சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பிரதமர் மோடி முதல் உதயநிதி வரை பிறந்த நாளில் வாழ்த்து... நன்றி சொன்ன டாக்டர் ராமதாஸ்

பிரதமர் மோடி முதல் முதல்வர், துணை முதல்வர், உதயநிதி ஸ்டாலின் வரை தனது பிறந்த நாளில் வாழ்த்தியவர்களுக்கு நன்றிஇருக்கிறார் டாக்டர் ராமதாஸ்.

Google Oneindia Tamil News

சென்னை: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சனிக்கிழமை தனது 82வது பிறந்தநாளை தனது குடும்பத்தோடு கொண்டாடினார். கட்சி பாகுபாடின்றி பிரதமர் மோடி முதல் முதல்வர், துணை முதல்வர் எதிர்கட்சித்தலைவர்களும் வாழ்த்தியிருக்கிறார்கள். பிரதமர் நரேந்திர மோடி தொலை பேசி மூலம் பேசும் போது, நீங்கள் நீடூழி வாழ வேண்டும். தங்களது அரசியல் பயணம் வெற்றிகரமாக அமைய வேண்டும். எனது இதயபூர்வமான வாழ்த்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

திமுக, அதிமுக தலைவர்களும், பாஜக, சரத்குமார், கருணாஸ் என வாழ்த்திய அனைவருக்கும் தனது முகநூல் பக்கத்தில் நன்றி கூறியுள்ளார் டாக்டர் ராமதாஸ். இது தொடர்பாக பாமக தலைமை நிலையச் செய்தியின் அறிவிப்பு

PMK Founder Dr. Ramadosss Birthday thanks to Modi

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களின் 82-ஆவது பிறந்தநாளையொட்டி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் தொலைபேசி மூலமாகவும், டுவிட்டர் வழியாகவும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

தொலைபேசி மூலம் வாழ்த்தியவர்கள்:

  1. திரு. நரேந்திர மோடி அவர்கள், மாண்புமிகு இந்திய பிரதமர்,
  2. திரு. எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்கள், மாண்புமிகு முதலமைச்சர், தமிழ்நாடு,
  3. திரு. ஓ.பன்னீர்செல்வம் அவர்கள், மாண்புமிகு துணை முதலமைச்சர், தமிழ்நாடு,
  4. திருமதி. தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள், மேதகு ஆளுனர், தெலுங்கானா,
  5. திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள், மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்நாடு
  6. திரு. சுகுமார், இணையாசிரியர், தினத்தந்தி நாளிதழ்
  7. திரு. ஆனைமுத்து அவர்கள், தலைவர், மார்க்சீய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சி
  8. திரு . எல். முருகன் அவர்கள், தலைவர், பாரதிய ஜனதாக் கட்சி, தமிழ்நாடு
  9. திரு. ஆர். சரத்குமார், தலைவர், சமத்துவ மக்கள் கட்சி,
  10. திரு. சு. திருநாவுக்கரசர், மக்களவை உறுப்பினர், காங்கிரஸ்,
  11. திரு. ஜெகத்ரட்சகன், மக்களவை உறுப்பினர், திமுக
  12. திரு. பொன். இராதாகிருஷ்ணன், முன்னாள் மத்திய அமைச்சர், பாரதிய ஜனதா,
  13. திரு. சி.பி. இராதாகிருஷ்ணன், முன்னாள் தலைவர், பாரதிய ஜனதா,
  14. திரு. டி.எம். செல்வகணபதி, முன்னாள் மாநில அமைச்சர், மாவட்ட செயலர், திமுக
  15. நீதியரசர். குலசேகரன் (ஓய்வு), சென்னை உயர்நீதிமன்றம்,
  16. மருத்துவர் ஏ.இராஜசேகரன், முன்னாள் தலைவர், தேசிய மருத்துவத் தேர்வு வாரியம்
  17. மருத்துவர் ஏ. இராமச்சந்திரன், நீரியல் நோய் வல்லுனர்,
  18. மருத்துவர் கே.ஆர். பழனிச்சாமி , அப்பல்லோ மருத்துவமனை,
  19. மருத்துவர் செங்கோட்டுவேலு, இதய நோய் வல்லுனர்,
  20. மருத்துவர் பாலாஜி, முகசீரமைப்பு வல்லுனர்,
  21. திரு. கோ.ப. செந்தில் குமார், அருள்மிகு ஆதிபராசக்தி பீடம், மேல்மருவத்தூர்,
  22. திரு. கருணாஸ், சட்டப்பேரவை உறுப்பினர், தமிழ்நாடு

ப்ளஸ் 2 சிபிஎஸ்இ தேர்வில் 490 மார்க் வாங்கிய கனிகா... மன் கி பாத்தில் லைவ் ஆக வாழ்த்திய மோடிப்ளஸ் 2 சிபிஎஸ்இ தேர்வில் 490 மார்க் வாங்கிய கனிகா... மன் கி பாத்தில் லைவ் ஆக வாழ்த்திய மோடி

டுவிட்டர் மூலம் வாழ்த்தியவர்கள்

  1. திரு. எஸ்.பி. வேலுமணி, மாண்புமிகு உள்ளாட்சித் துறை அமைச்சர், தமிழ்நாடு
  2. திரு.எச்.இராஜா, தேசிய செயலாளர், பாரதிய ஜனதா,
  3. திரு . உதயநிதி ஸ்டாலின், தலைவர், திமுக இளைஞரணி,
  4. திரு.எஸ்.ஆர். சேகர், மாநில பொருளாளர், பாரதிய ஜனதா.

இன்றைய தினம் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் ஆகியோர் டாக்டர் ராமதாஸை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர். சமூகநீதிக்காக தொடர்ந்து தொண்டாற்ற வேண்டும் என்று கி.வீரமணி கேட்டுக் கொண்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் டாக்டர் ராமதாஸ்.

English summary
PMK Founder Dr. Ramadoss celebrated his 82 th birthday. Many political leaders including PM Modi greets and Wishes Ramadoss birth day.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X