சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அதெல்லாம் ஆபத்து.. புத்தாண்டு மலர்வதற்குள் புதிய நிர்வாகம் மலர வேண்டும்.. ராமதாஸ்

Google Oneindia Tamil News

சென்னை: விரைவாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டு புத்தாண்டு மலர்வதற்குள் புதிய நிர்வாகம் மலர வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.

கள்ளக்குறிச்சி, தென்காசி, செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 5 மாவட்டங்களை தனியாக தமிழக அரசு பிரித்துள்ளது. இந்த நிலையில் செங்கல்பட்டு ஆட்சியராக ஜான் லூயிஸ், திருப்பத்தூர் ஆட்சியராக சிவன் அருள், ராணிப்போட்டை ஆட்சியராக திவ்யதர்ஷினி, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியராக கிரண் குராலா, தென்காசி மாவட்ட ஆட்சியராக அருண் சுந்தர் தயாளன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

PMK Founder Ramadoss says about Civic polls

புதிய மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்விகள் எழுப்பின. அதாவது புதிய ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டதற்கு உள்ளாட்சி தேர்தலை தாமதப்படுத்துவதற்காக என புகார்கள் எழுந்தன.

இதை அமைச்சர் எஸ் பி வேலுமணி மறுத்தார். இந்த நிலையில் இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் 5 புதிய மாவட்டங்கள் உருவாக்கத்தைக் காரணம் காட்டி உள்ளாட்சித் தேர்தல்களை தாமதப்படுத்தும் முயற்சிகள் ஆபத்தானவை.

சோனியா, ராகுலின் எஸ்பிஜி பாதுகாப்பை நீக்கியது ஏன்? பொங்கிய திமுக.. லோக்சபாவிலிருந்து வெளிநடப்பு!சோனியா, ராகுலின் எஸ்பிஜி பாதுகாப்பை நீக்கியது ஏன்? பொங்கிய திமுக.. லோக்சபாவிலிருந்து வெளிநடப்பு!

இந்த முயற்சி முறியடிக்கப்பட வேண்டும். விரைவாக தேர்தல்கள் நடத்தப்பட்டு புத்தாண்டு மலர்வதற்குள் உள்ளாட்சிகளில் புதிய நிர்வாகம் மலர வேண்டும்! என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

English summary
Ramadoss says that before January 1st 2020 that is New year, all the civc bodies to be elected and their representatives to be posted.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X