சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரூ.5000 குடுங்க.. மூடு.. மூடு.. மூடு.. காப்பாற்று காப்பாற்று.. ராமதாஸ் வைத்த 3 கோரிக்கை

முழு ஊரடங்கு அமல்படுத்த வேண்டும் என ராமதாஸ் கோரியுள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: நாளை காலையில் முக ஸ்டாலின் முதல்வராக பதவியேற்க உள்ள நிலையில், டாக்டர் ராமதாஸ் தமிழக அரசுக்கு 3 கோரிக்கைகளை விடுத்துள்ளார்.

நாளுக்கு நாள் கொரோனாவின் கொடூரம் அதிகமாகி வரும்நிலையில், திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் அடுத்தடுத்து 4 நோயாளிகள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை தந்து வருகிறது.

நேற்றிரவு 10 முதல் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆக்சிஜன் கிடைக்காமல் இங்குள்ள கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த 11 கொரோனா நோயாளிகள், நள்ளிரவிலேயே அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர்.. ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவர்கள் உயிரிழந்ததாக உறவினர்களும் குற்றம் சாட்டியுள்ளனர்.

12 மணியோடு டாஸ்மாக் குளோஸ்.. குடிகாரர்கள் சோகம்.. மற்ற எல்லோருக்கும் 12 மணியோடு டாஸ்மாக் குளோஸ்.. குடிகாரர்கள் சோகம்.. மற்ற எல்லோருக்கும் "சியர்ஸ்" குளிர்வித்த ஸ்டாலின்!

ஆக்ஸிஜன்

ஆக்ஸிஜன்

இந்த சமயத்தில்தான் திருப்பத்தூர் ஆஸ்பத்திரியில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.. இங்கும் இதே ஆக்ஸிஜன் தட்டுப்பாடுதான் காரணமாக சொல்லப்படுகிறது.. திமுக தலைவர் ஸ்டாலின், நாளைய தினம் தான் பதவியேற்கிறார் என்றாலும், கடந்த 4 நாட்களாகவே தீவிரமான கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் இறங்கி வருகிறார்.. அதிகாரிகளிடமும் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

ராமதாஸ்

ராமதாஸ்

இதனிடையே, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ட்வீட்களை பதிவிட்டு, சில கோரிக்கைகளையும் தமிழக அரசிடம் எழுப்பி உள்ளார்.. அந்த ட்வீட்கள் இவைதான்: "திருப்பத்தூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் இன்று காலை அடுத்தடுத்து 4 கொரோனா நோயாளிகள் உயிரிழந்திருப்பது மிகவும் வேதனையளிக்கிறது. இந்த உயிரிழப்புகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை தான் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்!

 பற்றாக்குறை

பற்றாக்குறை

தமிழ்நாடு முழுவதும் ஆக்சிஜன் பற்றாக்குறையும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருவது மிகவும் கவலையளிக்கிறது. மிகவும் நெருக்கடியான இந்தக் காலகட்டத்தில் தமிழக அரசு கூடுதல் வேகத்தில் செயல்பட்டு மக்களைக் காப்பாற்ற வேண்டும்! தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவலில் இருந்து மக்களைக் காப்பாற்ற முழு ஊரடங்கை கடுமையாக நடைமுறைப்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை. அதனால் உடனடியாக முழு ஊரடங்கை நடைமுறைப்படுத்த வேண்டும்; ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.5000 வழங்க வேண்டும்!

 ராமதாஸ்

ராமதாஸ்

மூடு... மூடு... மூடு... தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூடு. காப்பாற்று..... காப்பாற்று..... காப்பாற்று..... கொரோனா தொற்றிலிருந்து தமிழ்நாட்டு மக்களைக் காப்பாற்று!" என்ற அடுத்தடுத்து 4 ட்வீட்களை பதிவிட்டுள்ளார். இந்த ட்வீட்டுக்கு பலரும் திரண்டு வந்து கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.. "இவளோ நாள் செத்தது கண்ணுக்கு தெரியல இப்போதான் தெரியுதா? இவளோ நாள் எங்க இருந்தார்? என்றும், அதிமுக ஆதரவு கொடுத்ததின் மூலம் தாங்கள் கேள்வி கேட்கும் தகுதியை இழந்தீர்கள்" என்றும் டாக்டர் ஐயாவை கேள்வி கேட்டு வருகிறார்கள்.

 அம்மா உணவகம்

அம்மா உணவகம்

ஏற்கனவே, 2 நாட்களுக்கு முன்பு, அம்மா உணவகத்தை திமுகவினர் அடித்து நொறுக்கியிருந்தனர்.. இந்த சம்பவத்துக்கும் டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்திருந்தார்.. "எது நடந்து விடக் கூடாது என்று மக்கள் அஞ்சினார்களோ அத்தகைய செயல்களில் திமுகவினர் ஈடுபடுவதை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்" என்று காட்டமாகவே கூறியிருந்தார்.

கோரிக்கை

கோரிக்கை

இப்போது, ஆக்ஸிஜன் பிரச்சனை, லாக்டவுன் போட வேண்டும், 5000 ரூபாய் அனைவருக்கும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை தமிழக அரசுக்கு விடுத்துள்ளார். ஆனால், இந்த சம்பவத்தில் திடீரென டாஸ்மாக்கை மூடும்படி மற்றொரு கோரிக்கையையும் நுழைத்துள்ளார் டாக்டர் ராமதாஸ்..!

English summary
PMK Dr Ramadoss insisted on the need for a full Curfew
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X