சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழக அரசியலில் எனக்கு பொய் பேச வராது... எப்போதும் உண்மையை தான் பேசுவேன் -ராமதாஸ்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக அரசியலை பொறுத்தவரை தமக்கு பொய் பேச வராது என்றும் எப்போதும் உண்மையை தான் பேசுவேன் எனவும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் செயல்பாடுகளை பற்றி தேடி தேடி ஆராய்ந்தும் பாராட்டதக்க வகையில் அவர் எதையும் செய்யவில்லை என விமர்சித்துள்ளார்.

பாமகவின் அறிக்கைகளை திமுக காப்பி அடித்து வரிகளை மாற்றி வெளியிடுவதாக ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

உலகளவில் கொரோனாவில் இருந்து 2.07 கோடி பேர் மீண்டனர் - 9.24 லட்சம் பேர் மரணம்உலகளவில் கொரோனாவில் இருந்து 2.07 கோடி பேர் மீண்டனர் - 9.24 லட்சம் பேர் மரணம்

திருச்சிக்கு என் ஆதரவு

திருச்சிக்கு என் ஆதரவு

தமிழகத்தின் இரண்டாவது தலைநகரமாக திருச்சியை அறிவிக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். திருச்சிக்கு தான் தமது முழு ஆதரவு என்றும் மாநிலத்தின் மையப்பகுதியில் இருப்பதால் அனைத்துப் பகுதி மக்களும் வந்து செல்ல உகந்த இடம் எனவும் தெரிவித்திருக்கிறார். செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணலில் இதைக் கூறியுள்ளார்.

ரஜினி அரசியல்

ரஜினி அரசியல்

சுதந்திர இந்தியாவில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம் என்றும் அந்த வகையில் ரஜினி உட்பட யார் கட்சி தொடங்கி நடத்தவும் அவர்களுக்கு உரிமை உள்ளது எனவும் கூறியிருக்கிறார். ரஜினி கட்சி தொடங்கிய பிறகு அந்தக் கட்சியின் கொள்கைகள், செயல்பாடுகளை அறிந்த பின்னர் தான் அது குறித்து பேச இயலும் என்றும் இப்போதே அது தொடர்பாக பேசுவதில் அர்த்தம் இல்லை எனவும் தெரிவித்திருக்கிறார்.

பாமக அறிக்கைகள்

பாமக அறிக்கைகள்

பாட்டாளி மக்கள் கட்சியின் அறிக்கைகளை திமுக காப்பி அடித்து வரிகளை மாற்றி வெளியிடுவதாகவும், காலை 10 மணிக்கு பாமக ஒரு அறிக்கை வெளியிட்டால் அதே அறிக்கையை 12 மணிக்கு திமுக வெளியிடுவதாக குற்றஞ்சாட்டினார். எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் மு.க.ஸ்டாலின் எப்படி செயல்படுகிறார் என்பதை அறிவதற்காக தேடி தேடி ஆராய்ந்தும் அவரை பாராட்டத்தக்க வகையில் எதுவும் கூறுவதற்கில்லை எனத் தெரிவித்திருக்கிறார் ராமதாஸ்.

கூட்டணி நிலைப்பாடு

கூட்டணி நிலைப்பாடு

தற்போதைய சூழலில் தேர்தல் கூட்டணி பற்றி கூற இயலாது என்றும் பொதுக்குழுவுக்கு தான் அனைத்து அதிகாரமும் உள்ளதாகவும் ராமதாஸ் கூறியிருக்கிறார். இன்னும் ஒரு இரண்டு மூன்று மாதங்கள் பொறுத்திருந்தால் பாமகவின் கூட்டணி நிலைப்பாடு பற்றி அறிந்துகொள்ள முடியும் எனத் தெரிவித்திருக்கிறார். இதனிடையே ரஜினிகாந்த் மீது தமக்கு மரியாதை உண்டு என்றும் அவர் அரசியலில் ஜொலிப்பாரா மாட்டாரா என்பது பற்றியெல்லாம் தனக்கு ஜோசியம் பார்க்கத் தெரியாது எனவும் ராமதாஸ் தெரிவித்திருக்கிறார்.

English summary
Pmk founder Ramadoss says, I do not lie in Tamil Nadu politics
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X