சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ராமதாஸ் மக்களை ஏமாற்றி கட்சி நடத்துகிறார்.. பாமக துணைத்தலைவர் மணிகண்டன் கட்சியில் இருந்து விலகல்!

பாமகவின் மிக முக்கிய தலைவரான அக்கட்சியின் துணைத்தலைவர் மணிகண்டன் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்து இருக்கிறார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    PMK party Manikandan: பாமக துணைத்தலைவர் மணிகண்டன் கட்சியில் இருந்து விலகல்!

    சென்னை: பாமகவின் மிக முக்கிய தலைவரான அக்கட்சியின் துணைத்தலைவர் மணிகண்டன் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்து இருக்கிறார்.

    பாமக துணைத்தலைவர் மணிகண்டன் பாமகவினர் மத்தியில் பொங்கலூர் மணிகண்டன் என்று அழைக்கப்பட்டார். பாமகவில் காடுவெட்டி குருவிற்கு இணையான தலைவராக இவர் பார்க்கப்பட்டார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இவருக்கும் கட்சிக்கும் இடையில் சிறு சிறு மனஸ்தாபங்கள் இருந்து வந்தது.

    PMK party Deputy head Manikandan resigns from Party

    4 தொகுதி இடைத் தேர்தல்.. 2 திமுக வேட்பாளர்கள் இப்பவே ரெடி.. மிச்ச இரண்டில் நிற்க போவது யாரு!4 தொகுதி இடைத் தேர்தல்.. 2 திமுக வேட்பாளர்கள் இப்பவே ரெடி.. மிச்ச இரண்டில் நிற்க போவது யாரு!

    கடந்த பிப்ரவரி மாதமே இவர் பாமகவில் இருந்து நீக்கப்பட்டுவிட்டதாக செய்திகள் வெளியாகி, பின்பு மறுக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது பாமகவில் இருந்து விலகுவதாக மாநில துணைத்தலைவர் பொங்கலூர் இரா. மணிகண்டன் அறிவித்துள்ளார். அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.

    இதுகுறித்து பேட்டியளித்துள்ள அவர், பாமக மக்கள் பணத்தை ஏமாற்றிவிட்டது. வன்னியர்களிடம் வாங்கிய நிதியை ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் அபகரித்துவிட்டனர். அதிமுக - பாமக கூட்டணி பேரக்கூட்டணி . இந்த கூட்டணிக்கு பின் பெரிய அளவில் பணம் விளையாடி இருக்கிறது.

    திமுக - அதிமுகவுடன் கூட்டணி அமைக்க மாட்டோம் என்று சொல்லிவிட்டு அதிமுகவுடன் திடீரென கூட்டணி அமைத்தது அதிர்ச்சையை அளிக்கிறது. பாமக வெளியிடும் அறிக்கைகள் முதல் போராட்டங்கள் வரை அனைத்தின் பின்னணியிலும் பேரம் இருக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும்.

    ராமதாஸ் பேரம் நடத்திவிட்டுதான் போராட்டமே நடத்துவார் என்று கட்சியை விட்டு விலகிய மணிகண்டன் பரபரப்பு குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

    English summary
    PMK party Deputy head Manikandan resigns from Party after his fight with the Founder Ramadoss.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X