சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

20 ஆண்டுகளுக்குப் பிறகு அதிமுக கூட்டணியில் இணையும் பாமக - வெற்றிக்கனியை பறிக்குமா?

சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் 20 ஆண்டுகளுக்குப் பிறக இணைந்துள்ளது அதிமுக. வெற்றிக்கனியை பறித்து பாமக எம்எல்ஏக்கள் இரட்டை இலக்கத்தில் சட்டசபைக்கு செல்வார்களா பார்க்கலாம்.

Google Oneindia Tamil News

சென்னை: சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள பரபரப்பான சூழ்நிலையில் அதிமுக, பாமக கூட்டணி பேச்சுவார்த்தையில் முடிவுகள் எட்டப்பட்டு 23 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு அதிமுக கூட்டணியில் இணைந்துள்ள பாமக வெற்றிக்கனியை பறிக்குமா? இரட்டை இலக்கத்தில் பாமக வேட்பாளர்கள் வெற்றி பெற்று எம்எல்ஏக்களாக சட்டசபைக்குள் செல்வார்களா?பார்க்கலாம்.

Recommended Video

    #BREAKING பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு!

    டாக்டர் ராமதாஸ் பாட்டாளி மக்கள் கட்சியை தொடங்கிய பின்னர் முதன் முறையாக 1991ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் களம் கண்டது. வட மாநிலங்களில் கனிசமான வாக்குகளைப் பெற்றது பாமக.

    போட்டியிட்ட முதல் சட்டசபைத் தேர்தலிலேயே பண்ருட்டி சட்டசபை தொகுதியில் பாமக வேட்பாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் வெற்றி பெற்று எம்எல்ஏவாக சட்டசபைக்குள் நுழைந்தார்.

    சட்டசபையில் பாமக எம்எல்ஏக்கள்

    சட்டசபையில் பாமக எம்எல்ஏக்கள்

    1996 ஆம் ஆண்டு திமுக கூட்டணியில் இணைந்தாலும் தொகுதி பங்கீடு பிரச்சினையால் கூட்டணியில் இருந்து விலகி திவாரி காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து தேர்தலை சந்தித்தது. 4 இடங்களில் வென்று பிரதான கட்சிகளான அதிமுக, திமுக தலைவர்களுக்கு மிரட்சியை ஏற்படுத்தியது.

    பாமக இடம்பெறும் கூட்டணி ஜெயிக்கும்

    பாமக இடம்பெறும் கூட்டணி ஜெயிக்கும்

    இதனையடுத்து சட்டசபைத் தேர்தலில் பாமக இடம்பெறும் கூட்டணியே ஜெயிக்கும் என்ற நிலையை ஏற்படுத்தினார் டாக்டர் ராமதாஸ். பாமக இடம்பெறும் கூட்டணியே சட்டசபைத் தேர்தலில் ஜெயிக்கும் என்று பெருமிதமாகவும் சொன்னார்.

    2001 சட்டசபைத் தேர்தலில் அதிமுக பாமக

    2001 சட்டசபைத் தேர்தலில் அதிமுக பாமக

    2001ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்தது பாமக. அந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்து சட்டசபை தேர்தலைச் சந்தித்தது பாமக. தமிழகத்தில் 27 தொகுதிகளும் புதுச்சேரியில் 10 தொகுதிகளும் பாமகவுக்கு ஒதுக்கப்பட்டன. 20 தொகுதிகளில் பாமக வெற்றி பெற்றது. இதுவே அதிமுக கூட்டணியில் பாமக கடைசியாக கூட்டணி அமைத்து போட்டியிட்ட சட்டசபைத் தேர்தலாகும்.

    மாறி மாறி கூட்டணி

    மாறி மாறி கூட்டணி

    இதனையடுத்து இரண்டு முறை திமுக கூட்டணியில் களம் கண்டது பாமக. 2006ஆம் ஆண்டு கணிசமான இடங்களையும் வென்றது. அதே நேரத்தில் 2011ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் வெறும் 3 இடங்களில் மட்டுமே பாமக வென்றது. இது சரியான சறுக்கலாகும். பாமகவின் தோல்விக்கு காரணம் தேமுதிகவின் எழுச்சிதான்.

    20 ஆண்டுகளுக்குப் பிறகு

    20 ஆண்டுகளுக்குப் பிறகு

    இதனையடுத்து சட்டசபைத் தேர்தலில் அதிமுக, திமுக உடன் கூட்டணி சேரப்போவதில்லை என்று பகிரங்கமாக அறிவித்தார் டாக்டர் ராமதாஸ் சரியாக 20 ஆண்டுகள் கழித்து அதிமுக கூட்டணியில் களம் காண்கிறது பாமக. இரட்டை இலக்க எண்களில் அதாவது அதிமுக கூட்டணியில் 23 இடங்களை பெற்று போட்டியிடும் பாமக வெற்றிக்கனியை பறித்து சட்டசபைக்குள் உறுப்பினர்களை அனுப்புமாக பார்க்கலாம்.

    English summary
    The AIADMK-BJP alliance has reached an agreement and 23 seats have been allotted amid the tense situation in which the date of the assembly elections has been announced. Will the AIADMK snatch the BJP victory after 20 years? Will the double-digit BJP candidates win and enter the assembly as MLAs?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X