சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எவ்வளவு பெரிய மனசு.. பாமக அறிக்கையை பாருங்க.. ராமதாஸ் தந்த சர்ப்ரைஸ்.. பாஜக, அதிமுக ஏக குஷி!

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுகவிடம் 23 தொகுதிகள் வாங்கிய சந்தோசத்தில் இருக்கும் பாமக.. தற்போது சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் இருக்கும் ஒரு விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்து இருக்கிறது.

2021 சட்டசபை தேர்தலுக்கும் லோக்சபா தேர்தல் போல பிரம்மாண்ட கூட்டணியை அமைக்கும் முடிவில் அதிமுக இருக்கிறது. அதிமுக, பாஜக, தேமுதிக, பாமக உள்ளிட்ட முக்கிய கட்சிகள் இந்த கூட்டணியில் இடம்பெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.

அதிமுக கூட்டணியில் பாமக 23 இடங்களை பெற்றுள்ளது. வன்னியர் இடஒதுக்கீடு போராட்டம் காரணமாக பாமக மீதான கவனம் அதிகரித்த நிலையில் பாமகவிற்கு அதிக இடங்களை அதிமுக ஒதுக்கி உள்ளது.

கல்வி முதல் மருத்துவம் வரை பாமக தேர்தல் அறிக்கையில் என்னென்ன இலவசங்கள்கல்வி முதல் மருத்துவம் வரை பாமக தேர்தல் அறிக்கையில் என்னென்ன இலவசங்கள்

இடம் ஒதுக்கீடு

இடம் ஒதுக்கீடு

அதோடு வன்னியர்களுக்கு எம்பிசி இடஒதுக்கீட்டில் 10% உள் ஒதுக்கீடு கொடுப்பதாக தமிழக அரசு அறிவித்ததும் பாமகவை சந்தோஷப்படுத்தி உள்ளது. இதை வைத்தே தேர்தலில் வென்றுவிடலாம். 23 தொகுதிகளில் இதை வைத்து பிரச்சாரம் செய்யலாம், வன்னியர் வாக்குகளை குறி வைத்து அள்ளிவிடலாம் என்று பாமக உறுதியாக நம்புகிறது.

பிரச்சாரம்

பிரச்சாரம்

இதற்கு ஏற்றபடியே இதுவரை பிரச்சார யுக்திகளை திமுக வகுத்துள்ளது. இப்படிப்பட்ட நிலையில் இன்று பாமக வெளியிட்ட அறிக்கையில் அதிமுக, பாஜக ஆகிய கட்சிகளின் சின்னங்கள் இடம்பெற்று இருந்தன. இரட்டை இலை சின்னம், தாமரை சின்னம் இரண்டும் அறிக்கையின் அட்டைப்படத்தில் இடம்பெற்று இருந்தன. மாம்பழம் சின்னமும் இதில் இடம்பெற்று இருந்தது.

சர்ப்ரைஸ்

சர்ப்ரைஸ்

பொதுவாக கட்சிகள் தங்கள் தனிப்பட்ட தேர்தல் அறிக்கையில் கூட்டணி கட்சிகளின் புகைப்படங்களை போடாது. கூட்டணிக்கு தலைமை வகிக்கும் கட்சிகள் என்றால் சமயங்களில் கூட்டணியில் இருக்கும் மற்ற கட்சிகளின் புகைப்படங்களை போட வாய்ப்பு உள்ளது. ஆனால் பாமக இப்படி கூட்டணி கட்சிகளான அதிமுக, பாஜகவின் சின்னங்களை பயன்படுத்தி இரண்டு கட்சிக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.

சூப்பர்

சூப்பர்

அதிமுக, பாஜக ஆகிய கட்சிகளுடன் பாமக மிகவும் நெறுக்கமாகிவிட்டதையே இது காட்டுவதாக கூறுகிறார்கள். அதிமுக கூட்டணியில் பாமக மிகவும் மதிப்புமிக்க கட்சியாக பார்க்கப்படுகிறது. அதேபோல் பாமகவும் அதிமுக, பாஜகவை நெருக்கமான கட்சியாக பார்க்கிறது. இதனால்தான் அறிக்கையில் கட்சியின் சின்னங்களை போட்டு பாமக 2 கூட்டணி காட்சிகளையும் குஷிப்படுத்தி உள்ளது என்கிறார்கள்.

லோக்சபா தேர்தல்

லோக்சபா தேர்தல்

லோக்சபா தேர்தலில் இருந்தே இந்த கூட்டணி நிலவி வருகிறது. இந்த முறை வன்னியர் இடஒதுக்கீடு அறிவிப்பு தேர்தலில் கேம் சேஞ்சராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் முடிவையே இந்த அறிவிப்பு மாற்ற வாய்ப்புள்ளது .இதை எல்லாம் கருத்தில் கொண்டு எப்போதும் இல்லாததை விட இந்த முறை அதிமுக - பாமக அதிக நெருக்கமாகி உள்ளது.

English summary
Two leaves, Lotus and Mango: PMK manifesto has pictures of AIADMK and NJP symbols.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X