சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாட்ஷாவா, மாணிக்கமா.. சாராய ஆலை அதிபர் வேணுமா? இந்த டாக்டர் வேணுமா? முடிவெடுங்க.. ராமதாஸ்!

ஸ்ரீபெரும்புதூர் பிரச்சார கூட்டத்தில் ராமதாஸ் முக ஸ்டாலினை கடுமையாக விமர்சித்தார்.

Google Oneindia Tamil News

சென்னை: "சாராய ஆலை அதிபர் வேணுமா? டாக்டர் வேணுமா? முடிவெடுங்க"என்று ஸ்ரீபெரும்புதூரில் பாமக வேட்பாளர் டாக்டர் வைத்தியலிங்கத்துக்கு ஆதரவாக டாக்டர் ராமதாஸ் பிரச்சாரம் செய்தார்.

பாமக நிறுவனர் ராமதாஸ், ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர் ஆகிய மக்களவை தொகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

ஸ்ரீபெரும்புதூரில் பாமக வேட்பாளர் டாக்டர் வைத்தியலிங்கமும் திருவள்ளூரில் தொகுதி மற்றும் பூந்தமல்லி சட்டப்பேரவை தொகுதியின் அதிமுக வேட்பாளர்களான டாக்டர் வேணுகோபால், வைத்தியநாதன் ஆகியோருக்காக பிச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:

நாடாளுமன்றத் தேர்தல் 2019... கருத்துக் கணிப்புகளை வெளியிட தேர்தல் ஆணையம் தடை நாடாளுமன்றத் தேர்தல் 2019... கருத்துக் கணிப்புகளை வெளியிட தேர்தல் ஆணையம் தடை

பாமக போராட்டம்

பாமக போராட்டம்

விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலத்தை கையகப்படுத்தினால் 4,000 குடும்பங்கள் பாதிக்கப்படும் என்பதால் அதை நான் எதிர்த்தேன். அதோடு பல்லாவரம் அருகே பாமக சார்பில் போராட்டமும் நடத்தினேன். அதேபோல, துணை நகர திட்ட அறிவிப்புக்கும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி அந்த திட்டத்தையே திரும்ப பெற செய்தேன்.

கருணாநிதி

கருணாநிதி

எப்ப பார்த்தாலும் ஸ்டாலினுக்கு முதல்வர் கனவுதான். கார்ப்பரேட் நிறுவனமாக மாறிவிட்டது திமுக. திமுகவின் கடைசி முதல்வர் கருணாநிதிதான். இனிமேல் வேறு யாருமே திமுகவிலிருந்து முதல்வர் பதவிக்கு வர முடியாது.

மதுக்கடைகள்

மதுக்கடைகள்

மதுவிலக்கு அமலில் இருந்தபோது, திரும்பவும் தமிழ்நாட்டுக்கு அதை கொண்டு வந்தது திமுகதான். 23 வருஷமா மது என்றால் என்ன என்றே மக்கள் தெரியாமல் இருந்தனர். ஆனால் கருணாநிதிதான் மதுக்கடைகளை திறந்தார்.

நமது வேட்பாளர்

நமது வேட்பாளர்

தனது சொந்த ஊரான தஞ்சாவூரில் டி.ஆர்.பாலுவால் நிற்கமுடியவில்லை. இங்கு வந்து போட்டியிடுகிறார். சாராய ஆலையை வேறு நடத்துகிறார். ஆனால் நமது வேட்பாளர் அப்படி இல்லை. மதுவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை தருபவர். இந்த தொகுதிக்கு சாராய ஆலை அதிபர் வேணுமா? மருத்துவர் வேணுமா? முடிவெடுங்க.

English summary
PMK Founder Dr Ramadoss campaigned in Sriperumpudur For PMK and ADMK Candidates
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X