சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"பாரு.. பாரு.. சுவர் விளம்பரத்துக்கு அடித்துக் கொள்ளும் பாஜக - திமுக".. ராமதாஸ் போட்ட கிண்டல் ட்வீட்

திமுக-பாஜக மோதல் குறித்து டாக்டர் ராமதாஸ் ட்வீட் பதிவிட்டுள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: "பாரு, நீ பாரு.. கொரோனாவால் ஒட்டுமொத்த மாநிலமும் பாதிக்கப்பட்டு, போராடி கொண்டிருக்கும் நிலையில் சுவர் விளம்பரத்திற்காக அடித்துக் கொள்ளும் அவலத்தை நீ பாரு!" என்று திமுக-பாஜகவினர் இடையே ஏற்பட்ட மோதல் குறித்து டாக்டர் ராமதாஸ் கிண்டலாக ஒரு ட்வீட் போட்டுள்ளார்.

சென்னை நங்கநல்லூர் பகுதியில், ஒரு தனியார் சுவற்றில் விளம்பரம் எழுதுவது தொடர்பாக பாஜக மற்றும் திமுகவினரிடையே மோதல் ஏற்பட்டது.. பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு பாஜகவினர் அந்த சுவற்றில் விளம்பரம் செய்திருந்தனர்.

பிறந்தநாள் முடிந்ததும் சுவர் விளம்பரத்தை திமுகவினர் அழித்துவிட்டு, அதில் தங்கள் கட்சியின் விளம்பரம் எழுதினர்... இதை பார்த்த பாஜகவினர் அந்த விளம்பரத்தை அழிக்க முயன்றனர்... விஷயம் அறிந்து திமுகவினர் சுவர் பகுதியில் குவிந்துவிட்டனர்.

இந்தியாவில் சபிக்கப்பட்ட சமுதாயம் என்றால்... அது உழவர்கள் தான்... ராமதாஸ் வேதனை இந்தியாவில் சபிக்கப்பட்ட சமுதாயம் என்றால்... அது உழவர்கள் தான்... ராமதாஸ் வேதனை

 பாஜக மகளிர் நிர்வாகிகள்

பாஜக மகளிர் நிர்வாகிகள்

இதனால் இரு தரப்பினரும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, மோதலும் நடந்தது.. இது சம்பந்தமாக 2 பாஜக மகளிர் நிர்வாகிகள் உட்பட 3 பேர் படுகாயமடைந்தனர்.. அவர்களுக்கு சிகிச்சை நடந்து வருகிறது.. மோதலில் ஈடுபட்ட திமுக வட்டசெயலாளரிடம் விசாரணையும் நடந்து வருகிறது. இன்னொரு பக்கம் தமிழக பாஜக, திமுகவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.

 ராமதாஸ் ட்வீட்

ராமதாஸ் ட்வீட்

இந்நிலையில், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இதை பற்றி ஒரு ட்வீட் போட்டுள்ளார்.. அதில், "சென்னையில் சுவர் விளம்பரம் எழுதுவதில் திமுக - பாஜக மோதல்: செய்தி - நாடு, நாடு இது எங்கள் தமிழ்நாடு. பாரு, நீ பாரு.... கொரோனாவால் ஒட்டுமொத்த மாநிலமும் பாதிக்கப்பட்டு, போராடிக் கொண்டிருக்கும் நிலையில் சுவர் விளம்பரத்திற்காக அடித்துக் கொள்ளும் அவலத்தை நீ பாரு!" என்று பதிவிட்டுள்ளார்.

 அட்வைஸ்

அட்வைஸ்

இரு கட்சிகளும் சண்டை போட்டு கொள்வதை கிண்டல் செய்யும் விதமாகவே டாக்டர் ராமதாஸ் இந்த பதிவை போட்டுள்ளதாக தெரிகிறது... கொரோனா காலத்தில், தமிழக மக்களுக்கு உரிய அட்வைஸ் தந்து கொண்டிருந்தது டாக்டர் ஐயாதான்.. தமிழக அரசுக்கு உரிய ஆலோசனையும், சென்னை மக்களுக்கு விழிப்புணர்வையும் கடந்த 5 மாதங்களில் விடாமல் வலியுறுத்தி கொண்டே இருந்ததை மறுக்க முடியாது.

கூட்டணி

கூட்டணி

எனினும், ராமதாஸின் இந்த ட்வீட்டுக்கு விமர்சனமும், ஆதரவும் மாறி மாறி வந்து கொண்டிருக்கின்றன.. "மருத்துவர் ஐயா, தன் கூட்டணி கட்சி என்றும் பாராமல் விமர்சனம் செய்யும் துணிவு யாருக்கு இருக்கும், நல்லா கேளுங்க ஐயா... 7 ஆண்டு மத்தியில் ஆளும் கட்சி செய்யும் வேலையா இது... 10 ஆண்டு ஆட்சியில் இல்லாத ஒரு மாநில கட்சியிடம் செய்யும் வேலையா இதுன்னு இன்னும் நல்லா கேளுங்க ஐயா" என்று ஒருவர் பாராட்டி தள்ளி உள்ளார்.

 உட்கட்சி

உட்கட்சி

அதேபோல, "தேர்தல் சமயத்தில் பொன் பரப்பி கிராமத்தில் உள்ள அப்பாவி தலித் மக்கள் வீடுபுகுந்து அடித்தும் வீட்டை உடைத்தும் உங்கள் கட்சி செய்த கொடுமையை விட பெரிய தப்பு நடக்கல. நாடு, நாடு இது எங்கள் தமிழ்நாடு" என்ற எதிர் விமர்சனமும் எழுந்தபடியே உள்ளது.

English summary
PMK Dr Ramadoss criticized about BJP and DMK clash
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X