சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மேஜிக் காட்ட தயாராகும் அதிமுக.. அதிரடி திட்டங்கள்.. உள்ளாட்சியை மொத்தமாக அள்ள செம பிளான்!

தேமுதிக, பாமகவின் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகுமா என தெரியவில்லை

Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு

    சென்னை: உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில், அதிமுக கூட்டணி கட்சிகளின் நிலை, தொகுதிகள், ஒதுக்கீடுகள் பற்றின நிலைமை என்னவென்று உறுதியாக தெரியவில்லை.. இதில், பாமகவுக்கு ஒதுக்கப்படும் அளவு, தேமுதிகவுக்கு ஒதுக்கப்படுமா? அல்லது பாஜகவுக்கு கிடைக்குமா என்பதும் பெருத்த எதிர்பார்ப்பாக எழுந்துள்ளது.

    உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா ஏற்கனவே தெரிவித்து விட்டார். ஆனால், இதனை அதிமுக விரும்புமா என்றுதான் தெரியவில்லை.

    ஏற்கனவே எம்பி தேர்தலில் பாமகவுக்கு ஈடாக டஃப் கொடுத்து சீட் கேட்டு கடுமையான நெருக்கடி தந்தது தேமுதிக.. ஆனால், வாங்கிய 4 தொகுதிகளிலும் சரிவை கண்டது. "தனியாவே நின்றிருக்கலாம்.. கூட்டணி வைத்திருக்க தேவையில்லை" என்று தேமுதிக மா.செ.க்கள் பெரும்பாலானோர் சொல்லி வரும் நிலையில், பிரேமலதா இப்போது இவ்வாறு கூறியுள்ளார்.

    விசிகவினர் என்னை கேவலமாக திட்டினர்.. மத வெறி தூண்ட கூடாது.. காயத்ரி மீண்டும் கட் அன்ட் ரைட் பேச்சு!விசிகவினர் என்னை கேவலமாக திட்டினர்.. மத வெறி தூண்ட கூடாது.. காயத்ரி மீண்டும் கட் அன்ட் ரைட் பேச்சு!

    பாமக

    பாமக

    ஆனால், தேமுதிகவை இழுத்து கொண்டு இனியும் பயணம் செய்ய வேண்டுமா என அதிமுக யோசித்து வருவதாக கூறப்படுகிறது. இடைத்தேர்தலில் பளிச்சிட்ட பாமகவின் செல்வாக்கினை அப்படியே இந்த முறை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ளவும் அதிமுக நினைக்கிறது.

    மாநகராட்சிகள்

    மாநகராட்சிகள்

    எப்படியும் பாமக தரப்பில் கூடுதல் சீட், முக்கிய மாநகராட்சிகள் கேட்டு வரும் நிலையில், அதற்கு அதிமுக சம்மதித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கிறார்கள். பாமக தனது கட்சியை வலுவாக வைத்துள்ளது.. வாக்கு வங்கியை உயர்த்தி காட்டி தனது செல்வாக்கை நிரூபித்துள்ளது.. இதனால் பாமக மட்டும் போதும் என அதிமுக நினைப்பதாகவும் ஒரு பேச்சு எழுந்துள்ளது.

    செல்வாக்கு

    செல்வாக்கு

    ஆனால் அதே சமயத்தில், மறைமுக தேர்தல் என்ற விஷயத்தில் பாமகவுக்கு அதிமுக மீது ஒரு அதிருப்தி இருப்பதாகவும் தெரிகிறது. அதனால் எதிர்பார்க்கக்கூடிய இடங்களை அதிமுக ஒதுக்கும் பட்சத்தில் இந்த அதிருப்தி அடங்கியே போகும் என்கிறார்கள். இதுவே தேமுதிகவை கட்சி அவ்வளவு செல்வாக்காக இல்லை.. ஒருவேளை விஜயகாந்த்தை வேலூர் கூட்டி வந்து, பிரச்சாரத்தில் பிரேமலதா ஈடுபட வைக்க முயன்றாலும், அக்கட்சி எதிர்பார்க்கக்கூடிய தொகுதிகளை அதிமுக தருமா என்பது சந்தேகம் என்கிறார்கள்.

    பரிந்துரைகள்

    பரிந்துரைகள்

    போன எம்பி தேர்தலிலேயே பாஜகவின் தலையீட்டாலும், பரிந்துரையாலும்தான் தேமுதிகவை கூட்டணிக்கு உள்ளே இழுத்து போட்டது அதிமுக... இப்போது பாஜகவுடன், சுமூக போக்கு குறைந்துள்ளதா, கூடியுள்ளதா என்று தெரியாத பட்சத்தில் தேமுதிகவை பற்றி பெரிதாக அதிமுக எடுத்து கொள்ளுமா என தெரியவில்லை.

    விஜயகாந்த்

    விஜயகாந்த்

    அதிமுகவை பொறுத்தவரை பாமக தனது வாக்கு வங்கியை நிரூபித்து விட்டது. தேமுதிகவைப் பொறுத்தவரை அப்படி இல்லை. தடுமாற்றத்துடன்தான் உள்ளது. தனித்து நின்றால் எந்த பாதிப்பையும் ஏற்படுத்த முடியாத அளவுக்கு அது தேய்ந்து போய் விட்டது. விஜயகாந்த் என்ற முகம் மட்டுமே அவர்களின் ஒரே பலம். ஆனால் பாமக அப்படி இல்லை. பலமுனைகளிலும் அது இன்னும் பராக்கிரமசாலியாகவே உள்ளது. எனவே அதிமுகவின் விருப்ப சாய்ஸ்.. பாமக என்றே சொல்கிறார்கள்.

    பொங்கல் பரிசு

    பொங்கல் பரிசு

    இந்த உள்ளாட்சி தேர்தலில் முழுக்க முழுக்க தன் கட்சியினருக்கே முக்கியத்துவம் தந்து வலிமையை நிலைநாட்ட அதிமுக பெருமளவு முயன்று வருகிறது. இதற்கு அடுத்த கட்டத்தில் பாமக இருக்குமே தவிர, பாஜக, தேமுதிக போன்ற கூட்டணி கட்சிகளுக்கு எதிர்பார்த்தது கிடைக்குமா என்பது சந்தேகம்தானாம்! இருந்தாலும் பொங்கல் பரிசு உட்பட பலவித யுக்திகளை கையாண்டு வரும் அதிமுகவின் மேஜிக்கில் எதுவேண்டுமானாலும் நடக்கும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்!

    English summary
    It is not known whether dmdk will join the AIADMK alliance and the expected number of constituencies in the local body election
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X