சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தைலாபுரம் விருந்தின்போது இருந்த மகிழ்ச்சி, குஷி மிஸ் ஆயிருச்சாமே.. டென்ஷனில் பாமக!

தொகுதிகள் ஒதுக்கீடு விஷயத்தில் பாமக, தேமுதிக இன்னமும் மீள முடியாமல் உள்ளன.

Google Oneindia Tamil News

Recommended Video

    பாமகவின் கோரிக்கையான மதுவிலக்கு குறித்து எந்த அறிவிப்பும் இல்லை

    சென்னை: தைலாபுர விருந்தின்போது இருந்த குஷி, தெம்பு, சிரிப்பு என அத்தனையும் இப்போது பாமக தரப்பில் மிஸ்ஸிங்!

    கூட்டணி வைத்த சில நாட்களுக்குள் அதிமுக-வும் பாமகவும் பின்னிப்பிணைந்து காணப்பட்டன. தோட்டத்துக்கு அழைத்து மட்டன், சிக்கன் என விருந்து வைத்து, விருந்து முடிந்தவுடன் "மொய்" சம்பந்தமான விஷயங்கள் பேசி முடிக்கும்வரை இரு தரப்புமே மிக்க மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர்.

    ஆனால் எப்போது தேமுதிக அதிமுக கூட்டணிக்குள் வந்ததோ, எப்போது தொகுதிகள் அக்கட்சிக்கு ஒதுக்கப்பட்டனவோ அப்போதே ராமதாஸின் தெம்பு போயே போச்சு!

    DMK vs PMK: திமுக vs பாமக நேருக்கு நேர் மோதும் லோக்சபா தொகுதிகள் & வேட்பாளர்கள் DMK vs PMK: திமுக vs பாமக நேருக்கு நேர் மோதும் லோக்சபா தொகுதிகள் & வேட்பாளர்கள்

    சலசலப்பு

    சலசலப்பு

    இன்னொரு விஷயம்.. பாமக அதிமுக கூட்டணிக்கு போன அன்றைய தினமே... அன்புமணியிடம் இருந்து சிரிப்பு விடைபெற்று இறுக்கம் தென்பட ஆரம்பித்துவிட்டது. தொகுதி பட்டியல் அறிவிப்புக்கு தேமுதிக, பாமக என இரு தரப்புமே வராதபோதே ஒரு சலசலப்பை இது ஏற்படுத்தியது.

    தமிழிசை விளக்கம்

    தமிழிசை விளக்கம்

    ஆனால் "அவங்க ரெண்டு பேரும் உடன்படிக்கையில் ஏற்கனவே கையெழுத்து போட்டுட்டாங்க. அதான் இன்னைக்கு வரலை" என்று விளக்கம் தந்தார் இதற்கு சம்பந்தமே இல்லாத தமிழிசை சவுந்தராஜன்! இருந்தாலும் உண்மை காரணம் தொகுதிகள் பிரச்சனைதான்.

    [குற்றப் பின்னணி கொண்ட எம்.பிக்கள்.. ஒரு விறுவிறு தகவல் தொகுப்பு]

    மிரண்ட கட்சிகள்

    மிரண்ட கட்சிகள்

    எங்களுக்கு வடசென்னை வேண்டவே வேண்டாம் என்றது தேமுதிக. ஆனால் அதைதான் ஒதுக்கியது அதிமுக. எங்களுக்கு திண்டுக்கல் வேண்டவே வேண்டாம் என்றது பாமக. ஆனால் அதைதான் ஒதுக்கியது அதிமுக. இந்த இரண்டு கட்சிகளுமே வட மாவட்டத்தில் வலுவான கட்சிகள். இந்த தொகுதிகளை தந்தால் எப்படி வெற்றி பெறுவது என்று அரண்டு போய்விட்டனவாம் இக்கட்சிகள். அதைவிட கொடுமை, இந்த தொகுதிகளுக்கு வேட்பாளர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதுதானாம்.

    ஜோதிமுத்து

    ஜோதிமுத்து

    "என்னது.. திண்டுக்கல் தொகுதியா.. வுடு.. ஜூட்" என்ற ரேஞ்சில் ஓட்டம் பிடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். ஒரு முக்கியமான வேட்பாளரை ராமதாஸ் போனில் அழைத்தபோது அவர் செலவுக்கு நீங்க பொறுப்புன்னா போட்டிக்கு நான் ரெடி என்று கூற அது டீல் ஆகாமல், கடைசியில் ஜோதிமுத்து சிக்கி வேட்பாளராகி விட்டார். அன்று "நான் நீ" என வேட்பாளர்களில் போட்டி போய், இன்று கிடைத்த வேட்பாளர்களை வைத்து அறிவிக்க வேண்டிய நிலைமை இந்த கட்சிக்கு ஏற்பட்டு விட்டதே என்று தொண்டர்கள் கலக்கமாகி இருக்கிறார்களாம்!

    English summary
    The PMK and the DMDK Parties are yet to be dissatisfied with the allocation of the constituencies.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X