சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

காக்கை வன்னியர்களைத் தெரியுமா...? ராமதாஸ் ட்வீட்டரில் கேள்வி

Google Oneindia Tamil News

Recommended Video

    காக்கா பிடித்து பிழைப்பு நடத்தும் வன்னியர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் | Ramadoss reply to dmk

    சென்னை: இட ஒதுக்கீட்டுக்காக போராடி உயிர்நீத்த சத்திரிய வன்னியர்களை தெரியும், காக்கை வன்னியர்களைத் தெரியுமா என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் ட்வீட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.

    வன்னிய சமுதாய மக்களுக்கு திமுக செய்த சாதனைகளையும், அவர்களுக்காக கொண்டுவரப்பட்ட திட்டங்களையும் பட்டியலிட்டு அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் இட ஒதுக்கீடு கோரி போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளுக்கும், வன்னிய சமுதாயத்தின் தனிப்பெரும் தலைவருமான ஏ.கோவிந்தராஜூவுக்கும் மணிமண்டபம் கட்டப்படும் என உறுதியளித்திருந்தார்.

    pmk founder ramadoss reply to dmk statement

    இதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடுமையாக எதிர்வினையாற்றினார். இதனால் வன்னிய சமுதாயத்தை சேர்ந்தவரும், முன்னாள் அமைச்சருமான கடலூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ராமதாசுக்கு கண்டனம் தெரிவித்து இன்று அறிக்கை ஒன்று வெளியிட்டார். அதில் ராமதாசுக்கு பதிலடி தரும் வகையில் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.

    இந்நிலையில் அந்த அறிக்கை வெளியாகி ஒரு மணி நேரத்திற்குள் ராமதாஸ் ட்வீட்டரில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அந்தப் பதிவில், இட ஒதுக்கீட்டுக்காக போராடி உயிர்நீத்த சத்திரிய வன்னியர்களை உங்களுக்குத் தெரியும், காக்கை வன்னியர்களைத் உங்களுக்குத் தெரியுமா? எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார். இதிலிருந்து காக்கா பிடித்து பிழைப்பு நடத்தும் வன்னியர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் என்பது பொருள்படுகிறது.

    pmk founder ramadoss reply to dmk statement

    வன்னியர்களை ஏமாற்றியது யார்? கணக்கு போட்டு காட்டிய எம்பி செந்தில் குமார்.. ராமதாஸுக்கு பதிலடி! வன்னியர்களை ஏமாற்றியது யார்? கணக்கு போட்டு காட்டிய எம்பி செந்தில் குமார்.. ராமதாஸுக்கு பதிலடி!

    இதனிடையே ட்வீட்டரில் ராமதாஸை பின் தொடர்பவர்கள் அவரது பதிவுக்கு கருத்து தெரிவித்துள்ளனர். அதில் சிலர் ராமதாஸ் பதிவை வரவேற்றும், சிலர் கடுமையாக எதிர்த்தும் ட்வீட் போட்டுள்ளனர்.

    English summary
    pmk founder ramadoss reply to dmk statement
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X