நிலையில்தான் இதே போன்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. "பிஎம் ஸ்பெஷல் - 'PM Special" என்ற பெயரில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சீனியர் சிட்டிசன்களுக்கு மருத்துவ சேவையை வீட்டிலேயே வழங்கும் விதமாக இந்த திட்டம் தொடங்கப்பட உள்ளது. நேரடியாக வீட்டிற்கே சென்று குறைந்த விலையில் மருத்துவ சிகிச்சை வழங்கும் விதமாக இந்த திட்டம் உருவாக்கப்பட்டு வருகிறது.

கேர் டேக்கர்

கேர் டேக்கர்

இந்த திட்டத்தின் மூலம் மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோர் முதியவர்களின் வீடுகளுக்கே சென்று மருந்துகளை வழங்குவார்கள். அதோடு முதியவர்களை கவனித்துக்கொள்ளும் விதமாக 1 லட்சம் பேரை கேர் டேக்கர் பணிக்கு எடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. 1 லட்சம் பேர் இந்த திட்டத்தின் கீழ் பணிக்கு அமர்த்தப்பட்டு அடுத்த 3 வருடங்கள் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். சமூக நலத்துறை மூலம் இவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

 எப்படி சேர்வது

எப்படி சேர்வது

இந்த பயிற்சியை பெற ஆன்லைன் மூலம் ரிஜிஸ்டிரேசன் செய்ய வேண்டும். அதற்கு விரைவில் ஆன்லைன் பக்கம் உருவாக்கப்படும். இந்த ஆன்லைன் பக்கத்திலேயே முதியோர்கள் தங்களுக்கு தேவையான கேர் டேக்கர்களை தேர்வு செய்ய முடியும். உதாரணமாக புதிதாக உருவாக்கப்பட உள்ள இணைய பக்கத்தில் ஒரு முதியவர் தனது குறைகளை, பாதிப்புகளை குறிப்பிட முடியம்.

 கேர் டேக்கர் பணி

கேர் டேக்கர் பணி

இதற்கு ஏற்ற கேர் டேக்கர்களை அந்த பக்கத்தில் பார்க்க முடியும். அதில் உங்களுக்கு பிடித்தமான நபர்களை தேர்வு செய்ய முடியும். ஆப்களில் டாக்டர்களுக்கு முன் பதிவு செய்வது போலவே பிஎம் ஸ்பெஷல் திட்டம் மூலம் கேர் டேக்கர்களை புக் செய்ய முடியும். செப்டம்பர் மாதம் இந்த இணைய பக்கம் தொடங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தில் கேர் டேக்கராக இணைய 12ம் வகுப்பு அல்லது அதற்கு மேல் படித்திருக்க வேண்டும். இதில் எஸ், எஸ்டி, ஓபிசி, பிரிவினர் 10 ஆயிரம் பேருக்கு இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளது.

English summary
PM Special scheme to give medical assistance to senior citizens : 1 Lakh to get jobs. மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை போலவே தேசிய அளவில் வீடு தேடி மருத்துவம் மற்றும் சேவை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X