சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வன்னியருக்கு 10.5% இட ஒதுக்கீடு.. ராமதாசை கொண்டாடும் பாமக.. இணைய வழியில் பாராட்டு விழா.. செம ஏற்பாடு

Google Oneindia Tamil News

சென்னை: வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.5% இட ஒதுக்கீட்டைப் பெற்றுத் தந்ததில் முக்கிய பங்காற்றிய பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு, அந்த கட்சி சார்பில் பாராட்டு விழா நடைபெறுகிறது.

தகவல் தொழில்நுட்ப பிரிவு மூலமாக இணையவழியில் இந்த பாராட்டு விழாவுக்கு இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

தேசியக் கட்சிகள் மற்றும் மாநிலத்தில் பிரதானமாக இருக்கும் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் இணையாக சமூக இணையதள வெளியில் பாமக ஐடி விங் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வரும் சூப்பர் வசதி.. டெஸ்ட் எடுத்த 13 நிமிடங்களில் கொரோனா ரிசல்ட்சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வரும் சூப்பர் வசதி.. டெஸ்ட் எடுத்த 13 நிமிடங்களில் கொரோனா ரிசல்ட்

தகவல் தொழில்நுட்பம்

தகவல் தொழில்நுட்பம்


அதன் மற்றொரு முக்கியமான நிகழ்வாக இணைய வழியில் நடைபெறும் இந்த பாராட்டு விழா பார்க்கப்படுகிறது. தகவல் தொழில் நுட்பத்தில் திராவிட கட்சிகளுக்கு இணையாக சுறுசுறுப்பாக இயங்கி கொண்டிருக்கிறது பாட்டாளி மக்கள் கட்சி. இணைய வழி கருத்தரங்கம், கட்சியின் கூட்டம் என இவர்களின் தினசரி நடவடிக்கைகள் தூள் கிளப்புகின்றன.

ஐடி விங்கிற்கு முழு சுதந்திரம்

ஐடி விங்கிற்கு முழு சுதந்திரம்

பாமகவின் ஐ.டி.விங்கிற்கு முழு சுதந்திரம் தந்து இயக்கி வருகிறார் டாக்டர் அன்புமணி. இந்த நிலையில், இன்று மாலை 5 மணிக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு, மிகப் பெரிய பாராட்டு விழாவை பாமக, , வன்னியர் சங்கம், சமுக முன்னேற்ற சங்கம் ஆகியவைகள் இணைந்து நடத்துகின்றன.

 கல்வி, வேலை வாய்ப்பு

கல்வி, வேலை வாய்ப்பு

கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர் சமூகத்திற்கான 10.50 சதவீத உள் இடஒதுக்கீடு பெற்றுத் தந்தமைக்காக இந்த பாராட்டு விழாவை நடத்துகிறார்கள். இணைய வழியில் நடத்தப்படும் இந்த பாராட்டு விழாவை சிறப்பாக நடத்த வேண்டும் என ஐ.டி.விங்கிற்கு உத்தரவிட்டுள்ளார் டாக்டர் அன்புமனி.

சந்தேகங்கள் இருந்தன

சந்தேகங்கள் இருந்தன

சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பு கடைசி நேரத்தில் இந்த உள் இடஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்றினார் முதல்வராக இருந்த எடப்பாடி. அந்த சட்டம், திமுக ஆட்சியில் நடைமுறைக்கு வருமா? என்ற சந்தேகங்கள் வன்னியர் சமூகத்தினரிடமும் பாமகவிலும் இருந்தது.

அரசாணை வெளியிட்ட ஸ்டாலின்

அரசாணை வெளியிட்ட ஸ்டாலின்

இது குறித்து அறிக்கை வெளியிட்ட ராமதாஸ், நடப்பு கல்வி ஆண்டிலேயே இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்திருந்தார். இதனையடுத்து, மறுநாளே, அந்த சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அரசாணையை பிறபிக்க உத்தரவிட்டார் ஸ்டாலின். இந்த நிலையில், இட ஒதுக்கீட்டை பெற்றுத் தந்த டாக்டர் ராமதாசுக்கு பாராட்டு விழாவை இணைய வழியில் நடத்துகிறார்கள்.

