சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சிதம்பரத்தை அள்ள போவது யாரு.. விடுதலை சிறுத்தைகள், பாமக இடையே அனல் பறக்கும் போட்டி

Google Oneindia Tamil News

Recommended Video

    Chidambaram constituency: சிதம்பரம் தொகுதி :விடுதலை சிறுத்தைகள்,பாமக இடையே போட்டி- வீடியோ

    சென்னை: சும்மாவே பாமகவுக்கும் விடுதலை சிறுத்தைகளுக்கும் ஆகாது... இதில சிதம்பரம் தொகுதிக்கு ரெண்டு தரப்புமே போட்டியிட போவதாக தகவல்கள் கூறுகின்றன.

    திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் இருக்கிறதா, அல்லது அதிமுக கூட்டணியில் பாமக இருக்கிறதா என்று இதுவரை வெளிப்படையான அறிவிப்போ, பேட்டியோ எதுவுமே வரவில்லை. ஆனால் தொகுதி பங்கீடு, சீட் விவகாரங்கள் மட்டும் சத்தமல்லாமல் ஒரு பக்கம் நடந்து வருகின்றன.

    கிட்டத்தட்ட இரு கட்சிகளும், சம்பந்தப்பட்ட கூட்டணியில் இணைவதற்கான சாத்தியக்கூறுகள் நிறையவே உள்ளன. அதனால்தான் சிதம்பரம் தொகுதி பற்றின பேச்சு அடிபட ஆரம்பித்துள்ளது.

    திமுக அமைதி

    திமுக அமைதி

    சிதம்பரம் தொகுதியில் நானே போட்டியிடுவேன் என்று போன நவம்பர் மாதம் திருமாவளவன் சொல்லி இருந்தார். அதனால் திமுகவும் திருமாவளவன் கேட்ட தொகுதியை தர எந்த மறுப்பும் இதுவரை சொல்லவில்லை என தெரிகிறது.

    வன்னியர்கள்

    வன்னியர்கள்

    ஆனால் இப்போது பாமகவும் சிதம்பரம் தொகுதியை டார்கெட் செய்வதாக கூறப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம், சிதம்பரம் தொகுதியில் அரியலூர் மாவட்டம் அடங்குகிறது. இந்த அரியலூர் மாவட்டத்தில் பெரும்பாலும் வன்னியர்கள்தான் அதிகம். அதனால்தான் பாமக குறி வைத்து வேட்டையை ஆரம்பித்துள்ளது.

    தலித் வேட்பாளரா?

    தலித் வேட்பாளரா?

    பொதுவாக சிதம்பரம் தொகுதியை பொறுத்தவரை, இதுவரை காங்கிரஸ் 6 முறையும், திமுக 3 முறையும், பாமக 4 முறையும் வெற்றி பெற்றிருக்கிறது. திமுகவை விட ஒன்னு லீடிங்கில் பாமக உள்ளது கூடுதல் பலமாக அக்கட்சிக்கு தெரிகிறது. இதுவரை பாமக சார்பாக ராமதாசின் பால்ய நண்பர் பொன்னுசாமி போட்டியிட்டு வெற்றி பெற்று வந்தார். ஆனால் இப்போது பொன்னுசாமி கட்சியிலிருந்து வெளியேறிவிட்ட நிலையில், வேறு ஒரு வேட்பாளரை ராமதாஸ் நிறுத்த முயற்சி நடப்பதாக தெரிகிறது.

    ஒத்துழைப்பு

    ஒத்துழைப்பு

    இதில் இதை தவிர இன்னொரு காரணமும் இருக்கிறது. இதுவரைக்கும் அதிமுக போன முறைதான் இந்த தொகுதியில் ஒரே ஒரு முறை வெற்றி பெற்றுள்ளது. மேலும் இப்போதுள்ள எம்பி மீது மக்கள் அதிருப்தியில் இருப்பதால், தொகுதியில் உள்ள வன்னியர்களின் வாக்குகளை இழக்க அதிமுக விரும்பவில்லை. அதனால் எப்படியாவது தன் கூட்டணியில் உள்ள பாமகவை இந்த முறையும் வெற்றி பெற வைக்க அதிமுக சிறந்த முறையில் ஒத்துழைப்பு தரும் என்றே தெரிகிறது.

    நம்புகிறார்கள்

    நம்புகிறார்கள்

    ஒருவேளை பாமக சிதம்பரம் தொகுதிக்கு முயற்சி செய்தால், திருமாவளவன் வெற்றி பெற திமுக ஒத்துழைக்குமா என்ற சந்தேகம் திருமாவளவன் சிதம்பரம் தொகுதியை அறிவித்தபோதே எழுந்தது. ஆனால் நேற்றுகூட விடுதலை சிறுத்தை மாநாட்டிற்கு ஸ்டாலின் சென்று வந்திருப்பதால், தன் முழு ஒத்துழைப்பையும் திமுக தரும் என்றே விடுதலை சிறுத்தைகள் நம்புகிறார்கள்.

    வியூகங்கள்

    வியூகங்கள்

    மேலும் "பாமக என்றாலே கூட்டணிக்கு வேண்டவே வேண்டாம், அவர்களை கூப்பிட்டு சுயமரியாதை இழக்கவில்லை" என்று பகிரங்கமாக ஆ.ராசா ஒருமுறை சொல்லி இருந்தார். எனவே பாமகவை தோற்கடிக்க எல்லா வியூகங்களையும் அமைத்து திருமாவளவனுக்கு திமுக பக்கபலமாக இருக்கும். ஆக மொத்தம் இரு கட்சிகளும் நேருக்கு நேர் நிற்க தயாராக விட்டால், சிதம்பரம் தொகுதியில் கடுமையான போட்டி ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால், ஒருத்தருக்கொருத்தர் சளைக்காத நெருக்கடிகளையும் நிறையவே தருவார்கள் என தெரிகிறது.

    English summary
    PMK and Viduthalai Chiruthaigal Katchi is said to be contesting in Chidambaram constituency. It is said that negotiations are ongoing.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X