சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விழுப்புரம் துப்பாக்கிச்சூட்டுக்கு பாமக ராமதாஸ் கண்டனம்.. சுட்டது போலீசா என்று விசாரிக்க கோரிக்கை

Google Oneindia Tamil News

சென்னை:விழுப்புரம் அருகே வண்டியில் பூட்டப்பட்டிருந்த மாடுகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது கண்டிக்கத்தக்கது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் கெடார் அருகே உள்ள வீராமூர் ஏரிப்பகுதியில் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட ஐந்து நபர்கள் மாட்டுவண்டிகளில் மணல் அள்ளிக் கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரிலிருந்து இறங்கிய மர்ம நபர்கள் மாட்டுவண்டி நோக்கி நாட்டு துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

pmk founder ramadoss urges the government to enquire firing near villupuram

இந்த சம்பவத்தில் மாடுகளுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அதை கண்ட அப்பகுதி மக்கள் விழுப்புரம் திருக்கோவிலூர் சாலையில் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந் நிலையில், விழுப்புரம் அருகே வண்டியில் பூட்டப்பட்டிருந்த மாடுகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது கண்டிக்கத்தக்கது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

pmk founder ramadoss urges the government to enquire firing near villupuram

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: விழுப்புரம் அருகே வண்டியில் பூட்டப்பட்டிருந்த மாடுகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது கண்டிக்கத்தக்கது.

வாயில்லாத உயிர்கள் மீது இரக்கமற்ற தாக்குதல் நடத்தியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் காவல்துறையினர் என்ற குற்றச்சாட்டு விசாரிக்கப் பட வேண்டும் என்று ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

English summary
PMK founder Dr. Ramadoss urges the government, to takes necessary action against those who fired the cow.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X