சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அதிமுகவுக்கு "மாம்பழம்" இனிக்குது.. "முரசு" மட்டும் கசக்குதோ.. விசனத்தில் "கேப்டன்" கட்சி..!

Google Oneindia Tamil News

Recommended Video

    Vellore constituency | அதிமுகவுக்கு 'மாம்பழம்' இனிக்குது.. 'முரசு' மட்டும் கசக்குதோ- வீடியோ

    சென்னை: தேர்தலுக்கு முன்பு இருந்தது போல இல்லையாம் அதிமுக.. இப்ப ரொம்பவே மாறிவிட்டதாம். அதனால்தான் எங்களை கண்டு கொள்வதே இல்லை என பாமக ஒரு பக்கம் குமுறுகிறது.. தேமுதிக மற்றொரு பக்கம் பொருமுகிறது!

    எம்பி தேர்தலுக்கு முன்பு வரை அதிமுகவுக்கு விழாத கெட்ட பெயரே இல்லை. கஜா புயல், அமைச்சர்களின் ஊழல் புகார், சட்டம் ஒழுங்கு பிரச்சனை என ஏராளமான காரணங்களால் மக்கள் மிகவும் அதிருப்தியாக இருந்தனர்.

    இதன்காரணமாகவே அதிமுகவுடன் கூட்டணிக்கு முதலில் தயங்கிய கட்சிகள் பிறகு மெல்ல மெல்ல வந்து இணைய துவங்கியது. பாமக வந்ததுமே மெகா கூட்டணி என்ற பிம்பம் உருவானது. என்ன இருந்தாலும் மக்கள் தீர்ப்பு வேறாக இருந்தது.

    முதலாளி வேலையை விட்டு நீக்கினார்.. முதல்வரை கடத்த போறதா மிரட்டினேன்.. சிக்கிய ரஹமதுல்லா! முதலாளி வேலையை விட்டு நீக்கினார்.. முதல்வரை கடத்த போறதா மிரட்டினேன்.. சிக்கிய ரஹமதுல்லா!

    தேமுதிக

    தேமுதிக

    பாஜக, தேமுதிக, பாமக, உள்ளிட்ட கட்சிகள் ஒவ்வொரு காரணத்தை முன் வைத்து அதிமுகவில் கூட்டணி வைத்தனர். ஆனால் தேர்தல் முடிவுக்கு பிறகு இவர்கள் யாருமே பெரிய அளவில் பிரதிபலிக்கவில்லை என்றாலும், கடந்த 2 மாதமாக அதிமுகவின் செல்வாக்கு மட்டும் வேறு மாதிரியாக உள்ளது.

    வன்னியர்கள்

    வன்னியர்கள்

    இதன்காரணமாக, கூட்டணி கட்சிகளை புறக்கணிப்பதாகவும் ஒரு பேச்சு எழுந்துள்ளது. இப்போதைக்கு இவர்களின் கவனம் வேலூர் தேர்தல்தான். துரைமுருகனுக்கு எதிராக, வன்னியர்களின் ஓட்டுக்களை அதிமுக பக்கம் இழுப்பது அவசியம் என்பதால், அன்புமணிக்கு ராஜ்ய சபா சீட் தந்து கூல் செய்தது.

    முக்கியத்துவம்

    முக்கியத்துவம்

    இருந்தாலும், அதிமுக & ஏசிஎஸ் டீம் எங்களை மதிப்பதில்லை என்கிறார்கள் பாமகவினர். ஆனால் எப்பவுமே பாமகவுடன் போட்டி போடும் தேமுதிகவினரோ, "அவங்களுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறார். எங்களை கண்டுகொள்வதே இல்லை" என்கிறார்கள். இதற்கு நடுவில், "உங்களையாவது பரவாயில்லை.. எங்களை முன்பிருந்தே மதிப்பதில்லை, தொகுதியில் நிறைய இஸ்லாமியர்கள் உள்ளதால், அவர்களின் வாக்குகளை பெற எங்களை புறக்கணிக்கிறார்கள் என்கிறது பாஜக தரப்பு.

    பாமக

    பாமக

    என்னதான் ஏசி சண்முகத்துக்கு முதலியார் சமூக வாக்குகள் இருந்தாலும், வன்னியர் வாக்குகளும் தேவைதானே.. இதற்கு தேமுதிக, பாமக இரு தரப்பினரையும் அரவணைத்தும், முக்கியத்துவம் கொடுத்து போவதும் என்கிறார்கள் விவரமறிந்த அரசியல் நோக்கர்கள்!

    English summary
    AADMK candidate AC Shanmugam is said to be ignoring the PMK and DMDM executives in the Vellore consititution
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X