சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கூட்டணி அறத்தை கடைபிடிப்பதில் பாமக முதலிடத்தில் உள்ளது.. ராமதாஸ் அறிக்கை

அதிமுக - வை விட 3 மடங்கு பாமகவினர் பணியாற்ற வேண்டும்... மருத்துவர் ராமதாஸ் வேண்டுகோள்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள 4 தொகுதிகளிலும் அ.தி.மு.கவின் வெற்றிக்கு உழைக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் தலைவர் நிறுவனர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

காலியாக உள்ள சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் மே மாதம் 19 ஆம் தேதி நடைபெறவிருக்கின்றன. அந்தத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 22 ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

PMK is the forefront of the coalition ethics, Doctor Ramadoss Statement

இதுகுறித்து, மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூட்டணி அறத்தை கடைபிடிப்பதில் முதலிடத்தில் உள்ள கட்சி என்றால், அது பாமக என்பதை அனைவரும் அறிவார்கள். அது இந்த இடைத்தேர்தல்களிலும் நிரூபிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

அதற்காக, அதிமுகவினரும், மற்ற கூட்டணிக் கட்சியினரும் எந்த அளவுக்கு தீவிரமாக பரப்புரையில் ஈடுபடுகிறார்களோ, அதை விட 3 மடங்கு தீவிரமாக பாமகவினர் தேர்தல் பணியாற்ற வேண்டும். 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்ய வேண்டும் என்றும் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

 இலங்கையில் நீடிக்கும் பதற்றம்.. மர்ம நபர்களிடமிருந்து 21 கையெறி குண்டுகள் பறிமுதல்.. தொடரும் சோதனை! இலங்கையில் நீடிக்கும் பதற்றம்.. மர்ம நபர்களிடமிருந்து 21 கையெறி குண்டுகள் பறிமுதல்.. தொடரும் சோதனை!

அதேபோல், வாசன் வெளிட்டுள்ள அறிக்கையில், அ.தி.மு.க-வின் சிறப்பான செயல்பாடுகள் தொடர, தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை அனைவரும் தங்களின் களப்பணியை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

English summary
Doctor Ramadoss Statement That PMK is the forefront of the coalition ethics
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X