சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சரசரவென விலகி வரும் தொண்டர்கள்.. நேராக கடலூருக்கு கிளம்பி போன ராமதாஸ்.. அவசர ஆலோசனை

கடலூர் பாமக நிர்வாகிகளிடம் டாக்டர் ராமதாஸ் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா வழங்க பாமக ஆதரவுக்கு பாமக விளக்கம்

    சென்னை: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் என்ன நினைத்தாரோ தெரியவில்லை.. நேரடியாகவே கடலூருக்கு கிளம்பி வந்து விட்டார்!

    அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்ததில் இருந்தே ஏகப்பட்ட அதிருப்திகள் பாமகவுக்குள் நிலவி வருகின்றன. முன்புபோல் பாமக தொண்டர்களிடம் ஒரு சுறுசுறுப்பு குறைந்தே காணப்படுவதாக சொல்லப்படுகிறது. இதில் கட்சி தாவல்களும் அரங்கேறி வருவது மேலும் தொய்வை ஏற்படுத்தி உள்ளது.

    இதற்கு காரணம், சில வருடங்களாகவே கேட்க கூடாத கேள்விகளை எல்லாம் ராமதாஸ் அதிமுக, பாஜகவை பார்த்து கேட்டதுதான்! அதனால் தொண்டர்களும் அப்படியே எதிரான மனநிலையில் இருந்தனர்.

    நடுங்க வைக்கும் புகார்கள்.. இத்தனை கேஸ்களா? உங்கள் தொகுதி எம்.பியின் கேஸ் ஹிஸ்டரி தெரியுமா?

    ஐயப்பன்

    ஐயப்பன்

    திடீரென கூட்டணி என்றதும் பாமக தொண்டர்களால் அதிமுகவினருடன் இணைய முடியாமல் போய்விட்டது! இதனால் கட்சி தாவலை தாண்டி கோஷ்டி பூசலும் ஏற்பட்டு வருகிறது! இது கடலூரில் கொஞ்சம் அதிகமாகவே உள்ளது. முன்னாள் எம்எல்ஏ ஐயப்பன் உள்ளிட்ட ஏராளமானோர் கட்சியிலிருந்து விலக தொடங்கியதும்தான் பாமக தலைமைக்கு அதிர்ச்சி கூடியது.

    ரமேஷ்

    ரமேஷ்

    கடலூர் தொகுதியை பொறுத்தவரை போட்டியே திமுகவுக்கும்-பாமகவுக்கும்தான்! இதில் திமுக சார்பாக வேட்பாளர் ரமேஷ் களம் இறங்கி உள்ளார். இவர் அரசியலில் இருந்தாலும் தொண்டர்களிடம் அறிமுகம் இல்லாதவர். ஆனாலும், திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக என வலுவான கூட்டணி காரணமாகவே இவருக்கு இங்கு வெற்றி வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

    ராமதாஸ்

    ராமதாஸ்

    இந்நிலையில் தொகுதியில் கட்சி தாவல்கள் நடந்து வருவது வெற்றி வாய்ப்பை அதிகமாகவே பாதிக்கும் என்று ராமதாஸ் யோசித்திருப்பார் போலும். அதனால்தான் நேற்று கடலூருக்கு வந்துவிட்டார். ஒரு ஓட்டலில் பாமகவினரை அழைத்து பேசினார்.

    பிரச்சாரம்

    பிரச்சாரம்

    கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கும் மேலாக அவர்களிடம் ராமதாஸ் பேச்சு நடத்தியதாக தெரிகிறது. எதற்காக இந்த அவசர ஆலோசனை கூட்டம் என தெரியவில்லை. ஆனால் இன்றைய நிலைப்படி, பாமக வேட்பாளர் கோவிந்தசாமிக்காக ஆதரவாக அதிமுகவினர் ஏராளமானோர் பிரச்சாரம் செய்து வருகிறார்களாம்!

    English summary
    PMK Founder Dr Ramadoss discussed with Cuddalore Executives because of local politics in Party
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X