ஓஹோ.. ஒரேடியாக புகழ்ந்த பாமக எம்எல்ஏக்கள்... ரசித்த முதல்வர்.. ஆச்சரியமாக பார்த்த திமுகவினர்!
சென்னை: துண்டு சீட்டில் குறைகளை எழுதிக் கொடுத்தாலும் நிறைவேற்றி தரும் முதல்வராக இருக்கிறார் என்று மு.க ஸ்டாலினை பாமக எம்எல்ஏக்கள் புகழ்ந்துள்ளனர். வேறு கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் புகழ்வரை ஸ்டாலின் ரசித்து பார்க்க திமுக எம்எல்ஏக்கள் ஆச்சரியத்தோடு பார்த்தனர்.
சேலம் சீலநாயக்கன்பட்டி யில் இன்று தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் பங்கேற்ற அரசு விழா நடைபெற்றது "நமக்கு நாமே திட்டம்" மற்றும் "நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டம்" ஆகிய புதிய திட்டங்களை தொடங்கி வைத்து, 38 கோடியே 53 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 83 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, 54 கோடியே 1 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 60 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 30,837 பயனாளிகள் பயன்பெறும் வகையில் 168 கோடியே 64 இலட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பல்வேறு வரலாற்றுச் சிறப்புகளைக் கொண்டது இந்த சேலம் மாவட்டம். திராவிட இயக்கத்தின் மூலம் சேலத்தை என்ன சொல்லி அடையாளம் காட்டலாம் என்று சொன்னால் திராவிட இயக்கத்தில் சேலம் பெரும்பங்கை பெற்றுள்ளது. நமது அறிஞர் அண்ணா கொண்டுவந்த தீர்மானம் 'அண்ணாதுரை தீர்மானம்' எனத் தலைப்பிட்டுவந்த நிலையில், அதுதான் நீதி கட்சியானது திராவிடர் இயக்கமாக பெயர் பெற்றதும் இந்த சேலத்தில்தான் என்றார்.
அதையும் தாண்டி இன்னொரு சிறப்பும் சேலத்திற்கு உண்டு என்றார்.
என்னாச்சு.. கூட்டணி கட்சிகளை விட்டு விளாசிய ராமதாஸ்.. பாமக கூட்டத்தில் அனல் பறக்க பேச்சு

தாய் வீடு வந்த முதல்வர்
திமுக தலைவர் கருணாநிதி சில ஆண்டுகள் வாழ்ந்த ஊர்தான் சேலம். 1949 - 50களில் சேலம் கோட்டை பகுதியில் அபிப் தெருவில்தான் கலைஞர் வாழ்ந்தார். அப்படிப் பார்த்தால் என்னுடைய வீட்டிற்குதான் நான் வந்திருக்கிறேன். இதுதான் எனக்குப் பெருமை என்று கூறினார். எத்தனையோ முறை பொதுக்கூட்டம், மாநாடு ஆகியவற்றில் பங்கேற்க வீரபாண்டியார் என்னைச் சேலத்திற்கு அழைத்து வந்துள்ளார். அதேபோல் ஆட்சியில் உள்ளபோது உள்ளாட்சித் துறை அமைச்சராக, துணை முதல்வராக அரசு விழாவில் பங்கேற்க வந்துள்ளேன். ஆனால் இப்போது முதல்வராக வந்துள்ளேன்.

வீரபாண்டி ஆறுமுகம்
எனக்கு என்னவொரு ஏக்கம் என்றால், நான் முதல்வராக சேலம் வந்திருக்கும் நேரத்தில் வீரபாண்டியார் இல்லையே என்ற ஏக்கம், வருத்தம் என் உள்ளத்தில் பதிந்திருக்கிறது. வீரபாண்டி ஆறுமுகம் அமைச்சராக இருந்தபோது, இருந்த மாவட்டங்களிலேயே அதிகம் சலுகை பெற்ற மாவட்டம் என்று பார்த்தால் அதில் சேலம் மாவட்டமாகத்தான் இருக்கும் என்று கூறினார்.

அண்ணா போல முதல்வர்
விழாவில் வாழ்த்துரை வழங்கிய சேலம் மேற்கு சட்டசபைத் தொகுதி உறுப்பினர் அருள், பாமக அனைவரையும் அரவணைத்துச் செல்லும் தமிழக முதல்வர் மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்ற அண்ணாவின் கருத்துப்படி ஆட்சி நடத்திவருகிறார் துண்டு சீட்டில் குறைகளை எழுதிக் கொடுத்தாலும் நிறைவேற்றி தரும் முதல்வராக இருக்கிறார் என்று புகழ்ந்து பேசினார்.

தாயுள்ளத்தோடு நடவடிக்கை
அடுத்து பேசிய மேட்டூர் பாமக எம்எல்ஏ சதாசிவம் அருளை விட ஒரு படி மேலே போய் மேட்டூர் உபரி நீர் திட்டம் கடந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்ட போதும் இந்த ஆட்சியில் நடவடிக்கைகளை மேற்கொண்டு அதனைத் தொடர தாயுள்ளத்தோடு நடவடிக்கைகள் மேற்கொண்டு மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார் என்றார்.

ஆச்சரியப்பட்ட திமுக எம்எல்ஏக்கள்
முதல்வர் நாங்கள் ஐயா வழிவந்தவர்கள் உள்ளதை மட்டுமே சொல்வோம் என்றும் புகழ்ந்தார். மாற்றுக்கட்சியைச் சேர்ந்த இருவரின் பேச்சையும் முதல்வர் மு க ஸ்டாலின் புன்னகையுடன் ரசித்துக் கேட்டார். அப்போது அவர் அருகில் அமர்ந்திருந்த அமைச்சர் கே என் நேரு, பொன்முடி, எம் ஆர் கே பன்னீர்செல்வம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பார்த்திபன் கவுதம சிகாமணி உள்ளிட்டோர் ஆச்சரித்தோடு பார்த்துக்கொண்டிருந்தனர்