• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

’சந்திக்க வேண்டிய தேவை இருக்கிறது'..முதல்வரை சந்திக்கும் பாமக அன்புமணி! ஓ இந்த விஷயத்துக்காகவா?

Google Oneindia Tamil News

சென்னை : முதலமைச்சரை சந்திக்க வேண்டிய தேவை இருக்கிறது. போதைப்பொருட்களை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அவரை மிக மிகப் பணிவாக கேட்டுக்கொள்கிறேன் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

பாமக இளைஞரணி தலைவரும் தற்போதைய மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ், மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது புகையிலை, மதுவை ஒழிப்பதில் தீவிரம் காட்டினார்.

இலங்கையில் 4 புதிய அமைச்சர்கள் நியமனம் - அதிபர் கோத்தபாய ராஜபக்சே அறிவிப்பு இலங்கையில் 4 புதிய அமைச்சர்கள் நியமனம் - அதிபர் கோத்தபாய ராஜபக்சே அறிவிப்பு

பொது இடங்களில் புகைபிடிக்க தடை, கடைகளில் புகையிலை பொருட்களை விற்பதற்கு கட்டுப்பாடு, சினிமா காட்சிகளில் எச்சரிக்கை வாசகங்கள் வைக்க உத்தரவு, திரை நட்சத்திரங்கள் மது, புகையிலை காட்சிகளில் நடிக்க வேண்டாமென நேரடியாக கோரிக்கை என ஏராளமானவற்றை கூறலாம்..

அன்புமணி ராமதாஸ்

அன்புமணி ராமதாஸ்


இந்நிலையில் போதைப்பொருட்களை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முதல்வரை மிக மிகப் பணிவாக கேட்டுக்கொள்கிறேன் என கூறியுள்ளார் அன்புமணி. இது தொடர்பாக பேசியுள்ள அவர், புகையிலைப் பொருட்களின் மீது அச்சுறுத்தக் கூடிய அளவிலான எச்சரிக்கை புகைப்படங்கள் என புகையிலைக்கு எதிராக மிகப்பெரிய நடவடிக்கைகளை மேற்கொண்டோம். அதனை சட்டமும் ஆக்கினோம். ' முதலமைச்சரை சந்தீப்பீர்களா? என கேட்கிறீர்கள், விரைவில் முதலமைச்சரை சந்திக்க வேண்டிய தேவை இருக்கிறது.

போதைப்பொருள் ஒழிப்பு

போதைப்பொருள் ஒழிப்பு

போதைப்பொருட்களை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அவரை மிக மிகப் பணிவாக கேட்டுக்கொள்கிறேன். இந்த பிரச்சனை மிகவும் முக்கியமான பிரச்சனை, அடுத்த தலைமுறையை நாம் காப்பாற்ற வேண்டிய பிரச்சனை. முதலமைச்சர், போதைப்பொருட்களை ஒழிக்க, தனியாக ஒரு நாள் ஒதுக்கி, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள், மூத்த அதிகாரிகள், அனைத்து கட்சி அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட அனைவரையும் அடக்கிய கூட்டத்தினை நடத்த வேண்டும். சாதாரணமாகப் புழக்கத்தில் இருந்து வரும் கஞ்சா, அபின், கொகைன் போன்ற பொருட்களை ஒழிப்பது எப்படி என்பதை ஒரு முழு நாள் கலந்தாய்வு கூட்டமாக நடத்தி ஒழிப்பதற்கான முடிவுகளை நாம் அடைய வேண்டும்.

கஞ்சா புழக்கம்

கஞ்சா புழக்கம்

மேலும் கஞ்சா போன்ற போதைப் பொருளானது சாதாரணமாக ஒவ்வொரு தெருக்களிலும், பள்ளி வாசல்களிலும், கல்லூரி வாசல்களிலும், 10, 12 வயது சிறுவர்கள் பயன்படுத்தும் வகையில் மிக எளிமையாக அனைவரும் கைகளிலும் கிடைத்துவிடுகிறது. மது போதையை தாண்டி தற்பொழுது போதைப்பொருட்களுக்கு அடிமையாகவும் ஒரு கூட்டம் இருந்து வருகிறது.இவ்வளவு எளிமையாக கிடைக்கும் போதைப்பொருட்களின் நடமாட்டம், காவல் துறையினருக்கு தெரியாமல் இருக்காது. காவல்துறையினர் நினைத்து இருந்தால் நிச்சயமாக இரண்டே நாட்களில், தமிழ்நாடு முழுவதும் இதனை ஒழித்துவிட முடியும்.

ஆப்ரேஷன் கஞ்சா நடவடிக்கை

ஆப்ரேஷன் கஞ்சா நடவடிக்கை

நான் செல்லும் இடம் எல்லாம், பெரியோர்கள் என்னிடம், 'தங்கள் வீட்டு பிள்ளைகளை வெளியில் அனுப்பவே பயமாக இருக்கிறது, மிகவும் மோசமான சூழல் நிலவுகிறது. எப்படியாவது போதைப்பொருட்களை தடுத்துவிட வேண்டும். இந்த பிரச்சனை இன்று நேற்றல்ல, பத்து பதினைந்து ஆண்டுகளாக இருந்து வந்த நிலையில், தற்போது உச்சத்தை எட்டியிருக்கிறது' என்கிறார்கள். ஆப்ரேஷன் கஞ்சா பற்றி பேசிய போது, சுமார் 4500 பேரை கைது செய்தார்கள். திரும்பவும் 4500 பேரை கைது செய்கிறார்கள். இந்த 4500 இல், 4000 பேர் முன்னர் கைது செய்ததில் விடுவிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள்.

முதல்வரை சந்திக்க தயார்

முதல்வரை சந்திக்க தயார்

அவர்கள் ஒரு வருடம் வெளியே வராதபடி குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைத்திருக்க வேண்டும். பத்து, பதினைந்து நாட்களில் திரும்பி வந்து, அதே இடத்தில் அவர்கள் தினமும் கஞ்சா விற்பனை செய்கிறார்கள்.முதலமைச்சர் எடுத்தால் மட்டுமே அடுத்த தலைமுறை இளைஞர்களை காப்பாற்ற முடியும். தமிழகத்தை மீட்க முடியும். ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை முதலமைச்சர் எடுப்பார், அவரை இது தொடர்பாக சந்திக்கவும் நான் தயாராக இருக்கிறேன்" என அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

English summary
There is a need to meet the Chief Minister. I humbly ask him to take steps to eradicate drugs, ”said Anbumani Ramadoss, a Pamaka youth leader.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X