பலருக்கும் சந்தேகம்

பலருக்கும் சந்தேகம்

எடப்பாடி பழனிசாமி தேர்தல் நேரத்தில் இந்த உத்தரவை கொண்டு வந்ததால் திமுக அரசு அதை செயல்படுத்துமா, இதற்கு அதிமுக தொடர்ந்து ஆதரவளிக்குமா என்றெல்லாம் பலரும் சந்தேகங்கள் எழுப்பினர். ஆனால், வன்னியர்கள், சீர் மரபினர், இதர மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு அரசு வேலைகளிலும், கல்வி சேர்க்கையிலும் சிறப்பு ஒதுக்கீடு வழங்கும் அரசாணையைத் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இதனால் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளார் டாக்டர் ராமதாஸ்.

 ராமதாஸ் பாராட்டு ட்வீட்

ராமதாஸ் பாராட்டு ட்வீட்

இது குறித்து சமீபத்தில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர் 10.50% இட ஒதுக்கீட்டை 26.02.2021 முதல் நடைமுறைப்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று ஆணையிட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. முதலமைச்சருக்கு உளமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்! தொழிற்கல்வி மாணவர் சேர்க்கை அறிவிக்கை ஏற்கனவே வெளியிடப்பட்டு விட்டாலும், அதிலும் 10.50% இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பது மனநிறைவளிக்கிறது. பணி நியமனங்களிலும் இந்த ஒதுக்கீடு நடைமுறையாகி விட்டது. கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 10.50% நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதால் மிக மிக பின் தங்கிய நிலையில் உள்ள வன்னிய மக்களின் நிலைமை படிப்படியாக மேம்படும். வன்னியர்களின் கல்வி - வேலைவாய்ப்புகள் மேம்பட வழிவகுக்கும் இந்த சட்டத்தை இயற்றிக் கொடுத்த முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோருக்கும் நன்றிகள்" என அவர் பதிவிட்டிருந்தார்.

ஸ்டாலினுக்கு தொலைபேசியில் வாழ்த்து

ஸ்டாலினுக்கு தொலைபேசியில் வாழ்த்து

அத்தோடு விடவில்லை.. முதல்வர் முக ஸ்டாலினுக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கியதற்காக நன்றி தெரிவித்தார் ராமதாஸ். தற்போதைய தமிழக அரசியல் சூழ்நிலையில் வயது முதிர்ந்த அரசியல் தலைவர் ராமதாஸ்தான். அவரே நேரடியாக முதல்வருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்துள்ளது முக்கியமாக பார்க்கப்படுகிறது. அதுவும் எதிர்த்தரப்பான, அதிமுக கூட்டணியில் பாமக இருக்கும் நிலையில் இப்படி நன்றி தெரிவித்துள்ளார் ராமதாஸ். வன்னியர் இட ஒதுக்கீடு தொடர்பாக தொடர்ந்து அறிக்கைகள், போராட்டங்கள் என்று பல முன்னெடுப்புக்களை நடத்தியவர் ராமதாஸ். எனவே, இந்த விவகாரத்தில் அவருக்கு உரிய கவுரவம் கிடைக்க வேண்டும் என்று பாமக நினைக்கிறது. அதையொட்டி தான், இன்று இணையவழியில் பாராட்டு விழா கூட்டம் நடைபெறுகிறது. இதற்கு பாமக ஐடி விங் சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளது.

 மாநாடு திட்டம்

மாநாடு திட்டம்

இது குறித்து அறிக்கை வெளியிட்ட ராமதாஸ், நடப்பு கல்வி ஆண்டிலேயே இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்திருந்தார். இதனையடுத்து, மறுநாளே, அந்த சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அரசாணையை பிறப்பிக்க உத்தரவிட்டார் ஸ்டாலின். இந்த நிலையில், இட ஒதுக்கீட்டை பெற்றுத் தந்த டாக்டர் ராமதாசுக்கு பாராட்டு விழாவை இணைய வழியில் நடத்துகிறார்கள்.

English summary
A felicitate program is being held on behalf of the PMK party for Dr. Ramadoss, the founder of PMK, who played a key role in securing 10.5% reservation in education and employment for the Vanniyar caste.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X