சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கலகலக்கும் பாமக.. அடுத்தடுத்து நிர்வாகிகள் விலகல்.. அமமுகவில் வந்து குவிகின்றனர்!

பாமக கொங்கு மாதவன் அமமுகவில் தன்னை இணைத்து கொண்டார்

Google Oneindia Tamil News

Recommended Video

    Operation PMK: அடுத்தடுத்து விழும் விக்கெட்டுகள்.. ஆபரேஷன் பாமக..டிடிவி தினகரன் வியூகம்!- வீடியோ

    சென்னை: தினகரன் ஒரு தீர்க்கமான முடிவில்தான் இருக்கிறார் போலும்.. அடுத்தடுத்து அவரது மூவ்களை கண்டு ஆட்டம் கண்டுவருகிறது அரசியல் களம்.. குறிப்பாக பாமக!

    அதிமுகவுடன் கூட்டணி வைத்ததில் இருந்தே ஏகப்பட்ட அதிருப்திகள் பாமகவுக்குள் நிலவி வருகிறது. ராஜேஸ்வரி பிரியா, நடிகர் ரஞ்சித், பொங்கலூர் மணிகண்டன் போன்றோர் பாமகவிலிருந்து விலகினார்கள்.

    அப்போது இவர்கள் சொன்ன காரணம், "அது எப்படி பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்? அன்புமணிக்கு மட்டுமே முன்னுரிமை தருகிறார்கள், காடுவெட்டி குரு குடும்பத்தை புறக்கணிக்கிறார்கள்" என்றெல்லாம் ஒவ்வொரு குற்றச்சாட்டாக சொல்லி வெளியேறினார்கள்.

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடல்.. வேதாந்தாவின் நிகர லாபம் 46 சதவீதம் சரிவு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடல்.. வேதாந்தாவின் நிகர லாபம் 46 சதவீதம் சரிவு

    வலுவான கட்சி

    வலுவான கட்சி

    கட்சியை விட்டு வெளியே வந்ததுடன், ரஞ்சித், பொங்கலூர் மணிகண்டன் அமமுகவிலும் இணைந்தனர். அப்போதே தினகரனின் இந்த அதிரடி மூவ் பெரிதாக பேசப்பட்டது. காரணம், தென் தமிழகம் குறிப்பாக மதுரை மண்டலத்தில் உள்ள தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, விருதுநகர் போன்ற மாவட்டங்களில் அமமுகவை தினகரன் வலுவான ஒன்றாக வளர்த்து வைத்துள்ளார்.

    தினகரன் கட்சி

    தினகரன் கட்சி

    ஆனால் வட மாவட்டங்களில் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு வேரூன்றவில்லை. இதனால்தான் பாமகவின் முக்கிய தலைவர்களை அமமுக குறி வைத்து அதன்படியே சாதித்து காட்டியது. இந்நிலையில் மேலும் ஒரு மாநிலத் துணைத் தலைவர், இரு மாவட்டச் செயலாளர்கள் பாமகவிலிருந்து விலகி தினகரன் கட்சியில் இணைந்துள்ளனர்.

    சூலூர் பிரச்சாரம்

    சூலூர் பிரச்சாரம்

    மாநில துணைத் தலைவர் காங்கயம் கி.மாதவன், மற்றும் மாவட்டச் செயலாளர்கள் இரா.கணேஷ், கொங்கு கிஷோர் ஆகியோர் கட்சி தாவி உள்ளனர். நேற்று சூலூரில் பிரச்சாரத்துக்கு தினகரன் வந்தபோது, அவரை சந்தித்து இவர்கள் தங்களை கட்சியில் இணைத்துக் கொண்டனர்.

    கட்சியின் சீனியர்

    கட்சியின் சீனியர்

    இதில் காங்கயம் மாதவன் கட்சி தாவியதுதான் கொஞ்சம் ஷாக்கான விஷயம். ஏனென்றால், இவர் அருந்ததியர் சமுதாயத்தை சேர்ந்தவர். ரொம்ப காலமாகவே அதாவது, 1989 முதல் பாமகவில் நிறைய பொறுப்புகளை வகித்து வந்தவர். 30 வருஷமாக கட்சியில் இருந்தவர் இப்படி திடீரென இந்த சமயத்தில் அங்கிருந்து விலகியது எதிர்பாராத ஒன்றுதான்.

    சமூக நீதி

    சமூக நீதி

    "பாமகவும் ராமதாஸும், அன்புமணியும் சமூக நீதி என்ற பெயரில் எங்களைப் போன்ற தலித் சமுதாய மக்களை ஏமாற்றியும், மற்ற சமுதாய மக்களைப் பிரித்து சாதி மோதலை உருவாக்கியும் வந்து இருப்பதை இப்போது தான் நாங்கள் அதை உணருகிறோம். அதனால்தான் விலகுகிறோம்" என்று விலகலுக்கு மாதவன் காரணம் சொல்லுகிறார்.

    கட்சி தாவல்

    கட்சி தாவல்

    இன்னும் மே 23ம் தேதிக்குப் பிறகு தேர்தல் முடிவுகளைப் பொறுத்து மிகப் பெரிய அளவில் கட்சி தாவல்கள் இருக்கும் என்று இப்போதே பரபரப்பாக பேசப்படுகிறது.

    English summary
    PMK Senior Leader Kongu Madhavan joined in TTV Dinakaran Party
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X