சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அவர்களை சும்மா விடக்கூடாது; தமிழகத்தின் தன்மானத்துக்கு விடப்பட்ட சவால்; சீறும் ராமதாஸ்!

Google Oneindia Tamil News

சென்னை: கேரள மாநிலம் பாலக்காட்டிற்கு விசாரணை நடத்த சென்ற தமிழக வனத்துறை அதிகாரிகளை ரயில்வே போலீஸார் கைது செய்த நிகழ்வு கடும் கண்டனத்திற்குரியது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

கேரள மாநில ரயில்வே போலீஸார் நடந்துகொண்ட விதம் தமிழக அரசின் தன்மானத்துக்கு சவால் விடும் வகையில் இருப்பதாகவும் இதனை சும்மா விடக்கூடாது எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

இப்படியும் சிக்குவீர்கள் உஷார்... ஆன்லைனில் ஆபாச படம் பார்த்த கணவரிடம் மனைவி படத்தை வைத்து மிரட்டல்இப்படியும் சிக்குவீர்கள் உஷார்... ஆன்லைனில் ஆபாச படம் பார்த்த கணவரிடம் மனைவி படத்தை வைத்து மிரட்டல்

யானைகள்

யானைகள்

கோவை மாவட்டம் மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட நவக்கரை பகுதியில் தொடர்வண்டிப் பாதையை கடக்க முயன்ற யானைகள் கூட்டத்தின் மீது வெள்ளிக்கிழமை இரவு கர்நாடகத்தின் மங்களூரிலிருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த விரைவுத் தொடர்வண்டி மோதியதில் ஒரு தாய் யானை மற்றும் இரு குட்டிகள் என மொத்தம் 3 யானைகள் உயிரிழந்தன. அனுமதிக்கப்பட்டதை விட அதிக வேகத்தில் தொடர்வண்டி வந்தது தான் விபத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

விசாரணை

விசாரணை

இது தொடர்பாக தொடர்வண்டி ஓட்டுனர்கள் இருவரை கைது செய்த தமிழ்நாடு வனத்துறையினர், தொடர்வண்டி எந்திரத்தில் பொருத்தப்பட்டிருந்த வேகம் காட்டும் சிப்'பை பறிமுதல் செய்தனர். அதில் பதிவாகியிருந்த விபரங்களை அறிவதற்காக அவர்கள் பாலக்காடு தொடர்வண்டி நிலையத்திற்கு சென்றனர். ஆனால், அவர்களின் விசாரணைக்கு ஒத்துழைக்காத ஆர்.பி.எப் அதிகாரிகள், வனத்துறையினர் நால்வரை சிறைபிடித்து காவலில் வைத்துள்ளனர்.

 பழிவாங்கல்

பழிவாங்கல்

பழி வாங்கும் வகையில் அவர்களை தொடர்வண்டித்துறை பாதுகாப்பு படையினர் கைது செய்திருப்பது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தும் செயலாகும். யானைகள் மீது தொடர்வண்டியை மோதியதற்காக கைது செய்யப்பட்ட இரு ஓட்டுனர்களை தமிழக வனத்துறையினர் விடுதலை செய்ததுடன், பறிமுதல் செய்யப்பட்ட சிப்பை ஒப்படைத்த பிறகு தான் வனத்துறை அதிகாரிகள் குழுவை ஆர்.பி.எப் விடுவித்திருக்கிறது.

 தன்முனைப்பு

தன்முனைப்பு

இந்த மோதலை வனத்துறையினருக்கும், தொடர்வண்டி பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த மோதலாக பார்க்க முடியாது. கேரளத்தைச் சேர்ந்த தொடர்வண்டி ஓட்டுனர்களை தமிழ்நாட்டைச் சேர்ந்த வனத்துறை அதிகாரிகள் எவ்வாறு கைது செய்யலாம்? என்ற தன்முனைப்பு தான் இந்த மோதலுக்குக் காரணமாகும்.

சும்மா விடாதீர்

சும்மா விடாதீர்


இது தமிழக அரசின் தன்மானத்திற்கு விடுக்கப்பட்ட சவால் ஆகும். தொடர்வண்டி பாதுகாப்புப் படையினரின் அத்துமீறலுக்கு பணிந்து தொடர்வண்டியின் ஓட்டுனர்கள் இருவரை வனத்துறை அதிகாரிகள் விடுவித்தது ஏற்றுக்கொள்ள முடியாத செயல் ஆகும். தமிழக வனத்துறை அதிகாரிகளை தொடர்வண்டி பாதுகாப்புப் படையினர் சிறை பிடித்து அவமதித்ததை தமிழக அரசு விட்டுவிடக் கூடாது. இதற்குக் காரணமான தொடர்வண்டி பாதுகாப்புப் படை அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும்.

 ரயில்வே அமைச்சகம்

ரயில்வே அமைச்சகம்

தொடர்வண்டித்துறை நிர்வாகத்திடம் இது குறித்து புகார் செய்வது, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்படுவதையும், பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைப்பதையும் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.

English summary
Pmk Founder Ramadoss condemn to Palakkad RPF
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X