• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

யாரு "அந்த ஆள்".. குத்துதா.. குடையுதா.. வயிறு எரியுதா.. 18 இடங்கள்.. ராமதாஸ் நறுக்கென கேட்பது யாரை?

|

சென்னை: "ஓட்டு போட்ட அன்றைக்கு மாம்பழக் கட்சி 13 இடத்துல ஜெயிச்சிடும்னு தகவல் கேட்டு பலருக்கும் எரிச்சல் எனக்கு கிடைத்திருக்கிற தகவல்படி மாம்பழக் கட்சி 16 முதல் 18 இடங்களில் ஜெயிக்குமாம். மே 2ஆம் தேதி இது நிஜமாகும் போது பலருக்கும் இன்னும் அதிகமா எரியும்" என்று டாக்டர் ராமதாஸ் பதிவிட்டுள்ளார். இதையடுத்து, ராமதாஸின் இந்த பதிவு விவாதத்தை கிளப்பி வருகிறது.

வடமாவட்டங்களின் வன்னியர் ஓட்டுக்கள் அப்படியே, திரும்பி அதிமுக கூட்டணி பக்கம் விழும் என்ற மனக்கணக்கு போட்டுதான் பாமக - அதிமுக இடஒதுக்கீட்டு முடிவு எடுக்கப்பட்டது.

ஆனால், இந்த இடஒதுக்கீட்டினால், பிற சமூகத்தினர் வடமாவட்டங்களில் அதிருப்தியில் இருக்கிறார்கள் என்ற தகவல் வெளியானது. இது தென்மண்டலங்களில் எதிரொலித்ததாகவும் சொல்லப்பட்டது.

 பெரும்பான்மை

பெரும்பான்மை

இதனிடையே வந்த கருத்து கணிப்புகளில், வடமாவட்டங்களில் திமுகவுக்கு பெரும்பான்மை வெற்றி கிடைக்கும் என்று கூறப்பட்டது.. வாக்குப்பதிவுக்கு பிறகும் இதே கருத்துதான் சொல்லப்பட்டது. அதற்கு காரணம், பாமகவின் ஓட்டுகள் அதிமுகவுக்கும், அதிமுகவின் வாக்குகள் பாமகவுக்கும் டிரான்ஸ்பர் ஆகி இருப்பதாகவும், எப்படியும் 4 சீட்களை பாமக பிடித்து விடும் என்ற தகவல்களும் வந்தன.

 இரட்டை கொலை

இரட்டை கொலை

இதனிடையே, அரக்கோணம் இரட்டை கொலை விஷயத்தில் திருமாவளவன் அதிமுக - பாமக கூட்டணியையே பகிரங்கமாக சாடி இருந்தார். அதுமட்டுமல்ல, "அரக்கோணத்தில் ஆளும் தரப்பு படுதோல்வியை சந்திக்க காத்திருக்கிறார்கள்.. அதிமுக பாமக - பாஜக கூட்டணிக்கு உரிய பாடத்தை செலுத்தும் தேர்தலாக இது அமைந்திருக்கிறது.

 பானை சின்னம்

பானை சின்னம்

வாக்குச்சாவடிகளிலேயே தலித் இல்லாத மக்களும் பானை சின்னத்துக்கு வாக்களித்துவிட்டு, வெளிப்படையாகவே பானை சின்னம் வெற்றி பெறும் என்று பேசியிருக்கிறார்கள். அதனால்தான் பொறுத்து கொள்ள முடியாமல் இந்த கொலை நடந்துள்ளது என்று கூறியிருந்தார். இப்படிப்பட்ட சூழலில்தான் ராமதாஸ், ஒரு பதிவு போட்டுள்ளார்.. அதன் சுருக்கம் இதுதான்:

 புலம்பல்

புலம்பல்

"அந்த ஆளிடம் போய் யாரோ பாமக 12, 13 இடத்துல ஜெயிச்சுடும்னு சொல்லிட்டாங்க போலிருக்கு. அதைக் கேட்டதிலிருந்து அந்த ஆளு ஒரே புலம்பல்.. அவர் வீட்டிலிருந்து ‘‘அய்யோ குத்துதே, குடையுதே, வயிறு எரியுதேன்னு'' ஒரே கூச்சல் சத்தம் வருது.. ஐயா 10.50% இட ஒதுக்கீடு வாங்கிக் கொடுத்துட்டாராம். அதனால வன்னியர்கள் எல்லாம் முன்னேறி விடுவாங்களாம். அவங்க எல்லாம் படிச்சி, வேலைக்கு போயிட்டா நம்மளுக்கு வேலை செய்ய யார் இருப்பாங்கங்க என்பது தான் எரிச்சலுக்கு காரணமாம்.

 மாம்பழம்

மாம்பழம்

மாம்பழக் கட்சி 12, 13 இடத்துல ஜெயிச்சி சட்டசபைக்கு போயிட்டா அந்தக் கட்சி சொல்றது எல்லாமே நடக்குமாம். அது தான் அவரது வயிற்றுப் புகைச்சலுக்கு காரணமாம்.வன்னியர்கள வச்சி தான் அந்த ஆளு இவ்வளவு நாள் பிழைப்பு நடத்திகிட்டு இருந்தாரு. . எனக்கு கிடைத்திருக்கிற தகவல்படி மாம்பழக் கட்சி 16 முதல் 18 இடங்களில் ஜெயிக்குமாம். மே 2ம் தேதி இது நிஜமாகும் போது அந்த ஆளுக்கு இன்னும் அதிகமா எரியும்" என்பதே ராமதாஸின் பதிவின் சாராம்சம்.

 யார்?

யார்?

இப்போது பிரச்சனை ராமதாஸ் யாரை குறிப்பிடுகிறார்? வன்னியர்களை வைத்து பிழைப்பு நடத்தியது யார்? யாருக்கு வயிறு எரியுது? இதுதான் இப்போது சந்தேகமாக எழுந்துள்ளது.. இவராக இருக்குமோ? ஒருவேளை அவராக இருக்குமோ? என்பதற்கு ஆப்ஷன்களே இல்லை.. இப்போது டாக்டர் யாரை சொல்கிறார் என்று வெளிப்படையாக தெரியாவிட்டாலும், இதை தமிழகமே ஓரளவு யூகிக்க முடியும் என்பதே உண்மை... இதற்கு ஏதாவது எதிர்தரப்பில் பதில் வருகிறதா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

English summary
PMK Dr Ramadoss Statement about TN Assembly Election result
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X