• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

திமுக போட்ட "அந்த" தீர்மானம்.. பாயிண்ட் பாயிண்ட்டாக கலாய்த்த ராமதாஸ்.. பதிலடியில் குதித்த திமுகவினர்

|

சென்னை: திமுக தரப்பில் தீர்மானம் ஒன்று போட.. அது இப்போது டாக்டர் ராமதாஸ் கையில் சிக்கி கொண்டுவிட்டது.. நச்சுன்னு 5 கருத்துக்களை சொல்லி திமுக தலைவர் ஸ்டாலினை கலாய்த்து ட்வீட் போட்டுள்ளார்.

திமுக விவசாய அணி மாவட்ட அமைப்பாளர் - துணை அமைப்பாளர்கள் கூட்டம் நேற்று அன்பகத்தில் நடந்தது.. இந்த கூட்டத்தில் மொத்தம் 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் ஒரு தீர்மானம், "திமுகவும், திமுக தலைவரும் எப்போதும் எல்லா வகையிலும் விவசாயிகளின் பாதுகாவலராகவும், உழவர்களை உயர்த்தும் உத்தம பணிகளில் தொடர்ந்து செயல்பட்டு வருவதை தமிழக விவசாயிகள் உணர்ந்துள்ளனர்.

பாதுகாவலன்

பாதுகாவலன்

விவசாயிகளின் நிரந்தர பாதுகாவலராக திகழும் திமுக தலைவரின் பிறந்த நாளை "விவசாயிகளின் பாதுகாப்புத் தின"மாக கருதி வருகிற மார்ச் 1ந் தேதி முதல் 7ந் தேதி வரை தமிழகத்தின் அனைத்து ஒன்றியங்களிலும் கழக தலைவரின் பிறந்த நாள் சிறப்பு நிகழ்ச்சிகளை திமுக விவசாய அணி நடத்துவது"... இதுதான் அந்த தீர்மானம். இதைதான் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இப்போது கிண்டலடித்துள்ளார்.. பாயிண்ட் பாயிண்ட்டாக பிரித்து திமுக தலைவரின் செயல்பாட்டினை விமர்சித்து ட்வீட் போட்டு விட்டார்.

பாயிண்ட்கள்

அதில், "விவசாயிகளின் பாதுகாவலனாக மாற எளிய வழிகள்: 1. கரும்புத் தோட்டத்துக்கு கான்கிரீட் பாதை அமைத்து செல்ல வேண்டும், 2. மீத்தேன் திட்டத்திற்கு கையெழுத்திட வேண்டும், 3. பெட்ரோலிய மண்டலத்தை அனுமதிக்க வேண்டும், 4.பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்பதன் பெயரும், பொருளும் கூட தெரியாமல் சிறப்பு பொருளாதார மண்டலம் என்று உளற வேண்டும், 5. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மசோதா வாக்கெடுப்பின் போது வழக்கம் போல வெளிநடப்பு செய்ய வேண்டும்!" என பதிவிட்டுள்ளார்.

நடவடிக்கைகள்

டாக்டர் ஐயா ஒரு விவசாயி என்பது அனைவரும் அறிந்தது.. அதேபோல, எடப்பாடியாரும் விவசாயி என்பதும் தெரிந்ததுதான்.. அதனால்தான் முக ஸ்டாலினின் விவசாயிகள் சம்பந்தமான முந்தைய நடவடிக்கைகளை சுட்டிக்காட்டி ராமதாஸ் இப்படி ட்வீட் போட்டுள்ளனர் என்கின்றனர் ஆதரவாளர்கள்!

ராமதாஸ்

ராமதாஸ்

விடுவார்களா திமுகவினர்.. பதிலுக்கு அவர்களும் களமிறங்கி டாக்டர் ராமதாஸை கலாய்த்துக் கொண்டுள்ளனர். விவசாயிகளின் பாதுகாவலனாக மாற எளிய வழிகள்: 1. இருக்கிற எல்லா மரத்தையும் வெட்டி நடு ரோட்டில் போட வேண்டும். 2. இருக்கிற விவசாயிகள் குடிசைகள் எல்லாத்தையும் கொளுத்தி அவர்களை நடு ரோட்டில் நிறுத்த வேண்டும். 3. தன் கல்லா நிரைய, கள்ள சாராயம் காய்ச்ச அவர்களை கட்டாயப்படுத்த வேண்டும் என்று ஒருவர் கலாய்த்துள்ளார்.

கலாய்த்தனர்

கலாய்த்தனர்

"சிறுபான்மை மக்கள் போராடி கொண்டிருக்கும் போது பூக்கள் படம் போட்டு எனக்கென இருக்க வேண்டும். ஊழல் புகார் ஆளுநரிடம் அளித்துவிட்டு அதே கட்சியுடன் பெட்டிக்காக கூட்டணி வைக்க வேண்டும். கூட்டணி தர்மத்திற்கு சொன்ன இடத்தில் எல்லாம் மண்டி போட வேண்டும். பாராளுமன்றம் ஒழுங்கா செல்ல கூடாது. ஏனென்று கேட்டால் பத்திரிகையாளரை மிரட்ட வேண்டும்" என்று இன்னொருவர் கலாய்த்துள்ளார்.

வைரல் பதிவுகள்

வைரல் பதிவுகள்

டாக்டருக்கு ஆதரவாகவும் பலர் களமிறங்கியுள்ளனர். "ஒவ்வொரு அடியும் இடி போல இருக்கு..." என்று ஆதரவாகவும் கமெண்ட்கள் குவிந்து வருகின்றன. அதிலும், ஒருவர் ஐயா! "6. சட்ட சபையில் சட்டையை கிழிச்சுக்கிட்டு வரது" என்று எடுத்து வேறு கொடுத்திருக்கிறார். இப்போது டாக்டர் பாயிண்ட் பாயிண்ட்டாக குறிப்பிட்டு திமுக தலைவரை கலாய்த்த ட்வீட்தான் சோஷியல் மீடியாவில் வைரலாகிறது.

இப்படித்தான் பொழுது போய்க்கிட்டிருக்கு!

 
 
 
English summary
pmk founder Dr ramadoss tweet about dmk leaders birthday celebration
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more
X