சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனா அச்சம், உச்சம்.. அரசு தேர்வுத்துறை பிடிவாதம் காட்டுவது முறையல்ல.. ராமதாஸ் பொளேர்

Google Oneindia Tamil News

சென்னை: 11, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்துவதில் அரசு தேர்வுத்துறை பிடிவாதம் காட்டுவது முறையல்ல என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுகுறித்து ராமதாஸ் வரிசையாக வெளியிட்ட ட்வீட்டுகளில் கூறியிருப்பதாவது: கொரோனா வைரஸ் அச்சம் உச்சத்தை அடைந்த பிறகும் 11, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்துவதில் அரசு தேர்வுத்துறை பிடிவாதம் காட்டுவது முறையல்ல. ஓரிரு தேர்வுகள் மட்டுமே மீதம் இருந்தாலும் கூட, அத்தேர்வுகளை அரசு ஒத்தி வைக்க வேண்டும்!

PMK Ramadoss bat for 12th exam postpone

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நாளையுடன் முடிக்கப்படும் என்று சட்டப்பேரவைத் தலைவர் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. பிற அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும். பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் பணிக்கு வரத்தேவையில்லை என்றும் அறிவிக்க வேண்டும்!

கொரோனா நோய்த் தொற்றை தடுக்க 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை பெற்ற கைதிகளை 6 வார பரோல் அல்லது ஜாமினில் விடுதலை செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் ஆணையிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. கைதிகளாக இருந்தாலும் அவர்களும் மனிதர்களே என்ற பார்வை உன்னதமானது!

கொரோனா நோயால் ஒருவர் கூட தமிழகத்தில் உயிரிழக்கக்கூடாது என்பது தான் தமிழக அரசின் விருப்பம் ஆகும்- முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி: உங்கள் நோக்கம் பாராட்டத்தக்கது தான். ஆனால், உடனடியாக 3 வார முழு அடைப்பை அறிவித்தால் மட்டுமே அந்த நோக்கம் நிறைவேறும். இவ்வாறு பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

English summary
Even after the coronavirus peak, the state stubbornness in conducting the 11th and 12th grade general elections is not fair, Even if only one choice remains, the government should postpone the exams, says PMK founder Ramadoss.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X